Category: குடி அரசு 1934

எதிர்  பாருங்கள்!  எதிர்  பாருங்கள்!! 

எதிர்  பாருங்கள்!  எதிர்  பாருங்கள்!! 

  எதிர்  பாருங்கள்!!! காங்கிரஸ்  சுயராஜ்ஜியக்  கக்ஷிக்காரர்கள்  முன்  ஒரு  காலத்தில்  இந்திய  சட்டசபையில்  செல்வாக்காய்  இருந்தபோது  அங்கு  நடந்து  கொண்ட  மாதிரியும்,  அவர்கள்  சட்டசபை  அங்கத்தினர்  பதவியை  உபயோகித்து  பணம்  சம்பாதித்த  மாதிரியும்,  தலைவர்கள்  என்பவர்கள்  சிலர்  அந்தப்  பணத்தில்  பெரும்பாகம்  தங்கள்  சொந்தத்திற்கு  ஸ்வஹா  செய்து  கொண்ட  கதைகளும்  பகுத்தறிவில்  வரும்  நாளை  எதிர்  பாருங்கள். மற்றும்  இன்றைய  காங்கிரஸ்  அபேக்ஷகர்களில்  சிலரின்  யோக்கியதையையும்  அவர்களின்  வாழ்க்கையையும்  யாருடைய  செலவில்  அவர்கள்  அபேக்ஷகறாய்  இருக்கிறார்கள்  என்பதும்  வெளியாகலாம். ஏனெனில்  காங்கிரஸ்  கக்ஷி  தவிர  மற்றக்  கக்ஷி  கழுதைக்கு  சமானம்  என்றும்  காங்கிரசின்  பேரால்  கழுதை  நின்றாலும்  அதற்குத்தான்  ஓட்டுச்  செய்ய  வேண்டுமென்றும்,  சுயமரியாதைக்  கக்ஷி  சர்க்கார்  அடிமைக்  கக்ஷி  என்றும்,  தேசத்  துரோகக்  கக்ஷி  என்றும்  சொல்லுவதற்குப்  பதில்  சொல்லுமுகத்தான்  அவை  வெளியாகும். பகுத்தறிவு  அறிவிப்பு  26.08.1934

தேர்தல்  பிரசாரம்  என்னும்  ஏமாற்றுப்  பிரசாரமும்  வயிற்றுப்பிழைப்பு  வசவுகளும்

தேர்தல்  பிரசாரம்  என்னும்  ஏமாற்றுப்  பிரசாரமும்  வயிற்றுப்பிழைப்பு  வசவுகளும்

  சித்திரபுத்திரன் சித்திரபுத்திரனுக்குப்  பழய  பாடம்  படிக்க  நேர்ந்துவிட்டது.  இது  இஷ்டமில்லாத  காரியமானாலும்  அது  இன்றியமையாததாய்  போய் விட்டது!  கர்மபலன்  யாரை  விட்டது? இந்திய  சட்ட  சபைத்  தேர்தல்  ஆரம்பமாகி  விட்டது.  இது  வேலையில்லா  வாலிபர்களின்  கஷ்டத்தை  ஒருவாறு  குறைக்க  அனுகூலமாயிருக்கிறது  என்று  சொல்லலாம்.  அது  போலவே  கொள்கையோ,  விஷயமோ  இல்லாத  பத்திரிக்கைகாரர்களுக்கும்  ஒரு  அளவு  கஷ்டம்  நீங்கிற்று  என்றும்  சொல்லலாம்.  நாட்டுக்கோ,  நகரத்துக்கோ,  ஏழைப்  பாட்டாளி  மக்களுக்கோ  இதனால்  ஏதாவது  பயன்  உண்டா  என்று  பார்ப்போமானால்  தேர்தல்களுடையவும்,  தேர்தல்  முடிவுகளுடையவும்  பயன்  கடைசியாக  “”பிச்சை  போடாவிட்டாலும்  பரவாயில்லை  நாயைப்  பிடித்துக்  கட்டுங்கள்”  என்கின்ற  மாதிரிக்குத்  தான்  அதாவது  நன்மை  ஏற்படா விட்டாலும்  கெடுதியாவது  இல்லாமல்  இருந்தால்  போதும்  என்று  பிறார்த்திக்க  வேண்டிய  அளவில்தான்  வந்து  முடியப்  போகின்றதே  ஒழிய  வேறில்லை  என்பது  உறுதி. காங்கிரசும்,  சுயராஜ்ஜியக்  கிளர்ச்சியும்,  சீர்திருத்த  முயற்சியும்  ஆதியில்  நம்  நாட்டில்  எப்படி  ஏற்பட்டது  என்பதை  வாசகர்கள் ...

மாளவியா

மாளவியா

  பழங் காங்கிரஸ்வாதி  என்று  சொல்லப்படும்  பண்டித  மாளவியா  அவர்கள்  காங்கிரசின்  ஜாதிமத  வகுப்பு  சம்மதமாய்,  சம  சந்தர்ப்பம்  வழங்கும்  கொள்கையில்  அதிருப்தி  கொண்டு  அதன்  நிறுவாகத்தில்  இருந்து  விலகி  தேர்தலில்  காங்கிரசுடன்  போட்டி  போடவும்,  ஒவ்வொரு  தொகுதியிலும்  காங்கிரஸ்  அபேக்ஷகருக்கு  எதிர்  ஆளை  நிறுத்தி  எதிர்ப்பிரசாரம்  செய்யவும்  தீர்மானித்து  எதிர்கக்ஷி  அமைத்துவிட்டார்.  இதற்கு  காங்கிரஸ்  சர்வாதிகாரியாய்  இருந்து  தோழர்  ஆனேயும்  சம்மதித்தப்  பண்டிதருடன்  சேர்ந்து  காங்கிரசை  எதிர்த்து  வருகிறார். இதைப்  பார்த்த  எந்த  பார்ப்பனரும்,  பார்ப்பனரல்லாத  கூலி  பக்தரும்,  மாளவியாவை  தேசத்  துரோகி  யென்றும்,  காங்கிரஸ்  துரோகி  என்று  கூறவும்  இல்லை.  இனியும்  தேசபக்தர்  என்றேதான்  அவர்கள்  அழைக்கப் படுகிறார்கள்.  ஆகவே  தேசபக்தர்  என்றால்  யார்  என்பதும்  தேசத்  துரோகி  என்றால்  யார்  என்பதும்  இதிலிருந்தே  தெரிந்து  கொள்ளலாம். பார்ப்பன  அடிமைகளுக்கும்,  பார்ப்பனரல்லாத  கூலி  பிரசாரகர்களுக்கும்,  பத்திராதிபர்களுக்கும்,  எலும்புத்துண்டு  போடுகின்றவர்களுக்குந்தான்  தேசபக்தர்கள்,  காங்கிரஸ்வாதிகள்,  தேசாபிமானிகள்  ஆகிவிடுவார்கள். மற்றவர்கள்  தேசத்  துரோகி, ...

இனியாவது  புத்தி  வருமா?

இனியாவது  புத்தி  வருமா?

  தீண்டப்படாத  மக்கள்  என்பவர்களுக்கு  ஆலயப்  பிரவேசம்,  என்னும்  பேரில்  காங்கிரஸ்  செய்து  வந்த  கிளர்ச்சியை  அப்போதே  நாம்  கண்டித்து  எழுதி  வந்ததுடன்,  உலகில்  கோவில்களே  இருக்கக்  கூடாதென்றும்,  அதற்கு  எவருரையும்  சொல்லிவிடக்கூடாதென்றும்,  சொல்லியும்  எழுதியும்  வந்தது  யாவரும்  அறிந்ததாகும். மற்றும்  கோவில்களை  கள்ளர்  குகையென்று  கிறிஸ்துவும், கோவில்கள்  இடித்து  நொறுக்கித்  தள்ளப்பட  வேண்டியது  என்று  முகம்மதுவும்,  கோவில்கள்  விபசாரிகள்  விடுதி என்று  காந்தியும்  சொல்லியிருப்பதும்  யாவரும்  அறிந்ததாகும். தோழர்  காந்தியார்  கோவில்களை  விபசார  விடுதி  என்று  ஒரு  சமயத்தில்  சொல்லியிருந்தாலும்,  இப்போது  இரண்டொரு  வருஷ  காலமாய்  அவ்விபசார  விடுதிக்கு  ஆள்  பிடித்து  விடும்  வேலையை  விவரமாய்  செய்து  வந்ததுடன்  அதற்காகப்  பத்து  லக்ஷக்கணக்கான  ரூபாய்களையும்  திரட்டி  வந்ததும்  யாவரும்  அறிந்ததாகும். தீண்டப்படாதாருக்கு  அரசாங்கத்தார்  அரசியலிலும்,  உத்தியோகத் திலும்  தனித்தொகுதி பிரதிநிதித்துவம்  கொடுத்த  பிறகு  அதை  ஒழிக்கக்  கருதிய  காந்தியார்,  தீண்டாதாருக்கு  நல்ல  பிள்ளையாகக்  கருதி  அவர்களுக்கு  கோவில்  பிரவேசம்  ஏற்பாடு ...

“”பகுத்தறிவு”

“”பகுத்தறிவு”

  “”பகுத்தறிவு”  வாரப்  பத்திரிகையின்  முதல்  மாலை  முதல்  மலர்  26.8.34  ˆ ஞாயிறு  வெளியாகின்றது  என்றாலும்,  அதன்  கொள்கைகளைப்  பற்றி  “”குடி  அரசு”  “”ரிவோல்ட்”  “”புரட்சி”  “”பகுத்தறிவு”  (தினசரி)  ஆகிய  பத்திரிகைகளின்  அபிமானிகளுக்கும்  வாசகர்களுக்கும்  எடுத்துக்  கூற  வேண்டியதில்லை. சுருக்கமாக  ஒரு  வாக்கியத்தில்  சொல்லித்  தீர  வேண்டுமானால்  “”பகுத்தறிவு”  தோன்றலானது,  இன்றைய  உலக  வழக்கில்  இருந்து  வரும்  காரியங்களில்  பெரும்பான்மை  மக்களால்  முதன்மையானதாகவும்  இன்றியமையாதனவாகவும்  கருதப்படும். “”எங்கும்  நிறைந்த இறைவனை”  வழுத்தவோ, “”எல்லாம்  வல்ல  மன்னனை” வாழ்த்தவோ, “”யாதினும்  மேம்பட்ட  வேதியனை” வணங்கவோ, “”ஏதும்  செய்ய  வல்ல  செல்வவானை” வாழிய  செப்பவோ  கருதி  அல்ல  வென்பதே  யாகும். மேலும்  மனித  சமூகத்தில்  மௌட்டீயத்தால்  ஏற்பட்ட  துரபிமானங் களாகிய  கடவுள்,  ஜாதி,  மதம்,  தேசம்,  நான்,  எனது  என்பன  போன்ற  அபிமானங்களை  அறவே  ஒழித்து  மனித  சமூக  ஜீவாபிமானத்தையும்  ஒற்றுமை யையும்  பிரதானமாய்க்  கருதி  உழைத்து  வரும்  என்றும்  சொல்லுவோம். இத்தொண்டாற்றுவதில் ...

“குடி  அரசு’  வெளிவராத  ஆண்டு

“குடி  அரசு’  வெளிவராத  ஆண்டு

  “”இன்றைய  ஆட்சி  ஏன்  ஒழிய  வேண்டும்?”  என்ற  தலையங்கத்துக்காக  “அரசு  வெறுப்புக்  குற்றத்தின்  கீழ்  பெரியார்  கைது  செய்யப்பட்டதைத்  தொடர்ந்து,  1933  ஆம்  ஆண்டு  நவம்பர்  19  ஆம்  தேதியோடு  “குடி அரசு’  நிறுத்தப்படுகிறது.  1934  ஆம்  ஆண்டில்  ஆகஸ்டு  மாதம்  26  ஆம்  தேதியிலிருந்து  “பகுத்தறிவு’  வார  ஏடு  வெளி  வரத்  தொடங்குகிறது.  எனவே  இத்தொகுதியில்  பகுத்தறிவு  வார  ஏட்டில்  இடம் பெற்றிருந்த  கட்டுரைகளே தொகுக்கப்  பெற்றுள்ளதை வாசகர்களுக்கு  சுட்டிக்  காட்டுகிறோம்.  பகுத்தறிவின்  முதல்  தலையங்கமே “”முடிவாய்  கூறுமிடத்து,  பகுத்தறிவு  மனித  ஜீவாபிமானத்துக்கு  மக்களை  வழி  நடத்திச்  செல்லுமே  தவிர  எக்காரணம்  கொண்டும்  மக்கள்  பின்  நடந்து  செல்லும்படியான  அடிமை  வாழ்வில் உயிர்  வாழாது”  என்று  அறிவிக்கிறது. ஆகஸ்ட்  மாத  இறுதியிலிருந்து  டிசம்பர்  முடிய  “”பகுத்தறிவு”  தாங்கி  வந்த  ஆழமான  சிந்தனையைத்  தூண்டும்  கட்டுரைகள்  தலையங்கங்கள்  இத்தொகுப்பில்  இடம்  பெற்றுள்ளன.  தீண்டப்படாத  மக்களுக்கு  தனித்  தொகுதியை  எதிர்த்த  காந்தியார் ...

