தமிழ்நாட்டிலிருந்து ‘மற்றொரு இந்தியத் தலைவர்’

பண்டித மோதிலால் நேரு அவர்கள் தனக்கு அசௌகரியம் ஏற்படும் போதெல்லாம் நம் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களில் ஒருவரைத்தான் பதில் (ஆக்டிங்) தலைவராய் நியமிப்பது வழக்கம். அது போலவே சென்ற வாரமும் தனக்கு லாகூரில் இருக்க சவுகரியமில்லாததால் ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகளை வந்து தனது ஸ்தானத்தை ஒப்புக்கொள்ள அழைத்து இருக்கிறார். முதல் தடவை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அழைப்புவந்தது. மறுதடவை ஸ்ரீமான் எ. ரங்கசாமி அய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மூன்றாம் தடவை ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரி களுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இனி நான்காந் தடவை கும்பகோணம் சக்கரவர்த்தி ஐயங் காருக்கு அழைப்பு வருமென்று எண்ணுகிறோம். ‘‘இந்தியாவின் பாக்கியமே பாக்கியம். அதிலும் தமிழ்நாட்டின் பாக்கியமே பாக்கியம்.’’

குடி அரசு – செய்தி விளக்கம் – 10.10.1926

You may also like...

Leave a Reply