“”சுயராஜ்யக் கக்ஷி செத்தது அதுநீடூழி வாழ்க”
சுயராஜ்யக் கக்ஷியாரின் யோக்கியதை நாடறிந்ததென்றும் அதற்கு நல்ல பேர் இல்லையென்றும் ஒரு வாரத்திற்குள்ளாகவே அதன் தலைவர்கள் என்போர்கள் தெரிந்து கொண்டு விட்டதால், அதை அது பிறந்த “”தீட்டு” வீட்டிற்குள்ளாகவே கழுத்தைத் திருகி கொன்றுவிட்டு காங்கிரசே சட்ட சபைகளுக்கு போட்டி போட வேண்டும்; ஆனால் சுயராஜ்யக் கக்ஷி பிரமுகர்களே சட்ட சபை போட்டி கமிட்டியில் இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டார்கள். இது மக்களை ஏய்க்கச் செய்த சூழ்ச்சியே ஒழிய, மற்றபடி சட்டசபையில் போய்ச் செய்யப்போகும் காரியத்தில் எவ்வித மாறுதலும் இல்லை என்பதோடு, சட்ட சபைக்கு அபேக்ஷகர்களாக தெரிந்தெடுக்கப் போகும் நபர்களிலும் எவ்வித மாறுதல்களும் ஏற்படப் போவதில்லை.
புரட்சி துணைத் தலையங்கம் 27.05.1934