Author: admin

பிரகலாதன் முதலாம் ஆண்டு நினைவு நாள்

பிரகலாதன் முதலாம் ஆண்டு நினைவு நாள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூரில் பெரியாரின் பெருந் தொண்டர்  திராவிடர் கழக மண்டல செயலாளர் பிரகலாதன்  முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி  தலைமை உரை நிகழ்த்தினார். கழகத்தின் அம்மா பேட்டை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் வரவேற்பு கூறினார். தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டத்தின் பிரச்சார அணியின் செயலாளர்  வேணுகோபால், மாநில செயற்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி, தமிழர் இன உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக  பன்னீர்செல்வம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அம்மாபேட்டை ஒன்றிய பொறுப்பாளர் பெரியநாயகம், கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர்  இராம இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை யாற்றினார். நிகழ்வில்...

6 பேர் விடுதலை; தமிழ்நாட்டின் வரலாற்றுக் குறிப்பு நாள்

6 பேர் விடுதலை; தமிழ்நாட்டின் வரலாற்றுக் குறிப்பு நாள்

ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் 11.11.2022 அன்று  உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று தான் கூற வேண்டும். மனித உரிமையாளர்களுக்கு சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் வழியாக பல செய்திகளை கூறியிருக்கிறது. ஒன்று, பேரறிவாளன் விடுதலைக்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டதோ அத்தனை காரணங்களும் ஏனைய 6 பேருக்கும் அப்படியே பொருந்தும் என்பது ஒன்றாகும். இரண்டாவது தமிழக அமைச்சரவையின் முடிவு தான் இறுதியானது. அதை ஆளுநர்கள் கிடப்பில் போடுவதால் தடுத்து விட முடியாது, என்று மாநில உரிமையும் இதில் நிலை நாட்டப்பட்டுள்ளது. இது ஆளுநர் சண்டித்தனத்திற்கு கிடைத்த சரியான ஒரு பதிலடி. மூன்று, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான். ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு விட்டார். எனவே அமைச்சரவையின் முடிவும் தி.மு.க. ஆட்சி தொடர்ந்த...

“ரிஷிகள் நேரில் வரவேண்டும்”

“ரிஷிகள் நேரில் வரவேண்டும்”

ழ         ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எல்லாம் பயப்பட மாட்டார். அவருக்கு பாரதத்தை உருவாக்கிய ரிஷிகளும் முனிவர்களும் வந்து கட்டளையிட வேண்டும், அப்போது தான் அவர் பதவி விலகுவார்! ழ         உயர் ஜாதி ஒதுக்கீட்டில் பிராமணர் களுக்கு கிடைக்கும் இடங்கள் குறித்து அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் வானதி சீனிவாசன். அத்துடன் கொட்டும் மழையில் இரவு பகல் பாராது மழைநீரை அகற்றிக் கொண்டிருக்கும் தொழி லாளர்களில் பிராமணர்கள் எவ்வளவு பேர்? என்ற அறிக்கையையும் கேட்டால் நல்லது. ழ         கடவுளுக்கு ஆண்டுதோறும் நடத்தும் திருமணம் போலியானது என்று தீட்சதர்கள் நீதிமன்றத்தில் மனு போட்டிருக்கிறார்கள். ஆனால் பக்தர்களை உண்மை என்று நம்ப வைக்கிறார்கள் ! இதற்குப் பெயர் பக்தி ஆன்மீகம்! – விடுதலை இராசேந்திரன் டுவிட்டரிலிருந்து   பெரியார் முழக்கம் 17112022 இதழ்  

“பிராமண” வெறுப்பு வாதத்துக்கு பதிலடி உடை-உணவு-வீடு என்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் ‘பிராமணர்’களின் உற்பத்தி பங்கு என்ன?

“பிராமண” வெறுப்பு வாதத்துக்கு பதிலடி உடை-உணவு-வீடு என்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் ‘பிராமணர்’களின் உற்பத்தி பங்கு என்ன?