அருஞ்சொல்  பொருள்

அருஞ்சொல்  பொருள்

  அந்தர்முகம்                               உள்நோக்குகை அந்தரார்த்மா                             உள்மனம் அநீதம்                             நியாயமின்மை ஆகுதி                               தீ  வேள்வி ஆத்மார்த்தம்                            மிக்க  நட்பு இச்சித்து                         விரும்பி உத்தரிக்க                      மேற்பார்வையிட உத்தரித்தல்                               ஈடுசெய்தல், கடன்  செலுத்துதல்,  பொறுத்தல் உன்மத்தம்                  மயக்கம்,  வெறி,  பைத்தியம் எக்கியம்                         வேள்வி எத்தனம்                        முயற்சி,  ஆயத்தம் ஏஷ்யம்                           காரணம்,  கருதுகோள்,  சான்று கண்டசரம்                    கழுத்தணிவகை காற்க                                காக்க காஸ்டிங்  ஓட்டு                      ஒரு  கூட்ட  நடவடிக்கையில்  ஆதரவும்  எதிர்ப்பும்  சமமாக  இருக்கும்  பொழுது  தலைவரின்  தீர்மானமான  வாக்கு கிருஷிகள்                    விவசாயிகள் சக்கிமுக்கி  கற்கள்                               நெருப்புண்டாக்கப்  பயன்படும்  கற்கள் சந்தியா  வந்தனம்                 காலை,  மாலைகளில்  வேத  மந்திரங்களால்  செய்யும்  வழிபாடு சந்துஷ்டி                        மன  நிறைவு சம்ரட்சனை, சம்ரட்சணை                              காப்பாற்றுகை சன்னதம்                       ஆவேசம்,  கோபம்,  வீறாப்பு தத்தம்                              நீர்வார்த்துக்  கொடுக்கும்  கொடை தியங்கவிட்டு                           கலங்கவிட்டு,  மயங்கவிட்டு,  சோர்வெய்த  விட்டு துக்கித்தல்                   துயருறுதல் துவம்சம்                       அழிவு துராக்கிருத                  பலவந்தக்  கற்பழிப்பு தேவதா                           தெய்வம்,  பேய் தோதாக                         வசதியாக நரமேத  யாகம்                        ...

என்றால்  என்ன?

என்றால்  என்ன?

  தோழர்களே!  இன்று  இங்கு  நடைபெறப்  போகும்  திருமணம்  சுயமரியாதைத்  திருமணம்  என்று  சொல்லப்படுகின்றது.  மற்ற  திருமணங்களுக்கும்  சுயமரியாதைத்  திருமணங்களுக்கும்  அடிப்படையாக  என்ன  மாறுதல்  இருக்கின்றது  என்று  பாருங்கள். அனாவசியமாக  சிலர்  “”சுயமரியாதைத்  திருமணமா?”  என்றாலே அதிசயப்படுவதும்,  ஏதோ  முழுகி  விட்டது  போல்  வெறுப்படைவதுமா யிருக்கின்றதே  தவிர,  வேறு  என்ன  மாறுதல்  இருக்கின்றது  என்பது  எனக்கு  விளங்கவில்லை. விவாகம்  அல்லது  திருமணம்  என்று  சொல்லப்படுவதெல்லாம்  ஒரு  பெண்ணும்,  ஆணும்  சேர்ந்து  ஒருவருக்கொருவர்  கட்டுப்பட்டு  அவர்களது  வாழ்க்கையை  கூட்டுப்  பொருப்பில்  நடத்துவதற்குப்  பலர்  அறிய  செய்துகொள்ளும்  அல்லது  செய்யப்படும்  காரியமே  ஆகும்.  இதைச்  சிலர்  அதாவது  பழைய  முறைக்காரர்  சடங்கு  என்கிறார்கள்.  சிலர்  அதாவது  புதிய  முறைக்காரர்கள்  ஒப்பந்தம்  என்கிறார்கள்.  சடங்கு  என்று சொல்லுகின்றவர்கள்  உண்மையிலேயே  சடங்காகவே  கருதி  காரியங்களில்  லக்ஷியமில்லாமல்  நடத்துகிறார்கள்.  அதாவது  கல்யாணத்தில்  மாப்பிள்ளைக்கும்  பெண்ணுக்கும்  எவ்வித  உரிமையும்  இல்லை.  அதுபோலவே  சடங்கிலும்  கல்யாணக்காரருக்கும்  சடங்குக்கும்  யாதொரு  உரிமையுமில்லை.  எப்படியென்றால் ...

சம்பளக்  கொள்ளைக்  கொடுமை

சம்பளக்  கொள்ளைக்  கொடுமை

  இந்தியாவுக்கு  பிரிட்டிஷ்  அரசியல்  முறை  ஏற்பட்ட  பின்  உண்டான  கொடுமைகளில்  எல்லாம்  தலை  சிறந்த  கொடுமை  சம்பளக்  கொள்ளைக்  கொடுமையேயாகும்.  இக்கொடுமைக்குப்  பொறுப்பாளிகள்  பிரிட்டிஷாரே  என்று  சொல்லிவிட  முடியாது.  இந்தியர்களும்  சிறப்பாக  இந்திய  அரசியல்  கிளர்ச்சிகளும்  மற்றும்  இந்திய  தேசியமுமேயாகும். பிரிட்டிஷார்  தாங்கள்  அன்னியர்  என்னும்  பிரிவிலிருந்து  தப்பித்துக்கொள்ளவும்,  தேசியக்  கிளர்ச்சியின்  உள்  தத்துவம்  இன்னதென்று  தெரிந்து  அதற்கு  இணங்கவும்  தேசீயவாதிகள்  என்பவர்களின்  அபிலாசைகளைப்  பூர்த்தி  செய்யவும்  முற்பட்டதே  பிரிட்டிஷ்  அரசியல்  தந்திரத்தால்  இந்தியாவுக்கு  ஏற்பட்ட  கெடுதிகளுக்கெல்லாம்  காரணம்  என்று  சொல்லலாம். இன்றையத்தினம்  உலகத்தில்  எந்த  தேசத்திலும்  எவ்வளவு  செல்வம்  பொருந்திய  தேசத்திலும்  உள்ள  அரசாங்க  உத்தியோகங்களில்  இந்தியாவில்  இருந்துவரும்  சம்பளக்கொள்ளைக்  கொடுமை  இல்லை  என்றே  சொல்லுவோம். இந்திய  மக்களில்  ஒரு  மனிதனுடைய  ஒரு  நாளைய  சராசரி  வரும்படி  016  பை.  என்று  பொருளாதார  நிபுணர்களால்  கணக்கிடப் பட்டிருக்கிறது.  இது  இந்தியப்  பொருளாதார  நிபுணர்களும்  இந்திய  தேசீயவாதிகளும்  அவர்களது  தலைவர்களும் ...

திருப்பூர்  செங்குந்த  மகாஜன  சங்க  மகாநாட்டில்  தோழர்  ஈ.வெ.ரா.  சமதர்மம்

திருப்பூர்  செங்குந்த  மகாஜன  சங்க  மகாநாட்டில்  தோழர்  ஈ.வெ.ரா. சமதர்மம்

  தோழர்களே!  இன்று  இக்கூட்டத்தில்  “”சமதர்மம்”  என்னும்  பொருள்  பற்றிப்  பேசும்படியான  ஒரு  சந்தர்ப்பம்  கிடைத்தது  பற்றி நான்  பெரிதும்  மகிழ்ச்சியடைகின்றேன்.  சமதர்மம்  என்பதற்குப்  பலவேறு  தேசங்களிலும்,  சமூகங்களிலும்  பலவேறு  அர்த்தத்தில்  வழங்கி  வருகிறது.  சமதர்மம்  என்பது  சிற்சில  இடங்களில்  மதத்துக்கும்,  சில  இடங்களில்  கடவுளுக்கும்,  பிறிதும்  சில  இடங்களில்  பணக்காரனுக்கும்,  புரோகிதனுக்கும்  விரோதம்  என்றும்  கூறப்படுகிறது.  ஆனால்  பொதுவாக  இன்று  சமதர்மம்  என்னும்  சொல்  நாட்டிலுள்ள  ஏழை  மக்களின்  உள்ளத்திலே  கிளர்ச்சியூட்டி  ஆவலோடு  சமதர்மமொன்றே  தங்களின்  வாழ்வை  இன்பமயமாக்கும்  என்கின்ற  மனப்பான்மையை  உண்டாக்கி யிருக்கிறது.  ஆகவே  இன்று  சமதர்மத்தை  உச்சரிப்பது  மிக  சகஜமாகப்  போய்விட்டது.  சமீபத்தில்  ராஞ்சியிலும்  பாட்னாவிலும்  கூடிய  சமதர்மவாதிகளால்  சமதர்ம  திட்டம்  வகுக்கப்பட்டிருக்கிறது.  காந்தியாரும்  கூட  சமதர்மம்  ஆ÷க்ஷபகரமானதல்ல  என்கிறார்.  தோழர்  ஜவஹர்லால்  தான்  சமதர்மவாதி  என்றும்,  மக்கள்  சமூக  நலனுக்கேற்றது  சமதர்மம்  ஒன்றே  என்றும்  தெளிவாக  எடுத்துக்  கூறியிருக்கிறார்.  மனித சமூகத்தில்  100க்கு  90க்கு  மேற்பட்ட ...

இந்திய  சட்டசபைத்  தேர்தல்

இந்திய  சட்டசபைத்  தேர்தல்

  தோழர்  சத்தியமூர்த்தி  யாரை  ஏமாற்றப்போகிறார்? தோழர்  கு. சத்தியமூர்த்தி  சாஸ்திரிக்கு  இப்போது  சிறிது நெருக்கடியான  சமயம்  என்று  சொல்லலாம். ஏனெனில்  அவர்  எப்படியாவது  சமீபத்தில்  நடைபெறப்  போகும்  இந்திய  சட்டசபை  அங்கத்தினர்  பதவிக்கு  ஒரு  அபேக்ஷகராக  நிற்க  வேண்டுமென்று  கருதி  இருக்கிறார்.  சென்னையில்  நிற்பதற்கு  அவருக்குத்  தைரியமில்லை,  இருக்கவும்  நியாயமில்லை.  ஏனென்றால்  சென்னை  ஜனங்கள்  தோழர்  சத்தியமூர்த்தியை  நேரில்  அறிவார்கள்.  இந்திய  சட்டசபையின்  சென்னைத்  தொகுதியானது  சென்னை  சட்டசபையின்  யுனிவர்சிட்டித்  தொகுதி  மாதிரி  100க்கு  95  பேர்கள்  பார்ப்பன  ஓட்டர்களாய்  இருக்கும்  தொகுதியல்ல.  பார்ப்பனரல்லாதார்  பெரும்பான்மையோருடைய  ஓட்டுகளைப்  பெற்றாக  வேண்டும்.  ஆதலால்  அங்கு  சென்னையில்  நின்றால்  கட்டின  பணம்  வாபீஸ்  பெறுவது  கூட  சில  சமயங்களில்  கஷ்டமாகிவிடும். நமது  மாகாணத்தில்  பொதுவாக  பார்ப்பனர்களுக்கு  சிறப்பாக  வர்ணாச்சிரமப்  பார்ப்பனர்களுக்கு  தகுதியாய்  இருக்கும்  தொகுதி  தஞ்சை,  திருச்சி  ஜில்லாக்களின்  தொகுதியாகும்.  இந்த  ஜில்லாக்களின்  பார்ப்பனரல்லாதாரே  உத்தியோகம்  பெறவும்  மந்திரியாகவும்  ஸ்தல  ஸ்தாபனங்களில்  தலைமைப் ...

