மிகவும் சிரமமான கேள்வி !
பகுத்தறிவுவாதி : கடவுள் எத்தனை உண்டு ?
ஆத்திகன் : ஒரே கடவுள் தான் உண்டு.
பகுத்தறிவுவாதி : இவ்வளவு மதங்களும் யாருக்காக உருவாக்கப்பட்டது ?
ஆத்திகன் : மனித வர்க்கத்திற்காகத்தான்.
பகுத்தறிவுவாதி : மதத்தால் ஏற்படும் பயன் என்ன ?
ஆத்திகன் : மனிதன் கடவுளை அறியவும், கடவுளுக்கும் தனக்கும் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும், கடவுள் கருணைக்குப் பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.
பகுத்தறிவுவாதி : அப்படியானால் ஒரே கடவுள் ஒரே மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன் ?
ஆத்திகன் : இது மிகவும் சிரமமான கேள்வியாக இருக்கிறது. பெரியவர்களைக் கண்டு பேசிய பிறகு பதில் சொல்லுகிறேன்.
– பகுத்தறிவு -1938
(‘சித்திரபுத்திரன்’ என்ற புனைப்பெயரில் பெரியாரால் எழுதப்பட்ட நீண்ட உரையாடலின் சிறு பகுதி)
பெரியார் முழக்கம் 23122021 இதழ்