நவசக்தி

இத் தலைப்பைக் கண்டவுடன் ‘நவசக்தி’க்கும் ‘குடிஅரசு’க்கும் ஏதா வது போர் நிகழுமோ என பலர் சங்கடப்படவும், பலர் சந்தோஷப் படவும், பலர் வேடிக்கைப் பார்க்கலாம் என்று நினைக்கவும் இடங் கொடுக்குமோ என்று நினைக்கிறோம். ஆனாலும் அம்மாதிரியாக எதிர்பார்ப்பவர்கள் கண்டிப்பாய் ஏமாற்றமடையக் கூடும். நிற்க, சென்ற ‘குடி அரசு’ இதழில் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்காரை ஸ்ரீமான் முதலியாரவர்கள் தொழிலாளர் சங்கத்திற்கு அழைத்து அவரை அறிமுகப்படுத்தி வைத்ததைப் பற்றி எழுதி யிருந்தோம். அதைக் கண்டு அவரது ‘நவசக்தி’ ‘குடிஅரசை’ ச்சீறி இருக் கிறது. ஆனால் அதற்காக நாம் சீற்றம் கொள்ளவில்லை. தொழிலாளருக் கென்றே அவதரித்தவர் எனத் தொழிலாளரின் நன்மதிப்பையும், பின்பற்று தலையும் பெரிதும் பெற்ற ஸ்ரீமான் முதலியாரவர்கள் வாக்கால் “ஸ்ரீமான் அய்யங்கார் தொழிலாளர் விஷயத்தில் மிகுந்த சிரத்தை உள்ளவர் என்றும், காங்கிரஸ் அக்கிராசனப் பிரசங்கத்தில் தொழிலாளரைப் பற்றிக் கூற வேண்டும் என்றும், ஸ்ரீமான் அய்யங்கார் சட்டசபையில் தொழிலாளருக்கு ஏற்ற சீர்திருத்தங்கள் செய்ய வேண்டு மென்றும்” கேட்டுக்கொண்டால் இந்தத் தேர்தல் காலத்தில் தங்கள் ஓட்டுகளை வினியோகிக்கும் விஷயத்தி லாகட்டும், தேர்தலுக்கு உதவி செய்யும் விஷயத்திலாகட்டும் தொழிலாளர் களின் மனப்பான்மை என்னவாகும் என்பதுதான் நமது கவலையே ஒழிய ‘நவசக்தி’ சொல்லுகிறபடி பிரசாரத்தில் கலவாது விலகி நிற்கும் ஸ்ரீமான் முதலியாரை ‘குடி அரசு’ வலிய ஈர்க்கவில்லை என்பதை உறுதி கூறு கிறோம். ஆனால் ஒரு சந்தேகம்; ஓட்டுகள் இருக்கும் தொழிலாளர் சகோ தரர்களிடம் தேர்தலுக்கு நிற்கும் ஸ்ரீமான் அய்யங்காரை அழைத்துப் போய், அய்யங்கார் தொழிலாளருக்கு உழைத்தவர், அவர் இன்னமும் உழைக்க வேண்டும், தொழிலாளருக்கு சட்டசபையில் இன்னது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் (24.9.26 சுதேசமித்திரனில் காண்க) இது வெளிப்படை யான பிரசாரமல்ல என்று ஒப்புக் கொள்ளுவதானாலும் மறைமுகமான பிரசாரம் என்றாவது எண்ண, இந்த சந்தர்ப்பம் இடம் கொடுக்குமா கொடுக்காதா என்பதைப் பொது மக்களே சொல்லட்டும்!

அல்லாமலும் ஸ்ரீமான்கள் டாக்டர் நாயுடு, ஆரியா, நாயக்கர், சக்கரை செட்டியார் ஆகிய இவ்வளவு பெயரையும் வைது கொண்டும் ஜெயிலில் வைக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டும் இருக்கிற ஒருவரைப் பற்றி இது சமயம் நல்லுரை பகரவேண்டிய அவசியம் நமது முதலியாரவர்களுக்கு வருமானால் அதைப்பற்றி யார் மனந்தான் வெதும்பாமல் இருக்கும். இவற்றைப் பற்றி ‘குடி அரசு’ பிரஸ்தாபித்ததைக் கண்டு ‘நவசக்தி’ சீறி விழுந்து ‘குடி அரசு’ வெறுக்கத்தக்க உரைகளைப் பெய்திருக்கிறது’’ என்று எழுதி இருக்கிறதின் திறத்தை அறிய பொது மக்களுக்கே விட்டு விடுகி றோம். அல்லாமலும் நவசக்தியையோ ஸ்ரீமான் முதலியார் அவர்களையோ இவ் விஷயத்தில் குற்றம் சொல்ல வேண்டும் என்னும் எண்ணத்துடன் ஒரு எழுத்தும் எழுதவில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம் .

குடி அரசு – துணைத் தலையங்கம் – 03.10.1926

You may also like...

Leave a Reply