சென்னையில்  ஜஸ்டிஸ்  கட்சிக்  கூட்டம்

சென்னையில்  ஜஸ்டிஸ்  கட்சிக்  கூட்டம்

  தலைவரவர்களே!  தோழர்களே!! தலைவரவர்கள்  தெரிவித்த  விஷயங்கள்  இயக்க  நலனைக்  கருதி  அவசியம்  கவனிக்கத்தக்கதாகும்.  எல்லா  விஷயத்தையும்விட  நமது  கொள்கை  என்ன?  திட்டம்  என்ன?  என்பதைப்  பொது  ஜனங்கள்  அறியும்படி  செய்ய  வேண்டும்.  ஜஸ்டிஸ் கட்சி  என்றால்    N 4000  ரூபாய்  சம்பளத்துக்கும்  மந்திரி  பதவிக்கும்  ஊர்  சிரிக்கச்  சண்டை  போட்டுக்  கொண்டிருக்கும்  கூட்டம்  என்று  இனியும்  பாமர  ஜனங்கள்  சொல்லும்படி  நாம்  விட்டுக்  கொண்டிருக்கக்  கூடாது.  காங்கிரசுக்காரர்கள்  என்பவர்களின்  உள்  எண்ணமும்,  நாணையமும்  எப்படி  இருந்தாலும்  அவர்கள்  ஏதோ  இரண்டொரு  கொள்கைகளைச்  சொல்லி,  அதைப்  பெரிதாக்கிக்  காட்டி  அதற்காக  அடியும்  உதையும்,  நஷ்டமும்  கஷ்டமும்  சிறைவாசமும்  பெற்றவர்கள்  என்கின்ற  பெயரைப்  பெற்றிருக்கிறார்கள்.  அவர்களோடு  இப்பொழுது  திடீரென்று  போட்டி  போடுவதென்றால்  அதுவும்  ஒரு  விளக்கமான,  யாவருக்கும்  தெரியும்படியான  ஒரு  கொள்கையும்,  திட்டமும்  இல்லாமல்  போட்டி  போடுவதென்றால்  சுலபமான  காரியமல்ல  என்பதே  எனது  அபிப்பிராயம்.  “”கட்சிக்குக்  கொள்கை  இருந்தாலும்  இல்லாவிட்டாலும்  பணமும்,  அதிகாரமும், ...

யாகப்  புரட்டு   ஜீவகாருண்யம்

யாகப்  புரட்டு  ஜீவகாருண்யம்

  தலைவரவர்களே!  தோழர்களே! ஜீவகாருண்யத்தைப்  பற்றி  நான்  பேச  வந்திருப்பது  உங்களில்  பலருக்கு  வேடிக்கையாகக்  காணப்படலாம்.  ஏனெனில்,  நான்  நீங்கள்  பெரும்பாலும்  கருதி  இருக்கிற  ஜீவகாருண்யத்தைச்  சேர்ந்தவனல்ல  என்று  நீங்கள்  கருதி  இருப்பதேயாகும்.  ஜீவ காருண்யம்  என்கின்ற  வார்த்தைக்கு  ஒவ்வொருவர்  ஒவ்வொரு  விதமான  அர்த்தம்  கொண்டிருக்கிறார்கள்.  சிலர்  மாம்சம்   சாப்பிடாமல்  இருந்தால்  அதுவே  பெரிய  ஜீவகாருண்யமென்றும்,  மற்றப்படி  ஜீவர்களுக்கு  எவ்வித  மன  வருத்தத்தையும்,  உடல்  வருத்தத்தையும்  செய்தால்  குற்றமில்லை  என்றும்  கருதி  இருக்கிறார்கள்.  சிலர்  ஜீவர்களை  ஹிம்சைப்படுத்தாமல்  இருந்தால்  போதும்  என்றும்,  மாம்சம்  சாப்பிடுவதைப்  பற்றிக்  குற்றமில்லை  என்றும்  கருதி  இருக்கிறார்கள். சிலர்,  சில  ஜந்துக்களை  மாத்திரம்  இம்சைப்படுத்தக்  கூடாதென்றும்,  மற்ற  ஜந்துக்களைப்  பற்றிக்  கவலை  இல்லை  என்றும்  கருதி  இருக்கிறார்கள்.  ஜீவகாருண்யத்திற்கு  இந்தப்படி  எத்தனையோ  விதமான  கருத்துக்களும்,  தத்துவங்களும்  இருக்கின்றன. விவரமாய்ச்  சொல்ல  வேண்டுமானால்  ஜீவகாருண்யம்  என்பது  ஒவ்வொரு  தேசத்துக்கும்,  ஒவ்வொரு  மதத்துக்கும்,  ஒவ்வொரு  ஜாதிக்கும்  ஒவ்வொரு  விதமாய்க்  கருதப்படுகின்றது....

ஜஸ்டிஸ்  கட்சி

ஜஸ்டிஸ்  கட்சி

  ஜஸ்டிஸ்  கட்சித்  தலைவர்  தோழர்  பொப்லி  ராஜா  அவர்களும்,  தென்னிந்திய  நல  உரிமைச்  சங்க  அக்கிராசனர்  தோழர்  செட்டி  நாட்டுக்  குமாரராஜா  அவர்களும்  கக்ஷி  சம்மந்தமான  சில  விஷயங்களைப்  பற்றி  யோசிப்பதற்காகவென்று  இம்மாதம்  7,  8  தேதிகளில்  மீட்டிங்குகள்  கூட்ட  ஏற்பாடு  செய்திருப்பதாய்  கட்சி  அங்கத்தினர்களுக்குத்  தனித்தனி  அழைப்பு  அனுப்பி  இருக்கிறார்கள். அக்கட்சியானது  அதாவது  தென்னிந்திய  பார்ப்பனரல்லாதார்  கட்சியானது  அரசியலிலும்,  சமூக  இயலிலும்  தாழ்த்தப்பட்ட  மக்களுக்கும்,  பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கும்,  வாழ்க்கைப்  போட்டியில்  சம  சந்தர்ப்பம்  இல்லாத  மக்களுக்கும்  விடுதலையும்,  சமத்துவமும்  அளிப்பதற்காக  என்று  தோற்றுவிக்கப்பட்டது  என்கின்ற  உண்மை  யாவருமறிந்ததாகும்.  அப்படிப்பட்ட  ஜஸ்டிஸ்  கட்சியானது  இப்போது  நாளடைவில்  செல்வந்தர்களான  முதலாளிமார்கள்,  ஜமீன்தார்கள்  ஆகியவர்கள்  ஆதிக்கத்திற்குள்ளாகி  அவர்களது  நன்மைகளைப்  பாதுகாத்துக்  கொள்ளவும்,  பெருக்கிக்  கொள்ளவுமான  வழிகளுக்கே  பயன்படக்கூடிய  மார்க்கத்தில்  திருப்பப்பட்டு  வருகின்றது  என்கின்ற  விஷயம்  பார்ப்பனரல்லாத மக்களில்  பெரும்பான்மையோர்  அறிந்ததாகும். ஆனாலும்  அதை  பழயபடி  தாழ்த்தப்பட்ட  பிற்படுத்தப்பட்ட  மக்கள்  விடுதலைக்கும்,  சமத்துவத்துக்கும்  திருப்ப ...

ஸ்தல  ஸ்தாபனங்கள்

ஸ்தல  ஸ்தாபனங்கள்

  ஸ்தல  ஸ்தாபன  சுயாட்சி  என்று  சொல்லப்படும்  ஜில்லா  போர்டு,  முனிசிபாலிட்டி,  தாலூகாபோர்டு,  கிராமப்  பஞ்சாயத்து  முதலியவைகள்  அரசாங்கத்தின்  நேர்  பார்வையிலிருந்து  “”ஜனநாயகத்துவத்”திற்கு  மாற்றப்பட்டதின்  பயனாக,  சுமார்  இந்த  30  வருஷ  காலத்தில்  பொது  ஜனங்களுக்கு  ஏதாவது  பயனேற்பட்டதா  அல்லது  அரசாங்க  மேற்பார்வையின்  கீழ்  இருந்தை  விட  மோசமான  நிலையில்  இருக்கின்றனவா  என்பது  யோசிக்க  வேண்டியதும்,  அதன்  உண்மையைப்  பாமர  மக்கள்  அறியும்படி  செய்ய  வேண்டியதும்  அவசியமான  காரியமாகும். நம்மைப்  பொருத்தவரை ஸ்தல ஸ்தாபன  நிர்வாகத்தில்  கலந்திருந்ததைக்  கொண்டும்,  சில  ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களுக்குத்  தலைமை  வகித்து  நிர்வாகப்  பொருப்பை  ஏற்றிருந்ததைக் கொண்டும்  ஏற்பட்டுள்ள  அனுபவத்தையும்  மற்றும்  அனேக  ஸ்தல  ஸ்தாபன  நிர்வாக  விஷயங்களைப்  பார்த்தும்,  கேட்டும்  உள்ள  அனுபவத்தைக்  கொண்டும்,  ஏதாவது  சொல்ல  வேண்டுமென்றால்,  ஸ்தல ஸ்தாபன  ஆட்சி  என்பது  பொதுஜனங்கள்  ளகையில்  இருப்பதைவிட,  அரசாங்கத்தின்  நேர்ப்  பார்வையிலிருந்து  வந்ததும்,  இனியும்  அப்படியே  இருந்து  வருவதும்  மேலானது  எனக்  கூறுவோம்....

மரணம்   அநுதாபம்

மரணம்  அநுதாபம்

  நமது  இயக்க  அபிமானியான  கோட்டையூர்  தோழர்  ராம.  அள.  சிதம்பரம்  அவர்களின்  புதல்வன்  திடீரென்று  இறந்த  செய்திகேட்டு  திடுக்கிட்டோம்.  இச்செய்தி  கேட்ட  சில  நாட்களுக்குள்  அவரது  துணைவியாரும்  உயிர்  துறந்தார்  என்ற  செய்தி  கேட்க  பெரிதும்  வருந்துகிறோம்.  “”உலகில்  தோன்றி  மறைவது  இயற்கை”  என்றாலும்,  இத்தகைய  கஷ்ட  நஷ்டத்தைக்  கேட்க  மனம்  வருந்தாமலிருக்க  முடியவில்லை.  உலக  இயற்கையை யுணர்ந்த  தோழர்  ராம.அள. சிதம்பரம்  அவர்கட்கு  நாம்  ஒன்றும்  அதிகம்  கூறத்  தேவையில்லை.  நமது  அனுதாபம்  மட்டும்  அவருக்கு  உரித்தாகுக! புரட்சி  இரங்கல் செய்தி  27.05.1934

மத நம்பிக்கையின்  விளைவு

மத நம்பிக்கையின்  விளைவு

  வங்காளத்தில்  ஒரு  பெண்  தனது  கணவன்  நோய்வாய்ப்பட்டு  சாகுந் தருவாயிலிருப்பதைக்  கண்டு  கணவனுக்கு  முன்  தான்  மாங்கல்ய  ஸ்திரீயாக  இருந்து  கணவனுடன்  உடன்கட்டை  ஏற  வேண்டுமென்று  கருதி  மண்ணெண்ணையை  மேலே  ஊற்றி  நெருப்பு  வைத்துக்  கொண்டு  இறந்து  போனதாக  அ.பி.  செய்தி கூறுகின்றது. இது  எவ்வளவு  பரிதாபகரமான  விஷயம்?  மத  நம்பிக்கையினால்  எவ்வளவு  கொடுமைகளும்,  கேடுகளும்  விளைகின்றன  என்பதற்கு  இதைவிட  வேறு  என்ன  சாக்ஷியம்  வேண்டும். “”இந்  நிகழ்ச்சிக்கு  மத  நம்பிக்கை  காரணமல்ல.  காதலே  காரணம்,  கற்பே  காரணம்”  என்று  சிலர்  தத்துவார்த்தம்  சொல்லி  மதத்தைக்  காப்பாற்ற  இருக்கிறார்கள்  என்பது  நமக்குத்  தெரியும்.  அப்படிப்பட்டவர்களை  ஒன்று கேட்கின்றோம். காதல்  என்றும்  கற்பு  என்றும்  ஒன்று  இருப்பதாகவே  வைத்துக்  கொண்டு  பார்ப்போமானாலும்  இன்று  உலகில்  புருஷனை  சாகக்  கொடுத்துவிட்டு  விதவையாகவோ  அல்லது  வேறு  ஒருவரை  மணந்தோ,  இரகசியமாகவோ  இயற்கையை  அனுபவித்துக்  கொண்டிருக்கும்  பெண்கள்  எல்லோரும்  அவரவர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல்  கற்பு இல்லாமல் ...

இந்திய  சட்டசபைத்  தேர்தலும்  கீ.ஓ.கு.ம்

இந்திய  சட்டசபைத்  தேர்தலும்  கீ.ஓ.கு.ம்

  இப்போது  அரசியல்  உலகில்  இந்திய  சட்டசபைத்  தேர்தல்  பேச்சே  எங்கு  பார்த்தாலும்  பிரமாதமாகப்  பேசிக்  கொள்ளப்படுகின்றது.  கூடிய  சீக்கிரத்தில்  இந்திய  சட்டசபை  கலைக்கப்பட்டு  இவ்வருஷத்திலேயே  புதிய  தேர்தல்  நடைபெறப்  போகின்றது  யாவரும் அறிந்ததே. இந்திய  சட்டசபை  ஏற்பட்டு  சமீபகாலம்  வரை  அதாவது  சுய  மரியாதை  இயக்கம்  தோன்றும்  வரை,  நமது  மாகாணத்தில்  அது  (இந்திய  சட்டசபை)  பார்ப்பனர்களுக்கே  ஏகபோக மான்யமாயிருந்தது.  இதன்  காரணமாகவே  தமிழ்நாட்டில்  பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  சமூகம்  மனிதத்  தன்மையுடன்  இல்லையென்றும்,  அறிவிலும்  ஆற்றலிலும்  மிக  பிற்பட்டவர்கள்  என்றும்  இந்தியா  முழுவதும்  விஷமப்பிரசாரம்  செய்வதற்கு  பார்ப்பனர்களுக்கு  மிக  அனுகூலமுமிருந்து  வந்தது.  அதற்கேற்றார்ப் போல்  இந்திய  பத்திரிகை  உலகமும்  எங்கு  பார்த்தாலும்  ஏதாவது  ஒரு  வகையில்  பார்ப்பன  ஆதிக்கத்தில்  இருப்பதால்  பத்திரிகைகள்  மூலமும்  அவ்விஷமப்  பிரசாரம்  வெற்றி  பெற  அனுகூலமேற்பட்டது. இப்போது  தோழர்கள்  சர்.ஆர்.கே.  ஷண்முகம்,  ஏ.  ராமசாமி  முதலியார்  முதலியவர்கள்  இந்திய  சட்டசபைக்குப்  போக  ஏற்பட்டதால்  தென்னிந்தியப்  பார்ப்பனரல்லாத ...