இட ஒதுக்கீடு என்பதற்கு மாற்றுப் பெயர் சமூக சமத்துவம் ளடிஉயைட னநஅடிஉசயஉல.  அனைவருக்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படையான ஒரு கொள்கை. உரிமைகளை, வேலை வாய்ப்புகளை அரசியலை உழைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். 10ரூ இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் அதை எதிர்ப்பவர்களைப் பார்த்து ‘பிராமண வெறுப்பு அரசியல்’ பேசுவதாக இப்போது புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து சில கேள்விகளை நாம் கேட்க வேண்டியிருக்கிறது. பிராமணர் என்று நீங்கள் சொல்கிற சொல் என்பதே சூத்திரர் என்று  ஏனைய மக்களை வெறுக்கின்ற இழிவு படுத்துகின்ற சொல் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? பிராமணர் என்று ஒரு சாதி இருக்கிறதா?  சர்மா இருக்கிறார், சாஸ்திரி இருக்கிறார், அய்யங்கார் இருக்கிறார் ஆனால் பிராமணர் என்று ஒரு சாதி இருக்கிறதா? இந்த சர்மா, சாஸ்திரி, அய்யங்கார் இவர்களையெல்லாம் சேர்த்து வர்ண அடிப்படையில் சூட்டப் பட்டது தான் பிராமணர். ஆனால் வர்ணம் என்ற அடிப்படையில் பிராமணர் என்று...

நீதிமன்றத்தில் ஒரு பேச்சு; மக்களை ஏமாற்ற வேறு பேச்சு பாஜகவின் இரட்டை வேடம் ம.கி. எட்வின் பிரபாகரன்

நீதிமன்றத்தில் ஒரு பேச்சு; மக்களை ஏமாற்ற வேறு பேச்சு பாஜகவின் இரட்டை வேடம் ம.கி. எட்வின் பிரபாகரன்

“கிறித்தவ இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியல் சமூக மக்களையும், பட்டியலினத்தவர் களாகவே கருதி, அவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. அந்த பொதுநல மனுக்களுக்கு எதிராக பாஜக அரசு, எதிர் உறுதிச்சான்றை (ஊடிரவேநச ஹககனையஎவை) நீதிமன்றத்தில் (09/11/2022) சமர்ப்பித்துள்ளது. அதில் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. பாஜக நீதிமன்றத்தில் கூறியவை என்ன? “பட்டியலின மக்கள் எந்த மதத்துக்கு மாறியிருந்தாலும் அவர்கள் பட்டியலினத்தவராகவே கருதப்பட வேண்டும்” என்கிற நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை தவறு என்றும், ஹிந்து மதத்தில் இருக்கும் அளவுக்கான தீண்டாமையோ, மற்ற ஒடுக்குமுறைகளோ கிருத்தவ இஸ்லாமிய மதங்களில் பரவலாக இல்லை என்றும், கிறித்தவமும் இஸ்லாமும் அந்நிய நாட்டு மதங்களாக இருப்பதால் ஜாதி அமைப்பை அம்மதங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், கிறித்தவ இஸ்லாமிய மதம் மாறியவர்களுக்கு, பட்டியல் இன இடஒதுக்கீட்டை வழங்கினால் அவர்களும் ஹிந்து...

எழுவர் விடுதலை; துணிவுடன் முதலில் களமிறங்கிய வழக்கறிஞர் துரைசாமி

எழுவர் விடுதலை; துணிவுடன் முதலில் களமிறங்கிய வழக்கறிஞர் துரைசாமி

7 பேர் ‘விடுதலை’யில் துணிந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்காடி வந்த பெருமை ‘பெரியாரிஸ்ட்’ மூத்த வழக்கறிஞர் துரைசாமி அவர்களுக்கே உண்டு. இதை வரலாற்றில் பதிவு செய்தாக வேண்டும். இது குறித்து வழக்கறிஞர் துரைசாமியின் பங்களிப்பை அவரது ஜூனியர் இளங்கோ முகநூலில் செய்துள்ள பதிவைப் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பெருமையுடன் பதிவு செய்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் யார் யாரையெல்லாம் கைது செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினார் வக்கீல் துரைசாமி என்று எத்தனை பேருக்கு தெரியும்?  குண்டு வெடித்தவுடன் வழக்கு சிபிஐயின் கைக்கு போய்விட்டது. சிபிஐயினர் காங்கிரஸ் மேலிடத்தை திருப்திப்படுத்த கைது வேட்டையை தொடங்கி விட்டனர். முதலில் ஓ.சுந்தரம், திமுக பிரமுகர், இவர் தான் முதல் காவல். விடுதலைப் புலிகளை ஆதரித்த அரசியல் வாதிகள் கைதுக்கு பயந்து அங்கங்கே பதுங்கிக் கொண்டனர். அவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டது. நிறைய தீ வைப்பு சம்பவங்கள்.  ஆதரவு அரசியல் கட்சியினர் எவரும் முன்வரவில்லை. சட்டவிரோத காவலில் இருந்த...

