தொழிலாளர்

 

மாமூல்  சம்பளத்தில்  பாதிக்குக்  குறைவாகக்  குறைப்பதை  பம்பாய்  நெசவு  ஆலைத்  தொழிலாளர்கள்  கண்டிக்கிறார்கள்.  இதற்கறிகுறியாகவே  ஒரு மாத  நோட்டீஸ்  கொடுத்து  நேற்று  23ந்  தேதியிலிருந்து  இன்றுடன்  ஏழு  தினங்கள்  பொது  வேலை  நிறுத்தம்  செய்திருக்கிறார்கள்.  ஆரம்பத்தில்  வேலை  நிறுத்தக்காரர்களின்  எண்ணிக்கை  மூன்று  ஆயிரமேயாகும். இன்றுவரை சுமார்  ஒரு  லக்ஷத்துக்கு  மேல்  தொழிலாளர்கள்  வேலை  நிறுத்தத்தில்  கலந்திருக்கிறார்கள்.  பல  தலைவர்கள்  கைது  செய்யப்பட்டும்  இதுவரையில்  மில்  முதலாளிகளோ  சர்க்காரோ  சமாதானம்  செய்ய  முன்  வரவில்லை.  பம்பாய்  கார்ப்பரேஷன்  தலைவர்  இன்று  சமாதானத்துக்கு  முயல்கிறார்.  டெல்லியிலும்,  நாகபுரியிலும்,  கராச்சியிலும்  உள்ள  நெசவுத்  தொழிலாளிகள்  அனுதாபங்  காட்டுகிறார்கள்.  விரைவில்  பரிகாரம்  ஒரு  முடிவேற்படுமா?

புரட்சி  துணைத் தலையங்கம்  29.04.1934

You may also like...