செந்தமிழ்ச் செல்வி ( மாத வெளியீடு )

நாகரீகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் பத்திரிகைகள் தலை சிறந்து நிற்கும். மேனாடுகளை நோக்க நமது நாட்டில் பத்திரிகைகளின் தொகையும் செல்வாக்கும் குறைவுதான். பல அறிஞர்களின் உள்ளக் கருத்துக்களை ஒருங்கு திரட்டி உணர்த்தலால் மக்கள் அறிவை பண்படுத்து தலில் பத்திரிகைகள் வல்லன. நமது நாட்டில் தினசரி, வாரப் பத்திரிகைகள் ‘அரசியல் கிளர்ச்சியில்’ பாய்ந்து செல்லும் வேகத்தில் சமூக சீர்திருத்த விஷயத்தில் அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின் றன. கல்வி, சமயம், தத்துவம், சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில் எல்லாருக்கும் பயன்படத்தக்க ஒரு ஸ்திரமான திருத்தம் ஏற்பட்டால்தான் நமது சமூகத்தை பிணித்திருக்கும் குருட்டு நம்பிக்கைகள் ஒழியும். இத்துறையில் வேலை செய்ய வல்லன மாத வெளியீடுகளேயாகும். ஏனெனில் அறிஞர்கள் சாவதா னமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளே அவற்றில் வெளி வர இயலும். தமிழ்நாட்டில் அத்தகைய திங்கள் வெளியீடுகளிற் சிறந்தது நமது “செந் தமிழ்ச் செல்வி” எனத் துணிந்து கூறலாம். இதில் பெரும்பாலும் ஆங்கிலத் திலும் தமிழிலும் வல்லவர்களான பேரறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளே வெளிவருகின்றன. பார்ப்பனீயத்தின் மாயப்புரட்டுகள் வெளியாக்கப் படுகின்றன. தமிழர் நாகரிகம் தெள்ளத்தெரிய விளக்கப்படுகிறது. பண்டைய இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளும் புதிய மேனாட்டுச் சாஸ்திர முறை களும் ஆராய்ச்சி வல்லுநரால் பொருத்தமாய் எழுதப்படுகின் றன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் மாதம் தோறும் வெளியாகும் ‘செந்தமிழ்’ வெளி யீடு பார்ப்பன கோஷ்டியிலகப்பட்டுப் பார்ப்பனமயமாகிக் கொண்டி ருக்கிறது. அதைத் தோற்றுவித்த ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்களின் உத்தேசம் அடியோடு புறக்கணிக்கப்படுகிறது. பார்ப்பனரல்லாதார் பொருள் ஏராளமாயிருந்தும் சேதுபதி மஹாராஜா தலைவராயிருந்தும் தமிழ்ச் சங்கத்தையும் அதைச் சார்ந்த கலாசாலையையும் ‘செந்தமிழ்’ மாத சஞ்சி கையையும் பார்ப்பனராதிக்கத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பது பரிதபிக்கத் தக்கது. இக்குறைகளைக் கண்டே பல தமிழபிமானிகள் தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் பெயரால் மற்றொரு உண்மைத் தமிழ்க் கழகம் கண்டனர். மதுரை தமிழ்ச் சங்கத்தைப்போல், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கு புதுக்கோட்டை மஹாராஜா, ராமநாதபுரம் மஹாராஜா, ஏனைய ஜமீன்தார்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார் பிரபுக்கள் முதலியோருடைய நன்கொடைகளும் ஆதரவும் இல்லையாயி னும் அது தோன்றிய குறுகிய காலத்துள் நாவலர் பதிப்பு, சங்கப் பதிப்பு ஆகியவைகளையும் தோற்கடிக்கத்தக்க நிலைமையில் பல பழைய புதிய நூல்களை அது வெளியேற்றியிருக்கிறது. ஒரு சிறு பிழையுங் காண முடி யாது. பெரும்பாலும் புத்தக கட்டடங்களும் நவீன முறையில் கண்கவர் வனப்பினவாயிருக்கும். நாம் தலைப்பிற் குறித்த ‘செந்தமிழ்ச் செல்வி’யும் இக்கழகத்தினின்றும் வெளி வருவதுதான். உயர்திருவாளர்கள் கா. சுப்பிர மணியப் பிள்ளையவர்கள், எம்.ஏ., எம்.எல்., பா.வே.மாணிக்க நாயக்கர் போன்ற இரு மொழிப் புலவர்களின் பேராதரவு பெற்ற “ செந்தமிழ்ச் செல்வி”யின் மாட்சியை விரிக்கவும் வேண்டுமோ? தமிழ் மக்களின் முன் னேற்றங்கருதி உழைக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப்பேரா சிரியர் மணி.திருநாவுக்கரசு முதலியாரவர்களே நமது, ‘செல்வி’யின் ஆசிரியரார்கள். வடமொழிக் கலப்பில்லாத ‘தனிச் செந்தமிழ் நடை’ படிக்கப் படிக்க இனிக்கும். ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் அன்புடன் வரவேற்று ஆதரிப்பாராக.

வருட சந்தா
உள்நாடு ரூ. 3-0-0
வெளிநாடு ரூ. 3-8-0

கிடைக்குமிடம் :-
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழகம் (லிமிடெட்), 306 லிங்க செட்டி தெரு, சென்னை.

குடி அரசு – நூல் மதிப்புரை – 10.10.1926

You may also like...

Leave a Reply