ஓர் வேண்டுகோள்

பார்ப்பனரல்லாதாருக்கு ஒர் வேண்டுகோள் என்னும் தலைப்பின் கீழ் 25.7.26 ² ‘குடி அரசு’ தலையங்கம் எழுதி பார்ப்பனரல்லாதாரின் சுயமரியா தையைக் காக்கவும், தாழ்த்தப்பட்ட மக்களை சமத்துவப்படுத்தவும், பொது அரசியல் உரிமையை எல்லாச் சமூகமும் சமமாய் அடைய இந்திய மக்க ளுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெறவும், ‘குடி அரசி’ன் தத்துவங் களை வைத்து சில திட்டங்களை வகுக்கவும், அவற்றை தமிழ் மக்கள் சேர்ந்து கட்டுப்பாடாய் நிறைவேற்றவும், ஒரு அறிக்கை வெளியிடவும், அவ்வறிக் கையில் பல கனவான்களின் கையொப்பங்களையும் சேர்த்து வெளியிட வேண்டுமென்ற விருப்பங் கொண்டு யார், யார் இத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள சம்மதிக்கிறார்களோ, அக்கனவான்கள் பெயரை அவ்வறிக்கையில் வெளியிட வேண்டும். ஆகையால் தங்கள் தங்கள் பெயரையும் முழு விலாசத் தையும் சம்மதத்தையும் எழுதியனுப்புமாறு வேண்டிக் கொண்ட தில் இதுவரை சுமார் ஆயிரம் பெயர்களுடைய கையெழுத்தும் சம்மதமும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இன்னும் இத் தத்துவங்களை ஏற்றுக் கொள்ளும் கனவான்கள் தயவு செய்து சீக்கிரத்தில் அனுப்பிக் கொடுப்ப தோடு மற்றும் இதை ஏற்றுக் கொள்ளும் தங்கள் தங்கள் நண்பர்களிடமும் கையொப்பம் வாங்கியனுப்ப வேண்டுகிறோம். பார்ப்பனீயத்தை விட்டவர் கள் கையொப்பமும் வந்து கொண்டிருக்கிறது. அவற்றை இனி அனுப்பு பவர்கள் சென்னை ‘தமிழ்நாடு’ பத்திரிகைக்கு அனுப்பினால் அதைப் பார்த்து ‘குடி அரசி’ல் பதிப்பிக்கப்படும். இல்லாதவரை இரண்டு இடத்திற் கும் அனுப்புவது சிரமமாயிருக்கும். ஆதலால் ‘குடி அரசி’ன் தத்துவங் களை ஒப்புக்கொள்ளும் கையொப்பங்களை மட்டும் நமக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

குடி அரசு – வேண்டுகோள் – 05.09.1926

You may also like...

Leave a Reply