தமிழ்நாட்டில் தமிழ் தெரிந்தவர்களுக்கே வேலை!
தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மலையாளிகளையும், கன்னடியர் (மங்களூர்காரர்)களையும் தமிழ் நாட்டிலே மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லாத் தலைமை உத்தியோகம், மற்றும் கெஜட் பதிவு அதிகாரிகள் கமிஷ்னர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வசாதாரணமான காரியமாக இருந்து வருகிறது. ஜனநாயக நாடு, சுதந்திர நாடு, மக்களாட்சி நடைபெறுகிற நாடு என்ற அலங்காரப் பெயர்களைச் சொல்லிக் கொண்டு நடைபெறுகிற ஆட்சியில் 100 க்கு 80 பேர்களுக்கு மேற்பட்டுக் கல்வியறிவில்லாத பாமர மக்கள் நிறைந்திருக்கும் நாடு என்பதை உணராமல், மேற்கண்ட மாதிரியான நாட்டு மொழித் தெரியாத அன்னிய மொழியாளர்களை அதிகாரிகளாக நியமிப்பதென்றால் குடிமக்கள் அதிகாரிகளிடம் எப்படி பேச முடியும் ? அதிகாரிகளுக்குக் குடிமக்கள் எந்த மொழியில் விண்ணப்பங்களையும் வேண்டு கோள்களையும் எழுத முடியும் ?
‘விடுதலை’ 22.4.1955
பெரியார் முழக்கம் 16122021 இதழ்