“காங்கிரஸ் விளம்பர சபை”
நமது பார்ப்பனர்கள் பாமர ஜனங்களை ஏமாற்றும் பொருட்டும் வஞ்சிக்கும் பொருட்டும் ‘காங்கிரஸ் விளம்பர சபை’ என்பதாக ஒரு யோக்கியப் பொறுப்பற்றதும், அயோக்கியத்தனமானதுமான ஒரு பெயரை வெளிக்குக் காட்டி அதன் பேரால் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாயும், பார்ப்பனரல்லாதார் பேரிலும் அவர்கள் இயக்கத்தின் பேரிலும் பொது ஜனங்களுக்கு அசூயை, துவேஷம் முதலியதுகள் உண்டாகும்படியும் பல கட்டுக் கதைகளை ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் எழுதி வருகிறார். இது எவ்வளவு கெட்ட எண்ணமும் வஞ்சகப் புத்தியும் கொண்டது என்பது நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இதுகள் ஒவ்வொன்றுக்கும் பதிலெழுத வேண்டுமானால் அதற்கென்றே தனிப் பத்திரிகையும் ஆள்களும் வேண்டும். ஆனால் ‘ஒரு பானை அரிசிக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல் ஒரு விஷயத்தை விளக்குகிறோம். அதாவது, மலையாள மாப்பிள்ளை கலவரத் தில் மூடு வண்டியில் அகப்பட்டு திக்கு முக்காடி இறந்து போன சம்பவத்தைக் குறித்து 22.9.26 ² சுதேசமித்திரனில் பார்ப்பனரல்லா தார் கட்சியாகிய ஜஸ்டிஸ் கக்ஷியார் இதைப்பற்றி ஒன்றும் செய்யவில்லை என்றும் மற்றவர்கள் செய்ததற்கு விரோதமாயிருந்ததாகவும் எழுதியிருக் கிறது. இது எவ்வளவு பெரிய அக்கிரமம். மூடு வண்டி கொலைபாதகம் விஷயமாய் சட்டசபை நடவடிக்கையை ஒத்தி வைக்க வேண்டுமென்ற தீர்மானம் கொண்டு வந்தவர் அப்போது ஜஸ்டிஸ் கட்சியில் முக்கிய ஸ்தா னத்தையும் ஒரு மந்திரிக்கு காரியதரிசியுமாயிருந்த ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரே ஆவார். அவர் அதற்காக ஏற்பட்ட கமிட்டியில் முக்கிய அங்கத்தினராயிருந்து சர்க்காருக்கு எதிராய் பலமாய் வாதாடிய வரும் ³ ஜஸ்டிஸ் கட்சி அங்கத்த வரே ஆவர். ஆனால் அக்கமிட்டியில் இருந்து கொண்டு சர்க்காரை ஆதரித்த வர் ஒரு பார்ப்பனரே ஆகும். அவர்தான் ஸ்ரீமான் மஞ்சேரி ராமய்யர். ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர் மலை யாள மாப்பிள் ளைகளுக்கு அனுகூலமா யும் சில வெள்ளைக்காரருக்கு விரோதமாயும் அபிப்பிராயம் கொடுத்ததால் தான் அந்த ரிப்போர்ட் வெளி யில் வராமல் போய் விட்டது. ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அந்த காலத்தில் ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதியாக இருந் தார் என்பதை ஸ்ரீமான் சத்தியமூர்த்தி ஒப்புக் கொள்ளுகிறாரா? மறுக்கிறாரா? இம்மாதிரி வேண்டு மென்றே ஜனங்களை ஏமாற்ற இந்தப் பார்ப்பனர் எழுதும் எழுத்தும், பேசும் பேச்சும் சூழ்ச்சித் தனமானது என்று இதிலிருந்தாவது பொது ஜனங்களுக்கு விளங்கவில்லையா? குடி அரசு – கட்டுரை – 03.10.1926