தமிழ்நாட்டுத் தலைவர்கள்

காஞ்சீபுரம் மஹாநாட்டில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு நல்ல பிள்ளையாவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்று சொல்லப்படும் ஸ்ரீமான்கள் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்களும் டாக்டர் வரத ராஜுலு நாயுடு அவர்களும் போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள் என்று நாம் அப்போது எழுதியிருந்தோம். பிறகு எப்படியோ நாட்டின் நல்ல காலத்தின் பலனாய் இவ்விருவர்களும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை பிரிந்த தல்லாமல், அவர் தலைமை வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலும் தாங்கள் இருப்பது சரியல்ல என்று கருதி ஏதோ சாக்கைச் சொல்லிக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். இவ்விரு கனவான்களும் தைரியமாய் வெளி வந்த காரணம் மறுபடியும் தங்களில் யாரும் ஸ்ரீமான் அய்யங்காருடன் போய் சேர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க நினைக்க மாட்டார்கள் என்கிற பரஸ்பர நம்பிக்கைதான் அய்யங்காரின் “பூளவாக் கையும்”, “அரசியல் யோக்கியதையும்” தைரியமாய் வெளியிட இடம் கொடுத்தது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதற்கு உதாரணம், ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தனது பத்திரிகையில் “உரிமையில்லா நாட்டில் அரசியல் கட்சிகள் வளர்ப்பது நாட்டைக் குழியில் வீழ்த்துவதாக முடியும்” என்றும் “தற்கால கல்வியுடையோர் என்று சொல்லப்படுவோர் சாதி வேற்றுமைகளைக் கிளப்பி விடுவதில் கண்ணுங் கருத்துமாயிருக் கிறார்கள்” என்றும் எழுதியிருப்பதே போதுமானது . இதன் பொருள் என்ன? நமது நாட்டில் அரசியல் கட்சிகள் என்பது காங்கிரஸ் முதலிய கட்சி கள்தான். இதுகளை வளர்ப்பது நாட்டை படுகுழியில் வீழ்த்துமென்றால் காங்கிரசை வளர விட்டால் நாடு நாசமடையும் என்பதுதானே பொருள். ஆதலால் காங்கிரசை ஒழிக்க வேண்டியது ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார் போன்றவர் களின் கடமை என்பதில் சந்தேகமில்லை. தற்காலக் கல்வி யுடையோர் ஜாதி வேற்றுமையை வளர்த்துகிறார்கள் என்றால் தற்கால கல்வி என்பது ஆங்கிலம் என்பதையும் அதைப் படித்தவர்கள் என்பது நமது நாட்டில் பெரும் பாலும் பார்ப்பனர்கள்தான் என்பதையும் ஒருவரும் ஆnக்ஷபிக்க மாட்டார் கள். இன்னமும் எவ்வளவோ விளக்கமாய் தற்கால அரசியல் நிலைமையைப் பற்றியும் பார்ப்பனர் சூழ்ச்சியைப் பற்றியும் எழுதியும் பேசியும் வந்த ஸ்ரீமான் முதலியார் அவர்களுக்கு இப்போது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஸ்ரீமான்கள் ராமசாமி நாயக்கரையும் ஆரியா வையும் ஜெயிலில் வைக்க வேண்டுமென்று சொன்ன பிறகும் ஸ்ரீமான்கள் நாயக்கர், நாயுடு,சக்கரை, ஆரியா முதலிய வர்கள் காங்கிரசை விட்டுப் போய் விட்டதினால் காங்கிரஸ் பரிசுத்தமாய்ப் போய் விட்டது என்று சொன்ன பிறகும் நாட்டைக் கெடுக்கும் அரசியலும் படித்த வகுப்பாராகிய அய்யங் காரும் முறையே உத்தமமானதும் பரிசுத்த மானது மாகப் போய் இரட்டை ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்ற பழைய பல்லவியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வகுப்பு வேற்றுமையை வளர்க் கிறது என்கிற பல்லவியும் பாட ஆரம்பித்து விட்டார். இதோடு நில்லாமல் “அய்யங்காரின் அட்ட காசம்” என்கிற தலைப்பின் கீழ் “தமிழ்நாடு” அய்யங்காரின் நடத்தையைக் கண்டித்த பின்பு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்கள் அய்யங்காருடன் கொஞ்சிக் குலாவ வேண்டிய அவசியமும், அய்யங்காருக்கு வரப்போகும் தேர்தலில் தொழிலாளர்கள் ஓட்டு வாங்கிக் கொடுக்க வேண்டிய அவசிய மும் வந்து விட்டது என்றால் இதைப்பற்றி நாம் என்ன சொல்வது. ஸ்ரீமான் அய்யங்காருக்கு நமது தொழிலாளரை அறிமுகம் செய்து வைத்து அய்யங்கார் தொழிலாளருக்கு பாடுபடுவார் என்று சொல்லி தொழிலாளரின் ஓட்டுகளை அய்யங்காருக்கு வாங்கிக் கொடுத்து ஸ்ரீமான் சக்கரை செட்டியாரை தோற்கடிக்க வைப்பதில் ஸ்ரீமான் முதலியாருக்கு வரும் லாபமென்ன? என்றுதான் நாம் கேட்கிறோம். இதன் ரகசியம் நமக்கு விளங்க வில்லை. அதுவும் அல்லாமல் தன்னுடைய நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஸ்ரீமான் நாயுடுகார் அய்யங்காருடன் யுத்தம் ஆரம்பித்திருக் கும் போதும் நாயக்கரை ஜெயிலில் வைக்க அய்யங்கார் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் அய்யங்கார் பின்னால் திரிவதென்றால் எவ்வளவு பொறுமை யுள்ளவனுக்கும் மனம் பதருமா இல்லையா? இது வெண்ணெய் திரண்டு வரும்போது சட்டியை உடைப்பது போலில்லையா? இதை எழுதும் போது நமக்கு மிகுதியும் சங்கடமாகத்தான் இருந்தது. என்ன செய்யலாம்? ஸ்ரீமான் முதலியாரது இம்மாதிரி எழுத்தும் பேச்சும் செய்கையும் நமது பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் வென்று விட்டதற்கு ஸ்ரீமான் முதலியார் அவர்களை நம்மை மன்னிக்கும்படி வேண்டுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 26.09.1926

You may also like...

Leave a Reply