தமிழ்ப்பொழில் அன்பர்கட்கு வேண்டுகோள்

தஞ்சாவூர் “கரந்தை தமிழ்ச்சங்க”த்தினின்றும் “தமிழ்ப் பொழில்” என்னும் பெயரிய ஒரு திங்கள் வெளியீடு தமிழறிஞர் திருவாளர் ஆர்.வேங்க டாசலம் பிள்ளையவர்களை ஆசிரியராகக் கொண்டு ஓராண்டு வெளிப் போந்து நற்பயன் அளித்தமை நேயர்களுணர்ந்திருக்கலாம் என்றும் இடைய றாது உரிய காலங்களில் வெளிவரற்குறிய சில முன் ஏற்பாடுகள் செய்தற் பொருட்டுப் ‘பொழில்’ சிறிது காலந்தாழ்ந்து வெளிவரும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர்க்குள்ள அலுவல் மிகுதியால் சிறிய காலஅளவு கொஞ்சம் பெரிதாக நீண்டது. முன் ஏற்பாடுகள் முன்னரே செய்யப்பட்டிருக் கின்றன. நிற்க, ‘தமிழ்ப் பொழிலி’ன் முன்னேற்றங் கருதி உழைக்க ஆங்கில மும் தமிழும் கற்று வல்ல அறிஞராகிய திருவாளர்கள் நீ.கந்தசாமி பிள்ளை யவர்கள், எம். ஆர்.ஏ.எஸ்., அரசர்மடம் பள்ளிக்கூட தமிழாசிரியர் சாமி சிதம்பர உடையாரவர்கள் ஆகிய இருவரும் முன் வந்துள்ளார்கள். இவருள் முன்னவர் உதவி ஆசிரியர், பின்னவர் உடனின்று துணை செய்தலேயன்றி வெளியிடங் கட்குச் சென்று பொழிற்கு அன்பர்களைத் திரட்டும் உதவியாளர் ஆவார். திருவாளர் உடையாரவர்கள் தாம் எய்தி வந்த ஊதியத்தினையும் விட்டு விட்டுத் (தமது சுருங்கிய செலவுகளை மட்டும் பெற்றுக்கொண்டு) தொண்டு செய்ய முன்வந்திருப்பது மிகப் பாராட்டற்பாலது. செந்தமிழ்ச் செல்வர்கள், ஊதியம் கருதாது தமிழ்த் தொண்டொன்றே கருதித் தனித் தீந்தமிழில் வெளிவரும் பொழிலைப் புரந்து தமிழ்த்தாயைப் போற்றி வருமாறு வேண்டுகிறோம்.
( ப – ர் )

குடி அரசு – வேண்டுகோள் – 24.10.1926

You may also like...

Leave a Reply