இந்துமத பரிபாலன மசோதா
இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் நமது பார்ப்பனர்களுக்கு எமனாய் விளங்கும் இந்துமத பரிபாலன மசோதா முக்கால் பாகம் பார்ப்பனர்களின் பஞ்ச தந்திரங்களுக்கிடையில் பெரும் பாகம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற பாகமும் நிறைவேற்றப்பட்டு மலையாளக் குடிவார மசோதாவைப் போல் பூரண வெற்றி பெற வேண்டுகிறோம். இவ்விரண்டு மசோதாவையும் எதிர்த்தவர்களுக்கு அடுத்த தேர்தலில் தக்கபடி புத்தி கற்பிப்பார்கள் என்றே நம்புகிறோம்.
குடி அரசு – சிறு குறிப்பு – 05.09.1926