சித்ரவதை

சித்ரவதை

  23  ஆண்டுகள்  சித்ரவதை “”மனித  சமூகத்திற்காக  என்று  சில  ஒழுக்கங்களையும்,  சில  நடவடிக்கைகளையும்  ஏற்படுத்தி  அவை  கிரமமாய்  நடந்தேறுவதற்காக  பயத்தை  உண்டு  பண்ணும்  படியான  நிபந்தனைகளைக்  கற்பித்து,  அக்கற்பனைகளுக்கு  மதக்  கொள்கை என்று  பெயரிட்டு,  அம்  மதக்  கொள்கைக்கு  காப்பளிப்பதற்காக  கடவுளை உண்டாக்கி  வைக்கப்பட்டிருக்கிறது”  என்பதும்  மதத்திலும்  கடவுளிலும்   நம்பிக்கையுள்ள  அறிவாளிகள்  என்று  தங்களை  சொல்லிக்  கொள்ளும்  கடவுள்  மதக்காப்பாளர்களின்  வாதமாகும். மேல்  குறிப்பிட்ட  ஒழுக்கமும்  நடவடிக்கைகளும்  நியாயமானதா,  பொதுவானதா,  அவசியமானதா  என்பதைப்  பற்றிய  விவகாரத்தில்  இப்போது  நாம்  தலையிடவில்லை  என்றாலும்,  கடவுளுக்கும்,  மதத்துக்கும்  காப்பளிப்பதற்காக  இந்த  அறிவாளிகள்  சொல்லும்  சமாதானம்  சரியானதா?  விவகாரத்துக்கு  நிற்கக்  கூடியதா?  என்பதைப்  பற்றி  நாம்  இந்த  வியாசத்தில்  விவரிக்கிறோம். மனிதனுக்குள்  புகுத்தப்பட்டிருக்கும்  மதப்பித்தானது  மதுவை  உட்கொண்டவனுக்கு  எப்படி  அவன்  சொந்த  புத்தி  மறைந்து  அவசியமற்றதும்,  ஒழுங்கும்  அறிவும்  அற்றதுமான  காரியங்களையே  நினைக்கவும்,  பேசவும்,  செய்யவும்  ஆளாகிறானோ  அதே  போல்  மத  வெறியானது  குறிப்பிட்ட ...

பகுத்தறிவு

பகுத்தறிவு

  “”பகுத்தறிவு”  பத்திரிகை  தொடங்கி  சற்று  ஏறக்குறைய  ஒரு  மாத  காலமே  ஆகின்றது.  நடந்த  வரை  லாபமும்  இல்லை  நஷ்டமும்  வெகு  சுருக்கமே  ஆகும்.  இந்தச்  சிறிது  காலத்தில்  சொல்ப  நஷ்டத்தில்  மக்களுக்கு  ஏதோ  ஒரு  அளவில் குறிப்பிடத்தக்க  ஒரு  பலனைக்  கொடுத்திருக்கின்றது  என்று  தைரியமாய்  சொல்லலாம்  என்றாலும்,  இனியும்  இது  நடத்தப்பட  வேண்டியது  அவசியமில்லை  என்றே  கருதுகிறோம்.  பத்திரிகைகள்  மனித  சமூகத்திற்கு  அவசியமானது  என்பதில்  நமக்குச்  சிறிதும்  அபிப்பிராய  பேதமில்லை.  ஆனால் அவை  இரண்டு  காரியங்களுக்கே  முக்கியமான  தேவையாகும்.  ஒன்று  உலக  வர்த்தமானங்களை  மக்களுக்கு  அறிவித்து  மக்களது  அறிவை  உலக  இயலை  உணர்ந்து  நடந்து  கொள்ளச்  செய்வது.  இரண்டு  புதிய  அபிப்பிராயங்களை  வெளிப்படுத்தி  மனித  சமூகத்தை  முற்போக்கடையச்  செய்வதாகும். ஆனால்  இன்றைய  பத்திரிகை  உலகமானது  இந்த  இரண்டு  காரியங்களின்  பேராலேயே  பெரிதும்  நடத்தப்படுவதாக  சொல்லப்படு மானாலும்,  உண்மையில்  பார்க்கப்  போனால்  வெகு  சில  பத்திரிகைகளே  இக்கொள்கைக்கேற்ப  நடத்தப்படுவதாகக்  காணப்படும். பத்திரிகை ...

“”சுயராஜ்யக்  கக்ஷி  செத்தது  அதுநீடூழி  வாழ்க”

“”சுயராஜ்யக்  கக்ஷி  செத்தது  அதுநீடூழி  வாழ்க”

  சுயராஜ்யக்  கக்ஷியாரின்  யோக்கியதை  நாடறிந்ததென்றும்  அதற்கு  நல்ல  பேர்  இல்லையென்றும்  ஒரு  வாரத்திற்குள்ளாகவே  அதன்  தலைவர்கள்  என்போர்கள்  தெரிந்து  கொண்டு  விட்டதால்,  அதை  அது  பிறந்த  “”தீட்டு”  வீட்டிற்குள்ளாகவே  கழுத்தைத்  திருகி  கொன்றுவிட்டு  காங்கிரசே  சட்ட  சபைகளுக்கு  போட்டி  போட  வேண்டும்;  ஆனால்  சுயராஜ்யக்  கக்ஷி  பிரமுகர்களே  சட்ட  சபை  போட்டி  கமிட்டியில்  இருக்க  வேண்டும்  என்று  ஏற்பாடு  செய்து  கொண்டார்கள்.  இது  மக்களை  ஏய்க்கச்  செய்த  சூழ்ச்சியே  ஒழிய,  மற்றபடி  சட்டசபையில்  போய்ச்  செய்யப்போகும்  காரியத்தில்  எவ்வித  மாறுதலும்  இல்லை  என்பதோடு,  சட்ட  சபைக்கு  அபேக்ஷகர்களாக  தெரிந்தெடுக்கப்  போகும்  நபர்களிலும்  எவ்வித  மாறுதல்களும்  ஏற்படப்  போவதில்லை. புரட்சி  துணைத் தலையங்கம்  27.05.1934  

தோழர்  ஈ.வெ.ரா.  ஈரோடு  விஜயம்

தோழர்  ஈ.வெ.ரா.  ஈரோடு  விஜயம்

  தோழர்களே! நான்  சிறைவாசம்  சென்றுவிட்டு  வந்ததைப்  பாராட்டுவதற்காக  என்று  இக்கூட்டம்  கூட்டப்பட்டு  என்னைப்பற்றி  பலர்  பலவிதமாகப்  புகழ்ந்து  பேசி  இருக்கிறார்கள்.  இது  ஒருவித  பழக்க  வழக்கத்தை  அனுசரித்திருப்பதாக  மாத்திரம்  நான்  கருதுகிறேனே  ஒழிய  இதில்  ஏதாவது  நல்ல  பொருள்  இருப்பதாக  நான்  கருதவில்லை.  முதலாவதாக  இப்பொழுது  நான்  மற்றவர்களைப்  போல்  சிறை  செல்ல  வேண்டுமென்று  கருதி  நானாக  சிரைக்குப்  போகவில்லை.  ஆனால்  சிறைக்குப்  போகக்  கூடிய  சந்தர்ப்பம்  ஏற்பட்டால்,  அதற்காக  பயந்து  பின்  வாங்காமல்  அதையும்  ஒரு  நன்மையாகவே  பயன்படுத்திக்  கொள்ளலாமென்பதைக்  காட்டுவதற்காகவே நான்  சிறை  செல்ல  நேர்ந்தது. அதாவது  குடி  அரசு  பத்திரிகையில்  என்னால்  எழுதப்பட்ட  ஒரு  சாதாரணமானதும்,  சப்பையானதுமான  வியாசத்திற்காகத்தான்  நான்  சிறைக்குப்  போக  நேரிட்டதே  தவிர,  மற்றப்படி  செல்லத்தக்க  ஒரு  சரியான காரியம்  செய்துவிட்டு  சிறைக்குப்  போகவில்லை.  சர்க்கார்  இந்தக்  “”குடி  அரசு”ப்  பத்திரிகையின்  பழைய  இதழ்களைப்  புரட்டிப்  பார்த்தால்  என்னை வருடக்கணக்காய்  தண்டிக்கக்கூடியதும்,  நாடு ...

தோழர்  ஈ.வெ.ரா.  விடுதலை

தோழர்  ஈ.வெ.ரா.  விடுதலை

  தோழர்  ஈ.வெ.ராமசாமி  அவர்கள்  15ந்  தேதி  ராஜமகேந்திரம்  ஜெயிலிலிருந்து  விடுதலையாகி,  16ந்  தேதி  சென்னை  வந்து  அங்கிருந்து  அன்றே  புறப்பட்டு  17ந்  தேதி  ஈரோடு  வந்து  சேர்ந்தார்.  அரக்கோணம்,  காட்பாடி,  ஜோலார்பேட்டை,  சேலம்  ஆகிய  ஸ்டேஷன்களுக்கு  ஆங்காங்குள்ள  சுயமரியாதை  இயக்கத்தைச்  சேர்ந்த  நண்பர்கள்  வந்து  சந்தித்துப்  பேசிப்  போனார்கள். ராஜமகேந்திரம்  ஜெயிலில்  வெயில்  கொடுமையால்  சிறிது  கருத்தும்  இளைத்தும்  போயிருக்கிறார்.  ஆனால்  உடல்  சௌக்கியமாய் இருப்பதாக  நினைத்துக்  கொண்டிருக்கிறார்.  சமீபத்தில்  வெயில்  கொடுமைக்காக  எங்காவது  குளிர்ச்சியான  இடத்துக்குப்  போகக்  கருதி  இருக்கிறார். ஜெயிலில்  தோழர்  ஈ.வெ.ரா.வுக்கு  தோழர்  வரதராஜுலு  நாயுடு  அவர்கள்  முயற்சியில்  அகிலாஸ்  சௌகரியம்  கிடைக்கப்பட்டது  என்றாலும்,  அந்த  ஜெயிலில்  கிளாஸ்  பிரிவுகளுக்குப்  போதிய  சௌகரியம்  இல்லாததால்  ஆகிலாஸ்  கைதியாகவே  இருந்து  வருகிறேன்  என்று  ஜெயில்  அதிகாரிகளுக்குச்  சொல்லிவிட்டு  பி.கிளாஸ்   கைதியாகவே  இருந்து  வந்தார்.  அங்கு  சாப்பாடும்  ஒரு  பத்திரிகையும்  தவிர  மற்றபடி  இ  கிளாஸ்  கைதி  போலவே ...

காங்கிரஸ்  நிலை

காங்கிரஸ்  நிலை

  அகில  இந்திய  தேசிய  காங்கிரஸ்  என்பது  தோழர்  காந்தியார்  அவர்கள்  கைப்பிள்ளையான  பிறகு,  தக்கதொரு  விளம்பரமும்,  மதிப்பும்  பெற்றது  என்பதை  யாரும்  மறுக்க  முடியாது.  ஆனால்,  அதனால்  ஏற்பட்ட  நன்மையென்ன  என்று  பார்ப்போமானால்  ஒன்றுமில்லை  என்று  சொல்லுவதோடு  மாத்திரம்  நின்று  விடுவதற்கில்லாமல்,  இந்திய  மனித  சமூகத்தின்  பத்து  வருஷத்திய  முன்னேற்றத்தைத்  தடுத்து  விட்டதோடு,  இந்தியா  தேசத்தை  இருபது  வருஷ  கால  தூரம்  பின்னால்  போகும்படியும்  திருப்பிவிட்ட  தென்பது  நமது  அபிப்பிராயம்.  இது  பொது  விஷயங்களைப்  பற்றியதாகும். இந்திய  அரசியல்  விஷயத்தைப்  பற்றி  கவனிப்போமானால்,  காங்கிரசின்  இன்றைய  நிலையானது  192324ம்  வருஷத்தின்  நிலையே  யாகும்.  எப்படி  என்றால்  “”ஒத்துழையாமை  தற்காலீகமாக  ஒத்திவைக்கப்பட்டது”  என்ற  தீர்மானம்  அப்போது  செய்தவுடன்  அது  எந்த  நிலை  அடைந்ததோ  அதே  நிலையை  அதாவது  “”சட்ட  மறுப்பை  தற்காலீகமாக  நிறுத்தி  வைக்கப்பட்டிருக்கிறது”  என்கின்ற  நிலைக்கு  வந்திருக்கின்றது.  இதைத்  தெளிவான  வார்த்தையில்  சொல்ல  வேண்டுமானால்,  காங்கிரஸ்  10  வருஷத்திற்கு  முன் ...

