கோயமுத்தூர் ஜில்லா தேர்தல்

கோயமுத்தூர் ஜில்லாவின் சார்பாக சென்னை சட்டசபைக்குப் பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்கள் மூன்று பேரும் பார்ப்பன அபேக்ஷகர் ஒருவரும் ஆக நான்கு அபேக்ஷகர்கள் நிற்கிறார்கள். இந்நான்கு கனவான் களும் பெயருக்கு மாத்திரம் தனித்தனிக் கக்ஷியைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொண்டாலும் தத்துவத்தில் பார்ப்பனரல்லாத கக்ஷிக்கு மூன்று பேரும், பார்ப் பனக் கக்ஷிக்கு ஒருவருமாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, ஸ்ரீமான் அய்யங்கார் தேவஸ்தான மசோதாவையும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தையும் எதிர்ப்பதினாலும், ஸ்ரீமான் செட்டியார் முதலா னவர்கள் இவ் விரண்டையும் மனப்பூர்வமாய் ஆதரிப்பதினாலும் தெரிந்து கொள்ளலாம். நாம் இதற்கு முன் பல தடவைகளில் எழுதி வந்தது போலவே சட்டசபைகள் மூலம் குடிமக்களுக்கு எவ்வித அரசியல் நன்மையும் செய்ய முடியவே முடியாது என்பதை இப்பொழுதும் சொல்லுகிறோம். ஆனால் வேளாள குடிமக்கள் இந்நாட்டில் உள்ள மற்ற எல்லா மக்களைவிட உயர்ந்த தன்மை உடையவர்களாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கி விவ காரம் முதலியவைகளால் குடி கெடுவதையும் வைதீகச் சடங்குகளால் தாழ்த்தப்பட்டு அடிமைகளாவதிலிருந்தும் தப்புவிக்க உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லுவோம். ஆனால் பல காரியங்கள் செய்திருப் பதாய் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் போன்ற பல பார்ப்பனர்கள் பத்திரிகைகள் மூலமும் விளம்பரங்கள் மூலமும் பறையடிப்பதெல்லாம் குடியான மக்களை ஏமாற்றச் செய்யும் வெறும் மோசடியே தவிர வேறில்லை. அதுபோலவே அதைப் பார்த்து பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்களும் குடியானவர்களை ஏமாற்ற பார்ப்பனர்களைப் பின்பற்றி பொய் விளம்பரம் செய்ய வேண்டி ஏற்படுகிறது. உண்மையில் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய் யங்கார் போன்றவர்கள் வெளிப்படுத்தி இருக்கும் வேலைகளின் இரகசியங் களை அறிந்தால் அது ஸ்ரீமான் அய்யங்காரால் நடந்ததா? அல்லது ஸ்ரீமான் கள் டி.எ.இராமலிங்கம் செட்டியார், சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் போன்றவர்களின் பிரயத்தனத்தால் நடந்ததா என்பது நன்றாய் விளங்கும். ஸ்ரீமான் அய்யங்கார் விளம்பரம் செய்து கொள்வதில் அதிக ஆசை உள்ள வராகவும் அதைப்பற்றி பிரத்தியார் தன்னை எவ்வளவு கேவலமாகப் பேசினாலும் அதைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் எப்படியாவது சட்ட சபைக்குப் போனால் போதும் என்கிற கவலை உள்ளவருமானதால் எவ்வளவு தூரம் குடியானவர்களை ஏய்க்கலாமோ அவ்வளவு தூரம் விளம்பரப்படுத்திக் கொள்ளுகிறார். ஸ்ரீமான்கள் செட்டியாரும், முதலியாரும் தங்களைப் புத்தி சாலிகள் கேவலமாய் நினைப்பார்களே என்று பயப்படுவதாலும் தற்புகழ்ச்சி செய்து கொள்ள வெட்கப்படு வதாலும் அவர்களின் உண்மையான பெருமை களும் செய்த வேலைகளும் கூட வெளியாருக்குத் தெரிவதற்கிடமில்லாமல் இருக்கிறது. ஸ்ரீமான் வேணாவுடையாக் கவுண்டர் அவர்களுக்கு இதில் அநு போகமில்லாததாலும் அவரும் விளம்பரம் செய்து கொள்ள வெட்கப் படுவதாலும் அவரது நிலைமையும் சரிவர ஓட்டர்கள் உணர்வதற்கில்லாமல் இருக்கிறது. ஆதலால் பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் வெறும் விளம்பரங்க ளைக் கண்டு ஏமாறாமல் பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்களையே ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். குறிப்பாய் இச்சில்லா வேளா ளக் கவுண்டர் கனவான்கள் எவ்வளவுக்கெவ்வளவு தங்களுடைய ஓட்டுக ளைப் பார்ப்பன அபேக்ஷகருக்குக் கொடுக்கிறார்களோ அவ்வளவுக்கவ் வளவு தங்கள் வகுப்புத் தலைவராகிய ஸ்ரீமான் பட்டக்காரர் வேணாவுடை யாக் கவுண்டர் அவர்கள் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்படுவதைக் கண்டிப்பாய் தடைப்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – கட்டுரை – 17.10.1926

You may also like...

Leave a Reply