10 சதவீத ஒதுக்கீடு: அரசியல் சட்ட மோசடி

10 சதவீத ஒதுக்கீடு: அரசியல் சட்ட மோசடி

சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு, தி ஃபெடரல்.காம் (புதிய தலைமுறையின் ஆங்கில இணைய பதிப்பு) ஊடகத்திற்கு எழுதிய கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை இந்துக்களை வளைக்கவும், உயர்ஜாதி இந்துக்களின் ஆதரவைப் பெறவும் பாரதிய ஜனதா கட்சிக்கு 2 முக்கியத் தீர்ப்புகள் பயன்படும் என்றே சொல்லலாம். ஒன்று, 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு, மற்றொன்று தற்போது வழங்கப்பட்டுள்ள உயர்ஜாதி ஏழை களுக்கான பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு. அரசியலமைப்பின் 15 மற்றும் 16-வது பிரிவுகள் திருத்தப்பட்டு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு 2019ஆம் ஆண்டு ஜனவரியில் கொண்டு வரப்பட்ட போது தென்னிந்தியாவைத் தாண்டி எதிர்ப்புகள் மிகச்சொற்பமே. உச்சநீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அமர்வில் 3 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர். இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர்களில் நீதிபதி ஜே.பி.பார்திவாலாவும் ஒருவர். இவர் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது தீர்ப்பு ஒன்றில் சம்மந்தமே...

சேலம் மாவட்டம் சார்பாக 2023 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தாக்கள் சேர்ப்பதாகத் தீர்மானம்

சேலம் மாவட்டம் சார்பாக 2023 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தாக்கள் சேர்ப்பதாகத் தீர்மானம்

சேலம் மாவட்டக் கழகங்களின் சார்பாக 1.11.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 2023 ‘புரட்சிப் பெரியார் முழக்க’ சந்தாக்களை சேர்க்க வேண்டும் என்று கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மேற்கு மாவட்டம் : 01.11.2022 செவ்வாய் மாலை 6.00 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் நகர படிப்பகத்தில் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1 )          2023ஆம் ஆண்டு பெரியார் முழக்க சந்தாக்களாக 2023 சந்தாக்களை சேலம் மாவட் டத்தின் சார்பாக   (கிழக்கு – மேற்கு) தலைமைக் கழகத்திற்கு டிசம்பர் 15ஆம் தேதி அன்று வழங்குவதென முடிவு செய்யப் பட்டது 2)           அய்ந்தாண்டு சந்தாவாக சேலம் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக 100 சந்தாக்களுக்கான தொகையினை நவம்பர் 26 அன்று ஜாதி ஒழிப்பு நாளில் தலைமைக்கு ஒப்படைப்ப தெனவும் தீர்மானிக்கப் பட்டது. 3)...

பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜாதி மதம் மறுக்கப்பட்டது

பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை வள்ளலாரின் சத்திய ஞான சபையில் ஜாதி மதம் மறுக்கப்பட்டது

சைவமோ, வைணவமோ மக்களுக்குப் பசியாற்ற வேண்டும் என்று கூறியதே இல்லை. கிறிஸ்தவம் மக்கள் சேவையையே தனது கொள்கை யாக்கியது. வள்ளலார் அமைப்புக்குள்ளேயே அவருக்கு எதிராக நாச வேலைகள் நடந்தன. சென்னை மாவட்டக் கழகம் சார்பாக,    ‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் “வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்”” என்ற தலைப்பில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை. உரையில் இராமலிங்கனாரின் பிறப்பு முதல் அவர் சென்னைக்கு குடியேறி பிறகு சென்னையை விட்டு வெளியேறி சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியது வரை, வள்ளலாரின் இளமைக்கால வரலாறுகளில் தொடங்கி வள்ளலாரின் வைதீக எதிர்ப்பு எப்படி பரிணமித்தது என்பதை பேராசிரியர் விளக்குகிறார். அதில் ஒரு பகுதி: “சைவம், வைணவம் முதலிய சமயங் களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் இலட்சியம் வைக்க வேண்டாம்”. வள்ளலார், மதம், சமயம் என்று இரண்டையும் வேறுபடுத்தி காட்டுகிறார். மதம் என்பது, வடமொழி மரபு சார்ந்த,...

தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை

தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை

“நம் நாட்டில் தமிழர்களில் எத்தனையோ யோக்கியர்கள், விவேகிகள், கெட்டிக்காரர்கள் இருந்தா லும் அவர்கள் பொது ஜனங்களுக்குத் தெரியக் கூடாத வராய் இருக்கிறார்கள். இதன் காரணம் தமிழர்களுக்கு செல்வாக்கும் சக்தியுமுள்ள பத்திரிகையில்லை. மகாத்மா காந்திக்கே தமிழ்நாட்டில் தமிழர் யோக்கியதை தெரிய வேண்டுமானால், ஒரு பிராமணனைக் கொண்டோ, ஒரு பிராமணப் பத்திரிகையைக் கொண்டோ தான் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் யோக்கியதை தமிழ்நாட் டினருக்குத் தெரிய வேண்டுமானால் பிராமணப் பத்திரிக்கையின் மூலமாகத்தான் அறிய வேண்டியிருக் கிறது. இதைவிடத் தமிழர்களுக்கு வேறு இழிவு வேண்டியதே இல்லை. 100-க்கு 90-க்கு மேற்பட்ட ஜனத் தொகையுள்ள கூட்டத்தாருக்கு தங்கள் நாட்டில் தங்களைப் பற்றி தங்கள் சமூகத்தாரே அறிந்து கொள்ள ஒரு சாதனம் இல்லை என்றால் இதைப் பற்றி என்ன நினைப்பது?” – ‘குடிஅரசு’ 02.08.1925 பெரியார் முழக்கம் 10112022 இதழ்

கடலூர், கரூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள்

கடலூர், கரூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல்கள்

6.11.2022 அன்று காலை 11 மணிக்கு புவனகிரி நகரத்தை அடுத்த கீரபாளயத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் வரவேற்பு கூறினார். மாவட்டச் செயலாளர் சிவக்குமார், அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் அ.மதன்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கடந்த 15.10.2022 அன்று புவனகிரி நகரத்தில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 144வது  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1)           15.10.2022 அன்று சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு நடைபெற்ற  நடைபெற்ற தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாள் விழா பொதுகூட்டத்திற்கு பெரும் உழைப்பை செலுத்திய, நிதி அளித்து பங்களிப்பை செலுத்திய அனைத்து தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படு கிறது. 2)...

தலையங்கம் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அயோத்தி தீர்ப்பு

தலையங்கம் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அயோத்தி தீர்ப்பு

உயர் ஜாதிப் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித் துள்ளனர். தலைமை நீதிபதி உட்பட 2 நீதிபதிகள், “இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்றத் தீர்ப்பை வழங்கி யுள்ளனர். “இது சமூகநீதிக்கு பின்னடைவு என்றும் இந்திய ஒன்றியம் முழுவதும் சமூக நீதிக்கு ஆதரவான சக்திகள் ஒருங் கிணைந்து போராட முன் வர வேண்டும்” என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தமிழ் நாட்டின் உணர்வு களைப் பிரதிபலித்து இருக்கிறார். தீர்ப்பை ஆதரித்து வழங்கப்பட்ட கருத்துகள், அரசியல் சட்ட அமைப்பில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்பது கடும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு கொள்கை அந்த சமூகத் திற்கான மக்கள் முன்னேற்றமடைய பயன்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்களது பச்சைப் பார்ப்பனியக் கருத்துகளை தீர்ப்புகளாக எழுதி வைத்துள்ளனர். பிராமணர் சங்க மாநாடுகளில் பேசப்படும் கருத்துக்கள், அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட...

வந்தே மாதரம் தேச பக்தி பாடலா ?

வந்தே மாதரம் தேச பக்தி பாடலா ?

பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், தேசிய கீதத்துக்கும் (ஜன கன மண) தேசிய பாடலுக்கும் (வந்தே மாதரம்) ஒரே அந்தஸ்து வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சகம், “தேசிய பாடலான வந்தே மாதரத்திற்கு எந்த அறிவுறுத்தல்களும் இல்லை. இருப் பினும் மக்கள் இரண்டு பாடல் களுக்கும் சம மரியாதை செலுத்த வேண்டும்” என்று பதில் மனுவில் கூறியுள்ளது. வந்தே மாதரம் தேச பக்தி பாடலா? அது இந்திய ஒன்றியத்தின் பெருமையை கூறுகிறதா ? பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்க மொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் அது. அப்போது ஆட்சி யிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சென்னை, பம்பாய், கல்கத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் அது. முஸ்லிம்...