முஸ்லீமும்  பிராமணரும்  ஒன்றா?

முஸ்லீமும்  பிராமணரும்  ஒன்றா?

  வீரசிங்கம்பேட்டைக் கலவர வழக்கை  விசாரிக்க  ஆரம்பித்துவிட்டார்கள்.  அதற்காக  ஸ்பெஷல்  மாஜிஸ்ட்டிரேட்டும்  ஏற்படுத்தி  இருக்கிறார்கள்.  ஒருவாரமாக  விசாரணையும்  நடந்துவருகிறது. இவ்  வழக்கு  நடந்துவருகையில்  அப்பிரதேச  நிலையைச்  சரிப்படுத்தத்  தண்டப்  போலீசாரைச்  சர்க்கார்  நியமித்திருக்கிறார்கள்.    இத்  தண்டப்  போலீசின்  செலவினத்தை  இக்கிராமவாசிகளே  ஒப்புக்கொள்ள வேண்டுமென்று  சர்க்கார்  அறிக்கை  கூறுகிறது.  இதைப்பற்றி  நாமெதும்  கூற  விரும்பவில்லை.  ஆனால்  இத்  தண்டப்  போலீசுக்கு  ஆகும்  செலவீனம்  இருக்கிறதே  அதைப்  பற்றி  விபரம்  கூறும்போது  மேற்படி  கிராமவாசிகள்  கொடுக்க  வேண்டுமென்று  சொல்லிவிட்டு  மேற்படி  கிராமத்திலுள்ள  “பிராமணர்கள்  முஸ்லீம்கள்’  இவர்கள்  நீங்கலாக  என்று  கூறியிருப்பதுதான்  நமக்குப்  பெரும்  சந்தேகத்தை  உண்டாக்குகிறது. இன்றைக்கெல்லாம்  மாதம்  450  ரூபாய்க்குள்தான்  டிவிஷனல்  மாஜிஸ்ட்டிரேட்  தெண்டச்  சிலவு  மாதா மாதம்  விதிக்கக்கூடும்.  300  வீடுகள்  அங்கே  இருக்கிறதென்று  வைத்துக்கொண்டால்,  வீட்டுக்கு  மாதம்  ஒன்றரை  ரூபாய்  வரக்கூடும்.  ஒரு  வருடத்திற்குப்  பதினெட்டு  அல்லது  இருபது  ரூபாய்க்கு  அதிகம்  வருவதற்கில்லை.  இது  ஓர் பிரமாதமான  சிலவென்றுகூட  நாம் ...

சுயராஜ்யக்  கட்சி

சுயராஜ்யக்  கட்சி

  அடுத்த  தேர்தலை  மனதில்  வைத்துக்கொண்டு  மீண்டும்  காங்கிரஸ்காரர்கள்  தங்கள்  தேர்தல்  முழக்கத்தை  ஆரம்பித்துவிட்டார்கள்.  அவர்கள்  தேர்தல்  முழக்கம்  அளவு  கடந்தது  என்று  சொல்லத்தக்க  நிலைக்கு  அவர்கள்  வந்துவிட்டார்கள்.  அத்துடன்  மட்டுமல்ல.  இவர்கள்  இந்நாட்டு  மக்களை  என்றென்றும்  தங்கள்  காலின்  கீழ்  மிதித்தே  வாழ்வதற்கு  எதைச்  செய்ய  வேண்டுமோ  அதையும்  செய்து  வருகிறார்கள். இம்  முறையானது  இவர்கள்  ஏழை  மக்களை  இதுவரை  ஏமாற்றியதைவிட  கொடுமையானது. சீர்திருத்தத்தில்  வரும்  பங்குவிகிதங்கள்  இந்நாட்டில்  இதுவரையில்  இல்லாத  முறையிலெல்லாம்  வரவிருக்கிறது.  இதை  மக்கள்  சாதாரணமாகக்  கவனித்தால்  தங்களின்  தந்திர  முறைகளை  உணர்ந்து  தங்களைத்  தட்டிப்  பேசித்  தாக்க  ஆரம்பிப்பார்கள்.  இப்படி  மக்கள்  விழிக்காதிருக்க  என்ன  செய்வதென்று  யோசித்து  அத்  துறையில்  இறங்கிவிட்டார்கள்.  சீர்திருத்தத்தில்  தங்களுக்கு  வெறுப்பிருப்பது  போலவும்  வெறுப்புடைய  இந்த  சீர்திருத்தத்தால்  மகத்தான  பிளவு  இந்நாட்டில்  உண்டாகுமென்று  தாங்கள்  நம்புவதாகவும்  இத்தகைய  பயனற்றதையும்,  பிளவு  உடையதையும்,  வெள்ளைக்காரர்கள்  தங்கள்  மீதும்  தங்கள்  நாட்டுமீதும்  பலவந்தமாக  திணிப்பதாகவும், ...

அன்சாரியும்  அபேதவாதமும்

அன்சாரியும்  அபேதவாதமும்

  அளவுக்கு  மேற்பட்ட  பிரசாரத்துக்குப்  பின்  அகில  இந்திய  காங்கிரஸ்  காரியக்கமிட்டி  அங்கத்தினர்களும்,  அகில  இந்திய  சுயராஜ்யக்  கட்சியின்  தூண்களும்  ராஞ்சியில்  கூடினார்கள்.  காந்தியார்,  ஆச்சாரியார்,  சரோஜினியார்  முதலிய  பழைய  பிரபல  தலைவர்கள் அங்கு  விஜயமானார்கள்.  அந்தரங்கமாகவும்,  பகிரங்கமாகவும்,  சம்பாஷணை  மூலியமும், பல  கூட்டங்கள்  நடந்தது.  கடைசியாய்  சில  தீர்மானங்கள்  செய்ததாக  எல்லா  பத்திரிகைகளுக்கும்  கிடைக்கும்படி  செய்தி  அனுப்பி  இருக்கிறார்கள். இது  வரையில்,  சுயராஜ்யக்  கட்சியார்  சட்டசபையில்  போய்  என்ன  செய்யப்போகிறோம்  என்பதை  பற்றி  பல  பிரசங்கங்கள்  செய்திருக்கிறார்கள்.  இவையாவும்  ஒன்றுக்கொன்று  மிகுந்த  முரண்பட்டதாகவே  இருந்து  வந்தது.  சீர்திருத்த  அறிக்கையை  கண்டிப்பது  மட்டும்  எங்கள்  நோக்க  மென்பவர்களும்,  முஸ்லீம்களுக்கு  அதிக  சலுகை  காட்டப்பட்டதை  மட்டும்  கண்டித்தவர்களும்  சட்ட  சபையில்  புகுந்து  சர்க்காரை  திக்கு  முக்கலாடச்  செய்வதே  எங்கள்  நோக்கமென்றவர்களும்,  காந்தி  சொன்ன  ஆலயப்பிரவேச  தீர்மானத்துக்காகவே  சட்ட  சபை  போகிறோம்  என்றவர்களும்,  சட்ட  சபையில்  வரும்  ஆலயப்பிரவேச  மசோதாவை  தோற்கடிக்கவே  நான்  போகிறேன் ...

சென்னை  கார்பரேஷனில்

சென்னை  கார்பரேஷனில்

  படைஎடுப்பா? சென்னையில்  மே  மாதம்  கடைசி  வாரத்தில்  நடக்கும்  கார்பரேஷன்  கூட்டத்தன்று,  சென்னையில்  வேலையற்று  பசி  பட்டினியால்  வருந்தி வாடும்  தொழிலாளர்களின் கூட்டம்  ஒன்று  திரண்டு  சென்று  சென்னைக்  கார்பரேஷன்  கட்டிட  வாயிலில்  முற்றுகையிடுமென்று  இன்று  ஓர்  செய்தி  கிடைத்திருக்கிறது.  இது  வாஸ்தவமானால்  எந்த  எண்ணத்துடன்  இது  ஆரம்பிக்கப்பட்ட  போதிலும்  இதை  வரவேற்கிறோம். இம்மாகாணத்தின்  தலைநகரான  சென்னையில்  “”உயர்தரப்  படிப்பு”  படித்தவர்கள்  மட்டும்  வேலையில்லாது  2400க்கு  அதிகம்  இருப்பதாகவும்,  இவையன்றி,  தங்க  இடமோ  செய்ய  வேலையோ  இல்லாது,  எச்சல்  இலை  சோற்றை  தின்றுவிட்டு டிராம்வே  லையன்களிலும்,  வால்டோக்ஸ்  ரோட்டிலும்,  சாக்கடை  ஓரங்களிலும்  படுத்துறங்கி  காலம்  கழிப்போர்  8000க்கு  அதிகம்  இருப்பதாகவும்,  இவைகளன்றி மாமூல்  தொழிலற்ற  தோழர்களும்  உண்டு.  உணர்ந்தவர்களுக்கு  இச்செய்தி  ஆச்சர்யத்தைக்  கொடுப்பதிற்கில்லை. ஆனால்  இந்த  வேலையற்ற  தொழிலாளிகளைத்  திரட்ட  முயலுகிறவர்கள்  பெயரைக்  கேட்டே  சிறிது  கவலைப்படுகிறோம்.  தான்  ஏழைகளின்  தாதா!  என்று  பத்திரிகைகளில்  விளம்பரப்படுத்திக்  கொண்டு  ஏமாந்தவர்களை  உனக்கு ...

காங்கிரஸ்

காங்கிரஸ்

  காங்கிரஸ்  காரியக்கமிட்டியும்  அகில  இந்தியக்  காங்கிரஸ்  கமிட்டியும்  மே  N  18,  19ந்  தேதிகளில்தான்,  பாட்னாவில்  நடைபெறுமாம்.  அதற்கு  முன்பு  2ந்தேதி  ராஞ்சியில்  அகில  இந்திய  சுயராஜ்யக்  கக்ஷி  கூட்டம்  நடைபெறும்  என்று  தெரிகிறது.  இவ்விரண்டு  கூட்டங்களின்  ஆரம்ப  வேகம்  தடைபெற்று  விட்டாலும்  கூட்டங்கள்  என்னமோ,  நடைபெறும்.  காந்தி  சொன்னபடி  சட்டசபை  பிரவேசமும்,  சட்ட  மறுப்பு  நிறுத்தத்தீர்மானமும்  முதலில்  நடைபெறும்.  எதிர்காலத்தில்  இவர்கள்  வேலைதிட்டம்  என்ன  என்பதை  கமிட்டி  முறையே  வெளியிட்டுவிடும்.  கமிட்டி  கூடும்  தேதிகளில்  சில  தலைவர்கள்  அபிப்பிராயப்  பேதப்படுவது  போலவே,  கமிட்டிகளின்  வேலைத்திட்டம்  தயாரிப்பதில்  அபிப்பிராய  பேதமிருக்கிறது.  புது  திட்டம்  என்ன  சொல்லப்போகிறது  என்பதை  பார்ப்போம். எப்போ அடிமையென்றும்  ஆரியனென்றும்  அகல  வைத்து  ஆண்டுவரும்  ஆண்மைகொண்ட  அர்ப்பப்  பயல்களின்  அகம்பாவங்கள்  அடியோடொழியும்  அன்னாள்  வருவதெப்போ? பெண்களெல்லாம்  பேதையென்றும்,  பிள்ளைபெறும்  பிண்டமென்றும்,  பின்புத்திக்காரரென்றும்,  பிராணன்போக  பித்து  தரும்  பிறவியென்றும்  பிராணிகள்  போல்  பிதற்றிவரும்  பிரகஸ்பதிகளின்  பேடித்தனம்  பிணமாகும்  கால ...

