தீண்டாமை விலக்குச் சட்டம்
“பொதுத் தெருக்களில் எவரையேனும் நடக்கக்கூடாது என்று தடுப்பவருக்கு 100 ரூபாய் வரையில் அபராதம் போடலாம்” என்கிறதாக ஒரு பிரிவை சென்னை ஜில்லா லோக்கல் போர்டு சட்டங்களில் ஒரு பிரிவாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று ஸ்ரீமான் வீரய்யன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறி விட்டதாகவும், முனிசிபாலிட்டி சட்டத்திலும் இவ்வித திருத்தம் செய்யவேண்டுமென்று கொண்டு வரப்பட்ட திருத்தம் தான் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்ரீமான் வீரய்யன் அவர்களால் தெரிவிக்கப்படுகின்றன.
குறிப்பு : இவ்வித சட்டம் செய்யப்பட்டது பற்றி நாம் மிகுதியும் களிப்பெய்துகிறோமானாலும் பார்ப்பன வக்கீல்களும் பார்ப்பன நீதிபதிகளும் இச்சட்டம் செய்தவர் கருத்துப்படி பலனளிக்கச் சம்மதிப்பார்களா? அவர் களது சட்ட ஞானமும் பாஷ்ய ஞானமும் இச்சட்டத்தை உயிருடன் வைத் திருக்கச் சம்மதிக்குமா என்று கேட்கிறோம்?
( ப – ர் )
குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 03.10.1926