நாம் இருவர் ; நமக்கேன் இன்னொருவர் ?

முன்பெல்லாம், நாம் இருவர், நமக்கு மூவர் என்று சொன்னோம்.  அது படிப்படியாக குறைந்து நாம் இருவர், நமக்கு இருவர். இப்பொழுது நாம் இருவர், நமக்கு ஒருவர், நாளைக்கு இதுவும் மாறலாம், நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர். நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை.

இப்படி எல்லாம் பிரசாரம் இருக்கிறது. இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, நாட்டினுடைய நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையைக் கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களைப் பெற்று அதற்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில், இல்லற வாழ்வில் நீங்கள் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்,  சமத்துவத்தை, சமூகநீதியை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏதோ முதலமைச்சராக அல்ல, உங்களுடைய தந்தை என்கின்ற அந்த இடத்தில் இருந்து உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன்.

அறநிலையத்துறை சார்பில் 31 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்து

முதலமைச்சர் ஆற்றிய உரையிலிருந்து.

பெரியார் முழக்கம் 08122022 இதழ்

You may also like...