தொழிலாளர்

தொழிலாளர்

  மாமூல்  சம்பளத்தில்  பாதிக்குக்  குறைவாகக்  குறைப்பதை  பம்பாய்  நெசவு  ஆலைத்  தொழிலாளர்கள்  கண்டிக்கிறார்கள்.  இதற்கறிகுறியாகவே  ஒரு மாத  நோட்டீஸ்  கொடுத்து  நேற்று  23ந்  தேதியிலிருந்து  இன்றுடன்  ஏழு  தினங்கள்  பொது  வேலை  நிறுத்தம்  செய்திருக்கிறார்கள்.  ஆரம்பத்தில்  வேலை  நிறுத்தக்காரர்களின்  எண்ணிக்கை  மூன்று  ஆயிரமேயாகும். இன்றுவரை சுமார்  ஒரு  லக்ஷத்துக்கு  மேல்  தொழிலாளர்கள்  வேலை  நிறுத்தத்தில்  கலந்திருக்கிறார்கள்.  பல  தலைவர்கள்  கைது  செய்யப்பட்டும்  இதுவரையில்  மில்  முதலாளிகளோ  சர்க்காரோ  சமாதானம்  செய்ய  முன்  வரவில்லை.  பம்பாய்  கார்ப்பரேஷன்  தலைவர்  இன்று  சமாதானத்துக்கு  முயல்கிறார்.  டெல்லியிலும்,  நாகபுரியிலும்,  கராச்சியிலும்  உள்ள  நெசவுத்  தொழிலாளிகள்  அனுதாபங்  காட்டுகிறார்கள்.  விரைவில்  பரிகாரம்  ஒரு  முடிவேற்படுமா? புரட்சி  துணைத் தலையங்கம்  29.04.1934

தொழிலாளர்

தொழிலாளர்

  மாமூல்  சம்பளத்தில்  பாதிக்குக்  குறைவாகக்  குறைப்பதை  பம்பாய்  நெசவு  ஆலைத்  தொழிலாளர்கள்  கண்டிக்கிறார்கள்.  இதற்கறிகுறியாகவே  ஒரு மாத  நோட்டீஸ்  கொடுத்து  நேற்று  23ந்  தேதியிலிருந்து  இன்றுடன்  ஏழு  தினங்கள்  பொது  வேலை  நிறுத்தம்  செய்திருக்கிறார்கள்.  ஆரம்பத்தில்  வேலை  நிறுத்தக்காரர்களின்  எண்ணிக்கை  மூன்று  ஆயிரமேயாகும். இன்றுவரை சுமார்  ஒரு  லக்ஷத்துக்கு  மேல்  தொழிலாளர்கள்  வேலை  நிறுத்தத்தில்  கலந்திருக்கிறார்கள்.  பல  தலைவர்கள்  கைது  செய்யப்பட்டும்  இதுவரையில்  மில்  முதலாளிகளோ  சர்க்காரோ  சமாதானம்  செய்ய  முன்  வரவில்லை.  பம்பாய்  கார்ப்பரேஷன்  தலைவர்  இன்று  சமாதானத்துக்கு  முயல்கிறார்.  டெல்லியிலும்,  நாகபுரியிலும்,  கராச்சியிலும்  உள்ள  நெசவுத்  தொழிலாளிகள்  அனுதாபங்  காட்டுகிறார்கள்.  விரைவில்  பரிகாரம்  ஒரு  முடிவேற்படுமா? புரட்சி  துணைத் தலையங்கம்  29.04.1934

காளியப்பன்

காளியப்பன்

  நாகை  தோழர்  காளியப்பன்  அவர்கள்  மலாய்  நாடு  சுற்றுப்  பிரயாணம்  இவ்வாரமில்லை.  இன்னும்  இரண்டு  வாரத்திற்குள்  அவர்  மலாய்  நாட்டிற்குப்  புறப்படுவார். தோழர்  காளியப்பனின்  “”டார்வின்”  என்ற  குழந்தை  இறந்ததென்று  தெரிய  விசனிக்கிறோம்.  குழந்தையை  இழந்த  வருத்தத்திலுள்ள  அவருக்கு  ஆறுதல்  கூறுகிறோம்.  அடுத்தவாரம்  ஈரோட்டிற்கு  வருவார். புரட்சி  இரங்கல் செய்தி  29.04.1934

பகுத்தறிவு

பகுத்தறிவு

  நமது  “”பகுத்தறிவு”  தினசரியானது  நாம்  எதிர்பார்த்ததற்கு  அதிகம்  வளர்ச்சியடைந்து  வருகிறது.  நேற்றுடன்  ஒவ்வொரு நாளும்  3200  காப்பிகள்  வெளிவந்தது.  தமிழ்நாட்டில்  நமதியக்க  சம்பந்தமாக  உள்ள  சகல  செய்திகளும்  பிரதி தினமும்  தாராளமாக  வெளிவர வேண்டு மென்பதற்காகவே  இத்தினசரி  ஆரம்பிக்கப்பட்டது.  தினசரி  தனது  கடமையை  தைரியமாகச்  செய்ய  ஊக்கம்  காட்டிய  வெளியூர்  சந்தாதாரர்களையும்  ஏஜண்டுகளையும்  பாராட்டுகிறோம்.  மூவாயிரத்து  இருநூறாக  இருப்பது  இன்னம்  அதிகமாகாததற்கு காரணம்  சந்தா  அனுப்பாத  சந்தாதாரர்களுக்கும்  முன்பணம்  அனுப்பாத  ஏஜண்டுகளுக்கும்  நாம்  பத்திரிகை  அனுப்பாததேயாகும்.  இன்னும்  இரண்டு  தினத்துக்குள்  சேலம்,  திருச்சி,  திருப்பத்தூர்,  பொள்ளாச்சி,  கோவை  இவ்வூர்  ஏஜண்டுகள்  கேட்டுக்  கொண்டபடியால்  அன்றாடம்  பேப்பர்  மாலைக்குள்  கிடைக்கும்படி  செய்ய  ஏற்பாடு  செய்யப்படும். புரட்சி  அறிவிப்பு  29.04.1934

பம்பாயில்  பயங்கர  வேலை  நிறுத்தம்

பம்பாயில்  பயங்கர  வேலை  நிறுத்தம்

  உலக  முழுவதும்  தொழிலாளர்  நிலைமை  படுமோசம்.  இந்தியாவிலோ  சொல்ல  வேண்டியதில்லை.  எண்ணெய்க்  கொப்பரையில்  வெந்து  கொண்டிருக்கிறார்கள்  தொழிலாளிகள்.  பொருளாதார  நெருக்கடி  சில  காலமாக  மனித  வர்க்கத்தை  இறுகப்பிடித்து  உலுக்கி  வருகிறது.  கல்நெஞ்ச  முதலாளிகள்  ஈவிரக்கமின்றிச்  சம்பளக்  குறைப்பால்  தொழிலாளிகளை உயிரோடு  உடம்பை  உரிக்கும்  சித்திரவதை  செய்து  வருகிறார்கள்.  இன்றைய  இந்தியத்  தொழிலாளர்  வாழ்வோ  அழுவாரற்ற  பிணமாகவும்,  சீந்துவாரற்ற  சவமாகவுங்  கிடக்கிறது. கடந்த  ஒரு  வாரமாய்ச்  சம்பளத்தைக்  குறைத்ததினால் பம்பாய்த் தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.  பம்பாய்  ஆலைகள்  57ல்  43  ஆலைகள்  மூடப்பட்டுவிட்டன.  8  ஆலைகள்  மாத்திரம்  திண்டாட்டத்தின்  பேரில்  வேலை  நடத்தி வருகின்றன.  80  ஆயிரம்  தொழிலாளர்கள்  வேலை  நிறுத்தம்  செய்திருக்கிறார்கள்.  பம்பாயில்  துப்பாக்கிப் பிரயோகமும்,  அடிதடிகளும், கல்வீச்சும்  நடந்த  மயமாயிருக்கிறது.  உயிர்ச்  சேதமும்,  படுகாயமும்  கோரக்  காட்சியளிக்கிறது.  பம்பாய்  அமளி  துமளியாய்க்  கிடக்கிறது. பொறுப்பு  வாய்ந்த  இந்திய  சர்க்கார்  தொழிலாளிகளை  அனாதைக்  குழந்தைகளாய்ப்  பாவித்துக்  கைவிட்டுவிட்டதாக ...

மே தினம்

மே தினம்

மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாளை உலகமெங்கும் உழைப்பவர்களால் பெரு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், முதல் அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் அடங்கிய மக்கள் 8மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்தியபடியால், அந்நாள் தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள். தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து...

ரஷ்யாவின்  மேம்பாடு

ரஷ்யாவின்  மேம்பாடு

  சமீப  காலமாக  முதலாளித்துவ  நாட்டில்  ஏற்பட்டிருக்கும்  அளவு  கடந்த  பொருளாதார  நெருக்கடியை  வாசகர்கள்  நன்கு  அறிவார்கள்.  ஆனால்  சோவியத்  ருஷ்ய  நாடோ  சமதர்மத்  திட்டத்தால்  பொருளாதார  முற்போக்குடன்  தலைநிமிர்ந்து  பிறநாடுகள்  வெட்கித்  தலைகுனியும்படி,  முன்னேறிச்  செல்லுகின்றன.  ஒவ்வொரு  முதலாளித்துவ  ராஜ்யத்திலும்  3  கோடி,  4  கோடி  பேர்கள்  வேலையில்லாமல்  திண்டாடி  அவதியுறும்  போது,  ரஷ்யாவோ  தங்கள்  நாட்டில்  “”வேலையில்லாது  ஏங்குவோரோ  அல்லது  நாளைக்கென்  செய்வோம்  என்று  கவலையுறுவோறோ”  இல்லாமல்  செய்து  விட்டது. ரஷ்யாவைப்  பற்றி  முதலாளித்துவ  நாடுகளும்  அரசுகளும்  செய்யும்  விஷமப்  பிரசாரமானது  191618  வருஷங்களின்  மகாயுத்தப்  புளுகுகளுக்குச்  சமானமாகும். சோவியத்  ரஷ்யர்களின்  முதல்  5  வருஷ  திட்டத்தின்  முக்கிய  நோக்கமானது: பொருள்கள்  உற்பத்தி  விஷயத்திலும்,  அதன்  அபிவிருத்தி  விஷயத்திலும்  பழைய  ரஷ்யர்கள்  கொண்டிருந்த  முறையை  அடியோடு  மாற்றி  நவீன  முறையால்  அதிக  மேம்பாட்டிற்கு  உழைத்து  வெற்றி  பெருதல்  என்பதாகும்.  விவசாய  விஷயத்தில்  கூட்டுப்  பண்ணைத்  தொழில்  முறையையும்,  இயந்திர ...

தொழிலாளிக்கு  லாபத்தில்  பங்கா?

தொழிலாளிக்கு  லாபத்தில்  பங்கா?

  காந்தி  ஏமாறாதீர்கள் பிரஞ்சு  இந்தியாவில்  கிருஸ்தவர்கள்  ஏகபோக  உரிமை  அநுபவிப்பதை  போல,  தமிழ்நாட்டில்  பார்ப்பனர்  ஏக  போக  உரிமைக்காரர்கள்.  இவர்களைப்  போலவே  பம்பாய்,  ஆமதாபாத்  மில்கார  முதலாளிகளாகும்.  இந்திய  சர்க்கார்  ராணுவத்துக்கும்,  வெள்ளைக்கார  மாஜி  உத்தியோகஸ்தர்கள்  பென்ஷனுக்கும்  பணம்  ஒதுக்க  ஒருக்கால்  மறந்தாலும்  மறப்பார்கள்.  நமது  வடநாட்டு  மில்  முதலாளிகள்  தங்கள்  சங்கதியை  மறப்பதில்லை.  கதர்  துணிக்கு  கதர்  பக்தர்கள்  வரிப்பணம்  கொடுப்பதைப்  போலவே  மில்கார  முதலாளிகளுக்கும்,  சர்க்காரும்  வரி  நஷ்டமடைவதைப்  போல்,  மில்  துணி,  நூல்  இவைகளை  உபயோகப்படுத்துகிறவர்கள்  வரி  கொடுக்க  வேண்டும். சில  வருடங்களுக்கு  முன்பு  ஆமதாபாத்  மில்  தொழிலாளிகளுக்குள்  ஓர்  பலமான  ஒற்றுமையுண்டாகி  பெரும்  கிளர்ச்சி  செய்து  சிறிது  பலன்  அடைந்தார்கள்.  இவ்வருடம்  ஆமதாபாத்  மில்  முதலாளிகள்  தங்கள்  மில்லுகளில்  ஆள்  குறைப்பு  திட்டத்தையும்  கூலி  குறைவு  திட்டத்தையும்  கையாள  ஆரம்பித்ததும்,  மில்  தொழிலாளிகள்  பலமாக  விழித்துக்  கொண்டார்கள்.  முன்பு  நடந்த  ஒப்பந்தத்துக்கு  விரோதமாக,  மில் ...

