வடஆற்காடு ஜில்லாவுக்கு சட்டசபை அபேக்ஷகர்கள்

பார்ப்பனர் ஆயுதமாகிய காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக வடஆற்காடு ஜில்லாவுக்கு மைலாப்பூர் அய்யங்கார் ‘சுவாமி’களால் சட்ட சபைக்கு நிறுத்தின பான்மையும், நிறுத்தப்பட்ட மூன்று கனவான்களின் யோக்கியதையைப் பற்றியும், ஆரணி, ஆற்காடு ஜில்லா காங்கிரஸ்வாதி ஒருவர் எழுதிய கடிதத்தை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். அதை ஊன்றிப் படிப்பவர்களுக்கு அய்யங்கார் சூழ்ச்சிகளின் தத்துவம் விளங்கா மல் போகாது. அதிற்கண்ட ஸ்ரீமான் செட்டியார் பார்ப்பனரல்லாதாரிடம் வரும் போது நானும் பார்ப்பனரல்லாத வகுப்பைச் சேர்ந்தவன். எப்படி யாவது நமது நாட்டுப் பார்ப்பனீயத்தை ஒழித்தால்தான் சுயராஜ்யம் வரும் என்று சொல்லு வார். பார்ப்பனர் இடம் செல்லும் போது “ஏமி சுவாமிலூ மனக்கெப்புடு அமாவாச சூத்திரவாள்ளரு எப்புடு அமாவாச” என்று கேட்பார். அதாவது “என்ன சுவாமிகளே நமக்கு என்றைக்கு அமாவாசை, சூத்திரன்களுக்கு என்றைக்கு அமாவாசை” என்று கேட்டல். அல்லாமலும் காங்கிரஸ் வாதி எழுதியிருப்பது போல் தனக்கு லாபம் இல்லாமல் அவரிடம் ஒரு காரியமும் இருக்காது. நமது மந்திரிகளைக் காணும்போது நான் பார்ப்பனர் கூடவே இருந்து அவர்களை ஒழித்து விட்டு வந்து விடுகிறேன். சற்று பொறுங்கள் என்பார். ஸ்ரீ சர்.சி.பி. அய்யரிடம் போகும் போது ஜஸ்டிஸ் கட்சியைக் குழி வெட்டிப் புதைக்க நாள் ஆச்சுது ; முதலில் என் மகனுக்கு ஒரு உத்தியோகங் கொடு என்பார். மொத்தத்தில் “நீக்கு பெப் பெப்பே நீ தாத்தரு பெப் பெப்பே” என்று இரண்டு பேரையும் ஏமாற்றி விடுவார். தன் வீடுதான் அவருக்கு தேசம், தன் பிள்ளை குட்டிகள்தான் அவருக்கு தேச மக்கள். இப்படிப்பட்ட தேச பக்தர்களாகவே பார்த்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதை அறிந்து அந்த ஜில்லாவாசிகள் இப்போது இரண்டு மூன்று கன வான்கள் அந்த ஜில்லாவாசிகளாகவும் பொது வாழ்க்கையில் சுயநலமின்றி உழைத்து வருபவர்களாகவும் பார்த்து நிறுத்தி இருக்கிறார்களாம்; அதாவது ஆரணி ஸ்ரீமான் ழு.சூ..பரசுராம் நாயக்கர் அவர் களையும், வேலுhர் சேர்மெனும் ஜில்லா போர்டு தலைவருமான ஸ்ரீமான் கரூர் கிருஷ்ணசாமி நாயுடுகார் அவர்களையும் கேட்டுக் கொண்டதில் அவர்களும் சம்மதம் கொடுத்து விட்டதாய்த் தெரிகிறது. மற்றொரு ஸ்தானத்திற்கு யாரை நியமிப்பார்களோ தெரியவில்லை. எப்படியாவது இந்த கனவான்களைப் பற்றி அந்த ஜில்லா வாசிகளுக்கு நாம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அல்லாமலும் இவர்களின் யோக்கியதாம் சத்தை அந்த ஜில்லாவாசிகளுக்கு அறிவிப்பதை விட பார்ப்பனர்களால் நிறுத்தப்பட்டிருக்கும் கனவான்களின் யோக்கியதாம் சத்தை அஜ்ஜில்லா பாமர ஜனங்களும் ஓட்டர்களும் கொஞ்சமாவது அறியும் படி செய்து விட் டால் கண்டிப்பாய் அந்த ஜில்லாவாசிகளால் நிறுத்தப்பட்ட கனவான்களே போட்டியன்னியில் தெரிந்தெடுக்கப்பட்டார்கள் என்று சொல்லும்படியாக வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி என்றே சொல்லு கிறோம்.
( ப – ர் )

குடி அரசு – வேண்டுகோள் – 12.09.1926

You may also like...

Leave a Reply