மகாஜன நேசன்
கோயமுத்தூரிலிருந்து வெளியாகும் ‘மகாஜன நேசன்’ என்னும் ஒரு சகோதரப் பத்திரிகை “கோயமுத்தூர் ஜில்லா தேர்தலும் கவுண்டரும்” என்கிற தலையங்கத்தின் கீழ் ஒரு வியாசத்தை பிரசுரித்துவிட்டு அதன் கீழ் பத்திராதிபர் குறிப்பாய், “இவ்வியாசத்தை பிரசுரம் செய்ததின் நோக்கம் யாதெனில் ‘குடி அரசு’ப் பத்திரிகையின் மேல் ஜனங்களுக்கு இருக்கும் அதிருப்தியைப் போக்கி உண்மைத் தொண்டு புரியும்படி தூண்டுதற்பொ ருட்டே வியாசத்தைச் சற்று அப்பத்திரிகையை உயர்த்திப் பேச இடமளித் தோம்” என்று எழுதி ஆசிரியர் என்று கையொப்பமிட்டிருக்கிறார். இதில் இவ்விதம் குறிப்பு எழுதியது அப்பத்திரிகை நடந்து கொள்ள வேண்டிய தன்மைக்கு மீறினதென்றும் ‘குடி அரசி’ன் மீது பொதுஜனங் களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்குமானால் அதைப் போக்குவதற்கும் ‘குடிஅரசு’ உண்மைத் தொண்டு செய்யாமலிருந்தால் அதைச் செய்யும்படி செய்வதற்கும் ‘மகாஜன நேசன்’ அணுக வேண்டிய வழி இது வல்லவென்றும் ‘நேசனுக்கும்’ அழுந்திக் கிடந்த பொறாமை இது ஒரு சந்தர்ப்ப மாய்‘நேசனை’ அறியாமலே நேர்ந்து விட்டதென்று மாத்திரம் இதுசமயம் தெரிவித்துக் கொள்ளுகிறோம்....