மே  தினம்

மே  தினம்

  மே  மாதம்  1  தேதி  தொழிலாளர்  பண்டிகை. உலகத்  தொழிலாளர்  ஒன்றுபடும்  நன்னாள், இந்தியத்  தொழிலாளர்களே! மே  திருநாள்  கொண்டாடத்  தவறாதீர். சுயமரியாதைச்  சங்கங்கள் ஒவ்வொன்றும்  மே  திருநாள்  கொண்டாடுமாக! புரட்சி  அறிவிப்பு  22.04.1934

மே  தின  விசேஷ  அறிக்கை

மே தின விசேஷ அறிக்கை

அடுத்த வாரம் 29 தேதி வெளிவரும் நமது “”புரட்சி”யில் மே தினம் கொண்டாட வேண்டிய விதம் முதலியன விபரமாக அறிவிக்கப்படும். 1. மே மாதம் முதல் தேதி செவ்வாய்க்கிழமையன்று சகல நகரங்களிலும், கிராமங்களிலும் பொதுக்கூட்டங்களிட வேண்டும். 2. பிற்பகல் அந்தந்த ஊர் சங்கக் காரியாலயங்களிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு பொதுக் கூட்டமிட வேண்டிய இடத்திற்குச் செல்ல வேண்டும். 3. பொதுக்கூட்டத்தில் உபன்யாச நிகழ்ச்சிகள் நடந்ததும் மே தின அறிக்கை தலைவரால் படிக்கப்பட்டு பொதுக்கூட்டத்தினர் அங்கீகரிக்கச் செய்ய வேண்டும். 4. நாளது 29ந் தேதி “”புரட்சி”யிலும் 30ந் தேதி “”பகுத்தறிவி”லும் மே தின அறிக்கை வெளிவரும். புரட்சி அறிக்கை 22.04.1934

நமது  கடமை

நமது  கடமை

  உலக  முழுமையும்,  அந்தந்த நாடுகளில்  அந்தந்த  கக்ஷிகள்  அரசியலைப்  பிடித்து  அந்தந்த  தேசவாசிகளுக்கு  நன்மை  புரிகின்றோமென்று  சொல்லிக்  கொண்டு,  பற்பல  துவாராக்களில்  உழைத்து  வருகின்றன.  நமது  ஆங்கில  நாட்டின்  நாஷனலிஸ்ட்  கட்சி,  அதாவது  தேசீயக்  கக்ஷி  என்று  வழங்கும்  ஒரு  சார்பார்,  தோழர்  ராம்சே  மக்டொனால்டின்  தலைமையின்கீழ்  ஆங்கில  நாட்டு  அரசியலை  நடத்தி  வருகின்றார்கள்.  இவர்களுடைய  முக்கியப்  போக்கு  என்னவெனில்,  இருக்கும்  சமூகதிட்டத்தை  வைத்துக்  கொண்டு  அங்கோர்  சீர்திருத்தம்,  இங்கோர்  சீர்திருத்தத்தைக்  காட்டி,  ஆண்டு  வருவதாகும்.  பிரான்ஸ்  நாட்டிலும்,  பழைய  சேம்பர்  ஆவ்  டிப்புடிஸ்  என்ற  பழைய  பார்லிமெண்டை  வைத்துக்  கொண்டு  முதலாளி,  சிறு  முதலாளி  இயக்கங்களைப்  பாதுகாத்து  வருகின்றனர்.  ஜர்மனியில்  ஏகாதிபத்திய  கெய்சர்  ஆட்சியை  உடைத்தும்,  மழை  நின்றும்  தூவானம்  நிற்கவில்லை  என்பது  போல்  ஜெர்மனியைப்  பிடித்த  “”சனியன்”  ஒழியவில்லை.  அவ்வுலகில்,  பெரும்பான்மையோர்  தொழிலாளர்,  விவசாயிகளாக  விருக்கின்றனர்.  ஏகாதிபத்திய  அரசில்  பட்டு  வந்த  கஷ்டங்களுக்கு  விமோசனமின்றி  அத்தேச வாசிகள் ...

திருச்சி  தேவருக்கு  துணை

திருச்சி  தேவருக்கு  துணை

  திருச்சி  முனிசிபல்  சபைத்  தலைவரும்  நீலகிரி  முனிசிபல்  சபைத்  தலைவரும்  இன்று  சர்க்கார்  உத்திரவை  சந்தித்து  இருக்கிறார்கள்.  நீலகிரி  முனிசிபல்  சபைத்  தலைவரை,  அவர்  ஏன்  ராஜினாமா  செய்யக்  கூடாதென்பதற்கு  சரியான  காரணம்  காட்டுமாறு  நமது  மாகாண  முதல்  மந்திரியான  கனம்  பொப்பிலி  கேட்டு  இருக்கிறார்.  இவ்விதம்  கேட்பது  தப்பு என்று  “ஹிந்து’கூட கோபித்துக்  கொள்கிறது.  இதைப்  போன்றுதான்  திருச்சி  நகரசபை  தலைவரை  கேட்டதும்  தப்பு  என்று  நாம்  சொல்கிறோம். திருச்சி,  நீலகிரி  இவ்விரண்டு  நகரசபைத்  தலைவர்களையும்  நாமும்  தமிழ்  நாட்டாரும்  நன்கு  அறிவோம்.  இவர்களை  இவ்விதம்  விலக்க  காரணம்  கேட்பதும்  நியாயமானது  என்று  நமக்கு  தோன்றவில்லை.  நியாயமல்ல  என்பதுடன்  இவ்வித  உத்திரவுகளும்  மே.த.க.  தலையீட்டினாலாவது  உடனே  வாபீஸ்  வாங்கிக்  கொள்ளப்படுமென்று  நம்புகிறோம்.  மே.த.க.  முன்பு  மதுரை  ஜில்லா  போர்டில்  ஜாடையாக  புத்தி  மதி  கூறி  சமரசம்  உண்டாக்கினது  போல்  இதனையும்  செய்யுமாறு  கேட்டுக்  கொள்ளுகிறோம். நடப்பு முனிசிபல்  சபை ...

சீர்திருத்தக்  காந்தி

சீர்திருத்தக்  காந்தி

  சமரஸமே  காந்தியாரின்  பாலிஸி.  காந்தியாரை  சர்வாதிகாரியாகக்  கொண்டு  காங்கிரஸ்  பெருமையடித்துக்  கொள்கிறது.  காந்தியாரின்  தலைமையில்  காங்கிரஸ்  விவசாயிக்கும்  ஜமீன்தாருக்கும்,  தொழிலாளிக்கும்,  முதலாளிக்கும்,  ஒடுக்கப்பட்டவனுக்கும்,  உயர்ஜாதிக்காரனுக்கும்  ஒரே  சமயத்தில்  ஒத்தாசை  செய்ய  முயல்கிறது.  தற்கால  பொருளாதார,  சமூக  ஸ்தாபனங்களை  மாற்றியமைக்காது  விவசாயிக்கும்,  தொழிலாளிக்கும்  ஒடுக்கப்பட்டவனுக்கும்  நீதி  செலுத்த  முடியுமென்று  காந்தியார்  கனவு  காண்கிறார்.  ஏன்?  அவர்  சீர்திருத்தவாதி;  சமதர்மியல்ல. காந்தியாரின்  சீர்திருத்தம்  பலிக்காது.  அவரைப்  போல்  முயன்ற  அநேகர்  முடிவில்  தோல்வியடைந்ததாகச்  சரித்திரம்  கூறுகிறது.  எல்லோருக்கும்  நல்ல  பிள்ளையாக  நடப்பது  உலகத்தில்  முடியாத  காரியம்.  காந்தியார்  முடியாத  காரியத்தை  முடிக்க  முயன்று  காலத்தை  வியர்த்தமாக்குகிறார்.  “எலியையும்  பூனையையும்’  “ஆட்டுக்  குட்டியையும்  ஓநாயையும்,  “தவளையையும்  பாம்பையும்’  ஒரே பொழுதில்  ஆதரிக்க  முடியாது.  முதலாளி,  ஜமீன்தார்,  உயர்  ஜாதிக்காரர்களைப்  பூரணமாய்  ஆமோதிக்கவும்  காந்தியாருக்கு  முடியவில்லை.  அவர்களை  எதிர்த்து  உழைப்பாளிகளோடு  சேர்ந்து  கொள்ளவும்  காந்தியாருக்குத்  துணிச்சல்  இல்லை.  முதலாளிக்கும்  தொழிலாளிக்கும்  இடையில்  ஊஞ்சலாடுகிறார்.  வாலிபர்களே!  சீர்திருத்தக் ...

தோழர்  ஜவஹர்லாலும்  சர்.சி.பி.யும்

தோழர்  ஜவஹர்லாலும்  சர்.சி.பி.யும்

  சர்.சி.பி.  ராமசாமி  அய்யர்  ஆதியில்  ஆடிய  ஆட்டங்களும்,  அவர்  பிரபல  தேசீயவாதியாக  விளங்கிய  கதையும்,  ஹோம்  ரூல்  கிளர்ச்சிக்காரராக  விளங்கிய  கதையும்,  பனக்கால்  அரசர்  அவர்களால்  அடக்கி  விடப்பட்ட  கதையும்  அகில  உலகம்  அறிந்த  விஷயம். சர்.சி.பி.  சென்னை  மயிலாப்பூர்  வாசியாக  கருதப்பட்ட  போதிலும்  தஞ்சை  ஜில்லாவிலுள்ள  திருப்பனந்தாள்  மடத்து  பழைய  ஏஜண்ட்  ராமசுவாமி  அய்யரின்  பௌத்திரர்  என்ற  முறையில்  தஞ்சை  ஜில்லாவாசிதான்  என்பதை  நாம்  அறிவோம்.  இந்தக்  கனவான்  அரசியல்  உலகில்  எந்தப் படித்தரத்தில்  வைக்கப்பட்டிருக்கிறார்  என்பது  பொது  ஜனங்களுக்கு  நன்கு  தெரியும்.  இப்பெருமான்  காந்தியின்  ஒத்துழையாமை  முழு  வேகமாய்  இருந்து  சட்டசபைகளுக்கு  அபேக்ஷகர்களாக நிற்பதிற்குக்  கூட  ஆட்கள்  கிடைக்காத    காலத்தில்,  பல்லாரி  ஜில்லாவின்  பிரதிநிதியாக  இந்திய  சட்டசபைக்குச்  சென்று  காந்தியை  விடவேண்டுமா வேண்டாமா  என்ற  பிரச்சினை  ஓட்டுக்கு  விடப்பட்ட  காலத்தில்,  நடுநிலைமை  வகித்து  உலக  மக்களின்  முழு கவனத்தையும்  பெற்ற  ராவ்  பகதூர்  ஒருவர்  தலைமையில்  இந்திய ...

நல்ல  சந்தர்ப்பம்

நல்ல  சந்தர்ப்பம்

  இந்திய  நாட்டின்  பரிபூரண  விடுதலையைக்  குறிக்கோளாகக்  கொண்டு  ஆரம்பிக்கப்பட்ட  காந்தியின்  இயக்கங்கள்  ஒரு  வழியாய்  முடிவடைந்துவிட்டன. காந்தியும்  அவரது  சகாக்களும் பத்து  வருடங்களுக்குப்  பிறகாவது  தங்களது  தப்பான  வழியை  உணர்ந்து  தங்கள்  போக்கைத்  திருப்பியது  மிகவும்  போற்றத்தக்கதே.  காந்தியின்  உப்பு  சத்தியாக்கிரக  திருவிளையாடல்களின்  பயனாய்  ஏற்பட்ட  அடக்கு முறையால்  இந்திய  அரசியல்  விடுதலைக்  கிளர்ச்சிகள்  ஒரு  வகையில்  ஸ்தம்பித்துப்  போய்விட்டனவென்பதைக்  காந்தியே  ஒப்புக்  கொள்வார்.  இந்தப்  பரிதாபகரமான  நிலையிலிருந்து  தப்பவும்  “”இந்து  மதம்”  என்ற  போர்வையில்  பார்ப்பனர்கள்  தங்களது  ஆதிக்கத்தை  மீண்டும்  நடத்தவும்  ஒரு  வழியையும்,  சந்தர்ப்பத்தையும்  எதிர்பார்த்து வந்தனர்  நமது  தேசீயவாதிகள்.  இவர்களது  திக்கற்ற  நிலையை  நன்குணர்ந்த  லார்டு  வெல்லிங்டன்  இந்திய  சட்டசபையைக்  கலைத்து  மறு  தேர்தல்  நடத்தப்  போவதாக  ஒரு  நாடகம்  நடித்தார்.  திக்கு  முக்காடி  இறக்குந்  தருவாயில்  தண்ணீரில்  தவிக்குமொருவன்  தனதெதிரில்  வரும்  ஒரு  துரும்பைக்கூட  கைப்பற்றித்  தனது  உயிரை  நிலைக்க  வைக்கப்  பார்ப்பது  சகஜமே. ...

