அருஞ்சொல்  பொருள்

 

அந்தர்முகம்                               உள்நோக்குகை

அந்தரார்த்மா                             உள்மனம்

அநீதம்                             நியாயமின்மை

ஆகுதி                               தீ  வேள்வி

ஆத்மார்த்தம்                            மிக்க  நட்பு

இச்சித்து                         விரும்பி

உத்தரிக்க                      மேற்பார்வையிட

உத்தரித்தல்                               ஈடுசெய்தல், கடன்  செலுத்துதல்,  பொறுத்தல்

உன்மத்தம்                  மயக்கம்,  வெறி,  பைத்தியம்

எக்கியம்                         வேள்வி

எத்தனம்                        முயற்சி,  ஆயத்தம்

ஏஷ்யம்                           காரணம்,  கருதுகோள்,  சான்று

கண்டசரம்                    கழுத்தணிவகை

காற்க                                காக்க

காஸ்டிங்  ஓட்டு                      ஒரு  கூட்ட  நடவடிக்கையில்  ஆதரவும்  எதிர்ப்பும்  சமமாக  இருக்கும்  பொழுது  தலைவரின்  தீர்மானமான  வாக்கு

கிருஷிகள்                    விவசாயிகள்

சக்கிமுக்கி  கற்கள்                               நெருப்புண்டாக்கப்  பயன்படும்  கற்கள்

சந்தியா  வந்தனம்                 காலை,  மாலைகளில்  வேத  மந்திரங்களால்  செய்யும்  வழிபாடு

சந்துஷ்டி                        மன  நிறைவு

சம்ரட்சனை,

சம்ரட்சணை                              காப்பாற்றுகை

சன்னதம்                       ஆவேசம்,  கோபம்,  வீறாப்பு

தத்தம்                              நீர்வார்த்துக்  கொடுக்கும்  கொடை

தியங்கவிட்டு                           கலங்கவிட்டு,  மயங்கவிட்டு,  சோர்வெய்த  விட்டு

துக்கித்தல்                   துயருறுதல்

துவம்சம்                       அழிவு

துராக்கிருத                  பலவந்தக்  கற்பழிப்பு

தேவதா                           தெய்வம்,  பேய்

தோதாக                         வசதியாக

நரமேத  யாகம்                         மாந்தரைக்  கொன்று  செய்யும்  வேள்வி

நிஷ்டூரம்                       கொடுமை

பகிர்                    வெடிப்பு

பரமார்த்தம்                 உண்மைப்  பொருள்,  மேலான  பொருள்,

கடவுள்  தொடர்பான

பரிகரிக்க                        நீக்க

பரியந்தம்                      எல்லை

மிருகாதி                        விலங்கு  வகைகள்

வன்மனம்                    கன்னெஞ்சு

வாச்சியனை                              வாசகத்தின்  பொருளை

வாசா  கோசரம்                        சொற்கெட்டாதது

வாசிட்டம்                    வாய்ச்  செய்தி

விசாரம்                          கவலை

வியர்த்தமாக்கி                       பயனற்றதாக்கி,  பொருளற்றதாக்கி

வியாகூலம்                                துயரம்

வியாஜ்யம்                  வழக்கு

ஜாபிதா                            பட்டியல்

You may also like...