ஜேஷ்டபுத்திரனும் தேசபக்தனும்

சென்ற ஜுலை µ 25, 26 நாட்களில் இக்கொழும்பில் நடந்தேறிய இந்திய வாலிபர் சங்க ஆண்டுவிழாவிற்கு தலைமை வகிக்க திருவுளங் கொண்டு இனனாடடைந்து அறிய உயறிய சொற்பொழிவுகள் சில நிகழ்த்தி தாய்நாடு போந்த உண்மை தேசபக்தரும் நம் தமிழணங்கின் திருக்குமாரருமாகிய உயர்திரு. கலியாணசுந்தர முதலியாரவர்கள் இவ்வூ ரையடைந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தி பிரவூர் சென்றதைப்பற்றி இக்கொழும்பு மாநகரில் கௌரவ நடேசையரவர்களால் பிராமண ரல்லாதாரின் உதவியாலும் முயர்ச்சியாலும் நடத்தப்படுகிற தேசபக்த னென்னும் தமிழ்ப்பத்திரிகையை தற்பொழுது பி.பி. அய்யங்கார் என்பவ ரால் நடத்தப்படுகிறதாம். இப் பக்தனுக்கும் முதலியாருக்கும் என்ன வருத்தம்? இப்பத்திரிகைக்கு எவ்விதத்திலாவது ஏதாவது உதவியோ சந்தா அல்லது விளம்பரம் சேர்த்துக்கொடுத்தோர்களும், காங்கிரஸ் காரர்களும் போலி தேசாபிமானிகளும் பொதுக்காரியங்களுக்கென்று பணம் திரட்ட வருவோரும், பணக்காரர், செட்டிகள், பிராமணர்கள் முதலிய வர்களில் எவராவது இந்நாட்டிற்கு வருவதாகயிருந்தால் உடனே போற்றிப் புகழ்ந்து “நல்வரவாகுக” என்றும் தாய்நாடு செல்வதாகயிருந்தால் சென்று வருகவென்றும் பத்தி பத்தியாக அவர்களை சிறப்பித்து எழுதுகிற இப்பக்தனுக்கு இப்பெரிய தமிழ்நாட்டு தவப்புதல்வர் வருவது தெரியா மலா போய்விட்டது? டிப்ட்டி காந்தியும் மகாத்மாவிற்கு மூளையில்லை என்றவரும் வந்திருப்பார்களானால் என்ன நடக்கும்? இப்பக்தனும் தற்பொழுது கும்பகர்ணன் வேலையை ஒப்புக்கொண்டுள்ள காந்தி சங்கமும் இந்நகரில் இருந்தென்ன பலன்? இச்சங்கமும் பத்திரிகையும் ஒன்றுபட்டு தென்இந்திய மக்களின் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீ முதலியாரை வரவேற்று உபசரித்து முக்கியமான இடங்களில் இன்னும் சில கூட்டங்களைக் கூட்டுவித்து சம்ரம்மாக வழியனுப்பி வைத்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும். ஏதோ கடனுக்கெழுதுவது போல் பக்தன் மட்டும் முதலியார் கண்டிக்குப் போகிறதைப் பற்றி ஓர் மூலையில் குறித்திருந்தது. அதுவும் பக்தனை ஆதரிப்போரின் கோபத்திற்காளாகும் படி நேருமோவென்றும் தமது பிரதிநிதியை பேட்டிகண்டு பேசியதற்காக வுமே எழுதியிருக்க வேண்டும். இவ்வளவு தூரம் பக்தனுக்கு திரு.முதலி யாரின் பேரில் வெறுப்புண்டாக காரணமென்ன? அன்னாரும் பிராமணர் களின் சூழ்ச்சியைக் கண்டித்து பிராமணரல்லாதாரின் சுயமரியாதையை ஆதரிப்பதாக இருப்பதால் தான் இப்பக்தன் அப் பெரியாரைப் பற்றி வரவேற்றுபசரித்து வழியனுப்பி உபசாரம் கூராததால் அவருக்கு ஒன்றும் குறைவில்லை. அதனால் பக்தரின் துவேஷபுத்தி வெளியாவதோடு பழிச் சொல்தான் கிடைத்திருக்கிறது. இனியாவது இம்மாதிரி பொதுமக்களிடை வகுப்பு வேற்றுமையில்லாமலும் ஆத்திரத்திற்காளாகாமலும் உயரிய நோக்கங் கொண்டு உண்மையுடன் உழைத்து உலாவி வருவானாக.
( உண்மையுரைப்போன் )

குறிப்பு :
இப்பார்ப்பனார்கள் நமது சுயமரியாதைக்கு முழு எதிரிகள் என்று தெரிந்திருந்தும் இவர்களை அழைத்துக் கொண்டு நமது ஸ்ரீமான் முதலி யாரும் ஆர்.கே.ஷண்முகம் செட்டியாரும் ஊர் ஊராய்த் திரிந்து இப் பார்ப் பனர்களுக்குக் கிடைக்கும் கல்லடியையும் சாணி அடியையும் மீத்து வைத்த தோடு இவர்களை நாக்குக் கூசாமல் தலைவர்கள் என்று சொல்லி பாமர ஜனங்களுக்கு அறிமுகம் செய்வித்து ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரம் தொண்டை கிழியச் செய்த பிரசங்கங்களையே ஒரு அங்குலம் ஒண்ணரை அங்குலம் அதுவும் பொய்யும் புளுகுமாய் பிரசுரித்துவிட்டு அங்கு பேசுவ தற்கே இடம் கிடைக்காத ஸ்ரீமான் சத்தியமூர்த்தி போன்றவர்களை பெருத்த கரகோஷத்தினிடையே பேசினார் என்று மூன்று கலம் நான்கு கலம் எழுது கிறவர்கள் இந்த நாட்டு விஷயமும் இப்பார்ப்பனர்கள் அக்கிரமமும் தெரியாத கொளும்பு தேசத்தில் பேசியதை ஒரு பார்ப்பனப் பத்திரிகை போடவில்லை என்று சொல்வது தேளால் கடிபட்டவன் இதென்ன வலிக் குதே என்று சொல்வது போல் இருக்கிறது. கொழும்புத் தமிழ் மக்கள் இவ் விதப் பார்ப்பனர் பத்திரிகைகளை ஆதரிப்பது நமக்கு ஆச்சரியமா யிருக்கிறது.
( ப – ர் )

குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 05.09.1926

You may also like...

Leave a Reply