டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்டல்

ஸ்ரீமான் டாக்டர் வரதராஜுலு நாயுடு சுயராஜ்யக் கட்சியைப் பார்ப் பனர் கட்சி என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும், தேர்தலில் சுயராஜ்யக் கட்சி வெற்றி பெற்றால் பார்ப்பன ஆதிக்கம் ஓங்குவதுடன் பார்ப்பன ரல்லாதாருக்கு மீளாத ஆபத்து வரும் என்றும் சொன்னதிலிருந்து, நமது பார்ப்பனரும், அவர்களிடம் கூலி பெற்று வயிறு வளர்க்கும் கூலிகளும், பத்திரிகைகளும் டாக்டர் நாயுடுவுக்குப் பூச்சாண்டி காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதாவது “நாயுடு சங்கதியை வெளிப்படுத்தப் போகிறோம். அவர் ஜயிலில் நடந்து கொண்டதை வெளிப்படுத்துகிறோம்” என்று என்ன என்னமோ ஈனத்தனமாய்க் கூச்சல் போடுகின்றார்கள். அப்படியானால் டாக்டர் நாயுடுவின் செய்கை என்ன என்பதை ஒரு கை பார்த்தே விடலாம். சுயராஜ்யக் கட்சித் தலைவர்களைப் போல் கள், சாராயம் , பிராந்தி, சாப்பிடு கிறாரா? சுயராஜ்யக் கட்சி பிரதானிகள் போல் தேவடியாளைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறாரா? அல்லது போன இடங்களிலெல்லாம் குச்சு புகுந்து அடிபட்டாரா? சாராயம் பிராந்தி விற்றுப் பணம் சம்பாதிக் கிறாரா? பத்திரிகையில் பேர் போடுவதாகவும் படம் போடுவதாகவும் சொல்லிப் பணம் சம்பாதித்தாரா? பத்திரிகைச் செல்வாக்கை உபயோகித்து மடாதிபதிகளிடம் பணம் வாங்கினாரா? மகனுக்கு உத்தியோகம் சம்பாதித் துக் கொண்டாரா? வாங்கின கடனை ஏமாற்றினாரா? அல்லது வீட்டில் மல் துணியும், பெண்சாதிக்குப் பட்டு, சல்லா முதலிய அன்னிய நாட்டுத் துணியும் உபயோகித்துக் கொண்டு மேடைக்கு வரும் போது கதர் கட்டிக் கொண்டு வந்து பொது ஜனங்களை ஏமாற்றுகிறாரா? திருட்டுத் தனமாய் சர்க்கார் அதிகாரிகளிடம் கெஞ்சி ஏதாவது தயவு பெற்றுக் கொண்டாரா? மந்திரி உத்தி யோகம் வேண்டுமென்று யார் காலிலாவது விழுந்தாரா? பெரிய பெரிய உத்தி யோகங்களையும் பதவிகளையும் பெறலாமென்று தனது உத்தியோகத்தை ராஜினாமா கொடுத்து ஜனங்களை ஏமாற்றினாரா? அல்லது இன்னமும் தனக்கு ஏதாவது ஒரு உத்தியோகமோ பதவியோ கிடைக்குமென்று எதிர்பார்க்கிறாரா? எந்த விதத்தில் அவர் ‘பூளவாக்கை’ வெளிப்படுத்தக் கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. ஆதியில் பார்ப்பனரல்லாதார் கட்சி பலமாய் ஆரம்பித்த காலத்திலும், அதைக் கொல்ல இம்மாதிரியே சுக்கிரீவனைப் போலவும் விபூஷணனைப் போலவும் அனுமார்களைப் போலவும் ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடு வையும் கலியாணசுந்திர முதலியாரையும் மற்றும் பல பேர்களையும் தங்கள் சுவாதீனப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு ஜாதி, குல அபிமானம் இல்லாமல் செய்தும், அவர் கள் மூலமாய் பார்ப்பனரல்லாதார் கட்சியைத் தலையெடுக்க வொட்டாமல் செய்ய பாடுபட்டதுமல்லாமல் இப்பொழுதும் அவர்களை மிரட்டிப் பூச்சாண்டி காட்டுவதானால் இவர்கள் பூச்சாண்டிக்கு யார்தான் பயப்படுவார் கள்? இவர்கள், இவர்களைப் பற்றி வெளியாக்கப் போகும் விஷயம் என்னவென்றுதான் ஒரு கை பார்க்கலாம் என்றே தயாராயிருக்கிறோம். இதன் பலனாகவாவது அரசியல் துறையிலுள்ள எல்லாருடைய யோக்கியதை யையும் வெளியாக்கக் கூடுமென நினைத்தே அவற்றை மனப்பூர்வமாய் வரவேற்கிறோம் .

குடி அரசு – கட்டுரை – 10.10.1926

You may also like...

Leave a Reply