தேர்தல் படிப்பினை

இவ்வாரம் சென்னையில் நடந்த முனிசிபல் தேர்தல்களில் பார்ப்பனர் கட்சிக்கு இரண்டு ஸ்தானங்களும், பார்ப்பனரல்லாத கக்ஷிக்கு ஒரு ஸ்தான மும், இரண்டு கட்சிக்கும் பொதுவான கக்ஷி என்கிற சுயேச்சைக் கட்சி என்பா ருக்கு ஒரு ஸ்தானமும் கிடைத்திருக்கிறது. பொதுப்படக் கூறும்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு சென்ற மாத தேர்தலில் ஜயம் கிடைத்தது போல் பூரண ஜயம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இப் பூரண ஜயம் பெறாததற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சியாரின் அளவுக்கு மீறின நம்பிக்கையே அல்லாமல் பார்ப்பனக் கட்சியின் சாமர்த்தியமும் செல்வாக்கும் அல்லவே அல்ல. அம்மன் கோவில் வார்டில் ஜயம் பெற்ற சுயேச்சைக் கட்சி என்று சொல்லிக் கொண்டவராகிய டாக்டர் ஆசீர்வாத நாடார், தான் பார்ப்பனரல் லாதார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்றும் பார்ப்பனக் கட்சி யாகிய சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவன் அல்ல வென்றும் தன்னையே ஜஸ்டிஸ் கட்சி அபேக்ஷகராய் நிறுத்தும்படியும் எவ்வளவோ தூரம் கேட்டுக் கொண்டும் ஜஸ்டிஸ் கட்சியார் கவனியாமல் ஒரே கட்சிக்கு இருவரை நிறுத்தியது போல் நடந்து கொண்டது ஒரு பிசகு என்றே சொல்லுவோம். அல்லாமலும் ஸ்ரீமான் ஆசீர்வாத நாடார் ஒரு சமயம் ஏதாவது ஒரு விஷயத் தில் ஜஸ்டிஸ் கட்சி அபிப்பிராயத்தில் மாறுபட்டாலும் எந்த விதத்திலும் பார்ப்பனர் கட்சியில் சேரவோ அவர்கள் கைப்பிள்ளையாய் இருக்கவோ ஒருக்காலும் உடன் படமாட்டார் என்பது உறுதி . ஆதலால் டாக்டர் நாடார் வெற்றி எவ்விதத்திலும் பார்ப்பனர் கட்சிக்கு அனுகூலம் இல்லையென்றே சொல்லுவோம். நிற்க, ஆர்பர் டிவிஷனில் பார்ப்பனர் கட்சிக்கு போட்டியாய் இரண்டு நபர்களை நிறுத்தியதும் ஜஸ்டிஸ் கட்சியாரின் யோசனை குறைவென்றே சொல்லுவோம். பார்ப்பனருக்கு எதிராக 200 பேருக்கு மேல் ஓட்டுச்செய்தும் அது பாகமாய்ப் பிரிந்ததால் 138 ஓட்டுகள் மாத்திரம் கிடைக் கப்பட்ட பார்ப்பனர் கட்சி ஆசாமிக்கு வெற்றி கிடைக்க இடமேற்பட்டு விட் டது. இதுபோல்தான் இந்தியா சட்டசபைக்கு சென்ற தேர்தலில் இரண்டு பார்ப்பனரல்லாதார் நின்றதால் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாருக்கு சுலபமாய் வெற்றிகிடைக்க இடமேற்பட்டது. இது தெரிந்திருந்தும் இம்மாதிரி செய்த தாலும் பார்ப்பனக் கட்சியின் ஆட்சியை சரியானபடி அந்த வார்டில் ஓட்டர் களுக்கு எடுத்துச் சொல்லாததாலும் பார்ப்பனர் தங்களுக்கு வெற்றி என்று சொல்லிக் கொள்ள இடமேற்பட்டு விட்டது. திருவல்லிக்கேணி வார்டில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு வெற்றி ஏற்பட்டதில் நமக்கு அதிசயம் ஒன்றும் இல்லை. ஏனெனில் ஆயிரத்துச் சில்லரை ஓட்டர்களில் 800த்துச் சில்லரை ஓட்டர்கள் பார்ப்பன ஓட்டர்கள். அந்த வார்டில் ஒரு பூணூல் போட்ட மரக்கட்டையை நிறுத்தி விட்டாலும் அதற்கெதிரி டையாய் மகாத்மா காந்தி வந்து நின்றாலும் ஒரு பார்ப்பன ஓட்டுக்கூட கிடைக்காது. ஆதலால் அந்த வார்டுக்கு ஜஸ்டிஸ் கட்சிக்காரர் அபேக்ஷகரை நிறுத்தாமல் இருந்தது புத்திசாலித்தனமென்றே சொல்லுவோம். அமீர் மகால் வார்டில் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீமான் ரங்க ராமானுஜத்திற்கு வெற்றி கிடைத் திருக்கிறது. மொத்தத்தில் ஐந்து ஸ்தானங்களில் பார்ப்பனர் கட்சிக்கு இரண்டு ஸ்தானம் கிடைத்து விட்டது. இதை யோசிக்கும் போது நமது நாட்டில் இன்னமும் எந்த விதத்திலேயோ பார்ப்பனர் சூழ்ச்சிக்கு இடமிருக்கிற தென்றே சொல்லியாக வேண்டும். ராயப் பேட்டை டிவிஷன் தேர்தல் சட்ட சம்பந்தமான ஆnக்ஷபணையினால் ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றியேற்பட்டால் அதை நாம் வெற்றியாகக் கருதக் கூடாது. அந்த விஷயம் கோர்ட்டு மூலம் மறுபடியும் தேர்தலுக்கு வந்து பொது ஜனங்களிடையும் ஓட்டர்களிடையும் பார்ப்பன ஆட்சியை நன்றாய் எடுத்துச் சொல்ல சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமென்றே கோருகிறோம். இந்த ஒரு விஷயத்தை முக்கியமாய் உத்தேசித்தேதான் நாமும் தேர்தல் பிரசங்கங்களில் கலந்து கொள்ள ஆசைப் படுகிறோம். எப்படியாவது பார்ப்பன சூட்சியை வெட்டிப் புதைக்கிற வரை யில் நமக்கு எத்தினை தோல்வி வந்தாலும்கூட நாம் அதைப்பற்றி மனம் தளரக் கூடாது. உலகம் இன்றோடு முடிவடைந்துவிடப் போகிறதில்லை. ஆத லால் பந்து அடிக்க உயரமாய்க் கிளம்புவது போல் அளவுக்கு மிஞ்சின நம்பிக்கையில் இருந்தும் மமதையில் இருந்தும் தட்டி எழுப்ப இம்மாதிரி சிறு சம்பவங்களை மனப்பூர்வமாய் வரவேற்கிறோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 05.09.1926

You may also like...

Leave a Reply