காந்தியின்  கடைசி  காலம்

காந்தியின்  கடைசி  காலம்

  பிரசித்திபெற்ற  ஏப்ரல்  மாதத்தில்தான்  தோழர்  காந்தி  அன்று  தோன்றினார்.  இன்று  பதினைந்து  வருடங்களுக்கு  முன்பு  அகில  இந்தியக்  காங்கிரஸ்  தலைவர்களுள்  கடையராக  இருந்த  காந்தி,  அகில  இந்தியத்  தலைவராகத்  தோன்ற  ஆரம்பித்தது  ஏப்ரல்  மாதச்  சத்தியாக்கிரக  வாரம்  என்பதில்தான்.  அதே  ஏப்ரல்  மாதத்தில்  மீண்டும்  காந்தி  இந்நாட்டின்  விடுதலைக்குக்  காது  ஒடிந்த  ஊசிக்கும்  பயனில்லை  என்று  சொல்லத்தக்க  நிலைக்கு வந்துவிட்டார்.  ஆனால்  வழக்கம்போல்  காந்தியின்  கடவுள்  அவருக்குத்  தோன்றித்  தனி  மனிதரின்  சட்டமறுப்பை  நிறுத்து  என்று  சொன்னதாக  சொல்லுகிறார்.  அத்துடன்  மட்டுமல்ல,  இதுவரையில்  இந்திய  நாட்டில்  அவரின்  “”சத்தியாக்கிரகத்தின்”  முறையை,  தத்துவத்தை,  உணர்ந்தவர்,  அனுஷ்டிக்கக்கூடியவர்  ஒருவர்  கூட  இல்லையென்றும் ஒப்புக்கொண்டுவிட்டார்.  பதினைந்து  வருடங்களுள்  மூன்று  முறை  ஆடாத  ஆட்டமெல்லாம்  ஆடி,  ஓய்ந்த  காந்தியடிகளையும்,  மகா  அவரது  சத்தியத்தையும்,  அவரது  சொந்தக்  கடவுளையும்  போற்றாவிட்டாலும்  தூற்றாமலாவது  இருப்போமாக!  காந்தியடிகளின்  கடைசி  தோல்விக்குப்பின்பு  அவர்  நீண்டகாலமாக  விரும்பும்  ஹிமய  உச்சிக்குச்  செல்ல  நாம் ...

காங்கிரஸ்  சுயராஜ்யக்  கட்சி

காங்கிரஸ்  சுயராஜ்யக்  கட்சி

  பழைய  காங்கிரஸ்  சுயராஜ்யக்  கட்சி,  இவ்  வருடத்தில்  “புனர்  ஜன்மம்’  எடுத்ததைப்  பற்றி,  சட்டசபை  மோகம்  பிடித்தவர்களுக்கு  திருப்திகரமாயிருக்குமென்பதைப்  பற்றி,  யாரும்  ஆச்சரியப்பட  வேண்டியதில்லை.  காந்தியாரும்,  இந்த  சுயராஜ்யக்  கட்சியின்,  “புனர்  ஜன்மத்தை’  வாழ்த்தி  வரம்  கொடுத்த  விஷயத்தைக்  குறித்தும்,  யாரும்  ஆச்சரியப்பட  வேண்டியதில்லை.  இவ்வித  உபாயங்கள்,  முதலாளித்  தத்துவத்தைச்  சேர்ந்தவர்களுக்கெல்லாம்  உண்டு.  இந்த  அனுபவத்தை  ஒட்டியே,  சுயராஜ்யக்  கட்சியினர்,  திரும்பவும் தங்கள் கட்சியைப் புதுப்பிக்க ஆரம்பித்தனர்; காந்தியாரும் முதலாளித்  தத்துவத்தில்  சன்னது  பெற்றவராதலால்,  சுயராஜ்யக்  கட்சிக்கு  மங்கள  வாழ்த்தும்  கூறினார்.  சுயராஜ்யக்  கட்சி  இன்று  எடுத்த  புனர்  ஜன்மத்திலாகிலும்  அல்லது  காந்தியார்  அதன்மேல்  பன்னீர்  தெளித்ததனாலாகிலும், தேசத்தில்  பெரும்பான்மையோருக்கு  எவ்வித  சுதந்திரமாகிலும்  நன்மையாகிலும்  யாரும்  கோர  வேண்டியதில்லை.  தேசமும்,  தேசத்து  மக்களும்,  பிறப்பு,  பிணி,  மூட்பு,  சாக்காட்டால்  பண்டை  கால  முதல்,  கஷ்டப்பட்டு  வந்ததைப் போல,  இந்தப்  “புனர்  ஜன்மத்தைப்’  போன்ற  ஆயிர மாயிரம்  “புனர் ஜன்மங்கள்’  சுயராஜ்யக் ...

உணவுக்கு வரி

உணவுக்கு வரி

பண்டைக்கால  அரசுகள்  முதல்,  தற்கால  அரசுகள்  வரையிலும்  எல்லா  அரசுகளும்,  உணவுக்கு  வேண்டிய  பொருள்கள்  மேல்  வரிகளைச்  சுமத்தி,  அவைகளின்  விலையை  உயர்த்தி  வந்திருக்கின்றார்கள்.  இத்தியாதி  வரிகளை  நியாயமென்றே  எண்ணி  வந்திருக்கின்றார்கள்.  இந்த வரிகளுக்கு நிலத்தீர்வையென்றும், ஜலத்தீர்வையென்றும், சுங்கத்தீர்வையென்றும்  அழைக்கின்றார்கள்.  இவ்வரிகளை  விதித்து  வரும்  தற்கால  அரசுகள்  இவ்வரிகள்  இயற்கையாக  நியாயமானவைகளா?  அநியாயமானவைகளா? என்று  பகுத்தறிவைக்கொண்டு  உணர்ந்தாரில்லை.  ஏதோ ஆதிகால  முதல்  உண்பண்டம், தின்பண்டங்களின்  மேல்  வரி  விதித்து   வந்திருக்கின்றார்களாகையால்,  அந்தப்  பழக்கத்தைப்  போலவே,  அந்தந்த  சமயங்கட்கு  ஏற்றவாறு  பற்பல  வரிகளை  உணவுப்  பொருளின்  பேரில்  விதித்து  வருகின்றார்கள். தற்கால  ஓர்  முனிசிபாலிடியை  எடுத்துக்  கொள்வோம்.  எந்தெந்தப்  பொருள்களுக்கு  வரிகளை  விதித்து  வருகிறார்களென்பதை  சற்று  கவனிப்போம்.  பட்டணங்களில்  வரி  விதிக்கப்படாத  உணவுப்பொருள்கள்  யாதொன்றுமில்லை.  பால்கொடுக்கும்  பசுவுக்கு  வரி,  பதார்த்தங்களை  விற்பதற்கு  வரி,  அவைகளை  விற்கும்  தொழிலுக்கு  வரி,  அவைகளை  விற்கும்  இடங்களுக்கு  வரி,  தோசைக்  கடை  முதல்,  நெய்,  சர்க்கரை,  மளிகை, ...

துணுக்குகள்

துணுக்குகள்

  லண்டன்  மாணவர்கள் குடியேற்ற  நாடுகளில்  உள்ள  மக்கள்,  பரிபூரண  சுயேச்சையோடு  வாழவேண்டுமென்கிற  கிளர்ச்சியால்,  பிரிட்டீஷ்  ஏகாதிபத்தியத்திற்கு  அழிவை  உண்டாக்க  வேண்டுமென்கிற  கோட்பாடு  லண்டன்  சர்வகலாசாலைகளில்  ஏற்பட்டு  வருவதானது  அங்கு  சர்வகலாசாலை  அதிகாரிகளிடையே  சிறிது  பீதியை  உண்டாக்கி  வருகிறது.  12  இந்தியப்  பொதுவுடமை  வாதிகளைத்  தவிர்த்து  கணக்குப்பார்த்தாலும்,  அங்கு  வசித்துவரும்  சில  ஆயிர  இந்திய  மாணவர்களும்  கிரேட்  பிரிட்டனில்  ஸ்திரமாக  நிலைபெற்றுள்ள  சிலரும்  பிரிட்டீஷ்  ஏகாதிபத்தியத்திற்கு  விரோதமான  இயக்கத்திலேயே  சார்ந்துள்ளனர்  என்பது  பகிரங்க  இரகசியம்.  அங்கு  சர்வகலாசாலை  யூனியன்களில்  நிகழும்  தர்க்க  வாதத்தின்  போது  இரு  இந்தியர்கள்,  பொதுவுடமை  தீர்மானத்தை  ஆதரித்துப்  பேசுவதும்,  இருபது  பேர்  தொழிலாளர்களுக்காகவும்,  சமுதாய  ஜனநாயகத்துவ  கொள்கைகளுக்காகவும்  பரிந்து  பேசுவது  வாடிக்கையாகும்.  இந்த  மாதத்தின்  முதல்  வாரத்தில்  ருசிகரமான  இரண்டு  சர்வகலாசாலை  மீட்டிங்குகள்  நடைபெற்றன.  அதில்  ஒன்று  கேம்பிரிட்ஜ்  மாணவர்களின்  சோஷியலிஸ்ட்  கழகத்தாரால்  கேம்பிரிட்ஜில்  கூட்டப்பட்டதாகும்.  இதில்  பென்  பிராட்லேயும்,  சக்லத்வாலாவும்  முக்கிய  பேச்சுக்காரர்களாவார்கள். பிரிஸ்டல்  சர்வகலாசாலையில் ...

நமது  நாகரீகம்

நமது  நாகரீகம்

  உலகில்,  மக்கள்  அடைந்துவரும்  நிலைமையைக்  காட்டு மிராண்டித்  தன்மையென்றும்,  அநாகரீக  வாழ்வென்றும்,  அரை  நாகரீக  நிலைமை  என்றும்,  நாகரீக  நிலைமை  என்றும்  வகுத்து வருகின்றார்கள்.  காட்டு  மிராண்டித்  தன்மையில்  மக்கள்  விலங்கினங்களைப்  போல்,  வீடுவாசலின்றி  நாளைக்கு  வேண்டுமென்ற  பகுத்தறிவின்றி,  மிருகாதிகளைப்  போல்  அங்கும்  இங்கும்  இரை  தேடி  வாழ்ந்து  வந்த  வாழ்க்கையாகும்.  இவ்வாழ்க்கையில்,  இன்றைக்கும்  சில  மக்கள்  வாழ்ந்து  வருகின்றார்கள்.  இலங்கையிலிருக்கும்  வேடர்களும்,  ஆப்பிரிக்காவில்  வாழ்ந்துவரும்  காட்டு  மனிதர்களும்,  பிஜீ தீவில் சில  காலத்திற்கு  முன்  வாழ்ந்து  வந்த  மக்களும்  இன்றைக்கும்  காட்டுமிராண்டித்  தன்மையிலே  இருந்து  வருகின்றனர்.  இந்நிலைமையிலுள்ள  மக்களுக்குக்  கல்யாணமென்ற  கூட்டுறவு  கிடையா.  பெண்களைச்  சட்டி  பானைகளைப்  போல்  ஆண்டு  அனுபவித்து  வருகின்றார்கள்.  இதற்கு  மேற்பட்ட  மக்கள்  நிலைமையில் மனித சமூகம்  சிறுசிறு  கிராமங்களில்  வசித்து  வரத்  தலைப்பட்டனர்.  கிராம  தலைவர்களென்றும் கிராமச்  சங்கங்களென்றும்,  சமூக  வாழ்க்கையை  உண்டாக்கிக் கொண்டு  தத்தம்  கிராமங்களில்  சில  காலம்  தங்கியிருந்து,  வேறு ...

நாகபட்டினம்

நாகபட்டினம்

  சுயமரியாதைச் சங்கம் 18.3.34ந்  தேதி  மாலை  6.30  மணிக்கு  சங்கமெம்பர்  கூட்டம்  சங்கத்  தலைவர்  தோழர்  எஸ்.பி. கிருஷ்ணன்  தலைமையில்  கூடியது.  அது  சமயம்.  சங்க  ஜனவரி,  பிப்ரவரி  மாதங்களின்  வரவு  சிலவு  கணக்குகளை  வாசித்து  ஒப்புக்கொள்ளப்பட்டது.  பின்  வருஷாந்திர  அறிக்கை  தயாரிக்கவும்,  கணக்குகளை  ஆடிட்  செய்யவும்  கமிட்டியொன்று  தேர்ந்தெடுக்கப்பட்டபின்  சுயமரியாதை  சங்க  மத்திய  சபையின்  கூட்ட  முடிவைப்  பற்றி  ஆலோசனைக்கு  எடுத்து  கொண்டபோது  தஞ்சை  சுயமரியாதைச்  சங்கக்  காரியதரிசி  தோழர்  ஆளவந்தார்  அவர்கள்  ஜில்லா  தாலூகா  சங்கங்கள்  சரியான  முறைப்படி  எங்கும்  அமைக்கப்படாமலிருப்பதால்  எல்லோரும்  மாகாண  சங்கத்திற்கு  வருஷ  சந்தா  நான்கணா  செலுத்தி  பதிவு  செய்துகெள்ள  முடியாதென்றும்,  மத்திய  சங்கத்தில்  மெம்பர்களாயில்லாதவர்களுக்கு  மாகாண  மகாநாட்டில்  ஓட்டு  கொடுக்க  உரிமை  கிடையாதென்பதில்  ஏதோ  சூழ்ச்சியிருப்பதாகவும்  கூறினார்.  அதை  ஆதரித்து  தோழர்கள்  கே.எஸ்.முஜிபுல்லா,  வி.சாமிநாதன்  ஆகியவர்கள்  பேசினார்கள்.  மத்தியசங்கத்தார்  இப்பொழுதாவது  மாகாண  மகாநாடு  கூட்ட  முன்  வந்தது  பற்றி  பாராட்டுவதாகவும்,  கூடிய...