ஆங்கிலம், இந்தி ஊடகங்களில் 88%  தலைமைப் பதவிகள், உயர்ஜாதியினர் கைகளில்

ஆங்கிலம், இந்தி ஊடகங்களில் 88% தலைமைப் பதவிகள், உயர்ஜாதியினர் கைகளில்

“தமிழர்களின் நிலையை எடுத்துக்கூற ஒரு பத்திரிக்கை கூட இல்லையே” என்று பெரியார் 1925இல் குடிஅரசு இதழைத் தொடங்கினார். தொடர்ந்து ரிவோல்ட், பகுத்தறிவு, புரட்சி, உண்மை, விடுதலை ஆகிய இதழ்களையும் பெரியார் தொடங்கி சமூக இழிவுகளை எளிய மக்களிடம் கடத்தினார். இந்திய ஒன்றியத்தில், அச்சு, தொலைக் காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் (ஆங்கிலம், இந்தி) 88% உயர் பதவிகளில், உயர் ஜாதியினர் மட்டுமே பதவியில் உள்ளனர்.  புள்ளி விவரங்களுடன் கட்டுரை அதை விளக்குகிறது கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் (அதாவது அச்சு, தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்களின்) தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில்தான் இருக்கின்றன. 2021-2022ஆம் ஆண்டின் நிலை இது. 2018-2019ஆம் ஆண்டின் நிலையிலிருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸ்பாம் இந்தியா (Oxfam India) – நியூஸ்லாண்ட்ரி (Newslaundry) இணைந்து “Who Tells Our Stories Matters: Representation of Marginalised Caste Groups in Indian Media” என்ற தலைப்பில் ஏப்ரல்...

கோவையை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் அண்ணாமலை மீது கழகம், காவல் துறையில் புகார்

கோவையை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் அண்ணாமலை மீது கழகம், காவல் துறையில் புகார்

கோவையில் கடந்த 23.10.2022 அன்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில்  இருந்த சிலிண்டர் வெடித்து  விபத்து நடந்தது. கோவை மாநகரக் காவல் துறை இந்த விசயத்தில் தொடர்ந்து விசாரித்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் விசாரணையைக் கெடுக்கும் விதமாகவும், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாகவும் தொடர்ந்து மதக் கலவரத்தை உருவாக்கும் வகையில் முன்னுக்கு பின் முரணாகப் பேசி விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. பொது அமைதியைக் கெடுத்து கோவையை கலவர பூமியாக்கத்  துடிக்கும் அண்ணாமலையை விசாரணைக்கு உட்படுத்தக் கோரியும், விசாரணையில் குற்றம் இருக்கும் பட்சத்தில் அதற்கு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், மாநகர செயலாளர் நிர்மல் குமார் தலைமையில் கோவை மாநகர உதவி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்டவர், ‘மாநகர காவல் ஆணையாளரிடம் தகவலை சொல்கிறோம் உரிய நடவடிக்கை எடுக்கின்றோம்’ என்று கூறினார்....

ரூபாஸ்ரீ – சபரிகிரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா

ரூபாஸ்ரீ – சபரிகிரி ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா

தோழர்கள் ரூபாஸ்ரீ – சபரிகிரி ஆகியோரின் ஜாதி மறுப்பு சுயமரியாதை இணையேற்பு விழா பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி விவாஹா திருமண மண்டபத்தில்  30.10.2022 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. நிகர் கலை குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வுகள் தொடங்கின. முன்னதாக மணமக்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்பொழுது கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை ஆனைமலை வினோதினி, திருப்பூர் யாழிசை, யாழினி, கண்ணையா ஆகியோர் பாடினர். இணையேற்பு விழாவிற்கு கோவை மாவட்டக் கழகச் செயலாளர் வே.வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தார். கழகத் தோழரும் மணமகனுமான  கோ. சபரிகிரி  வரவேற்பு கூறினார்.  கழகத் தலைவர்  கொளத்தூர் மணி  தலைமையில் மணமக்கள் உறுதிமொழி ஏற்றனர். மணமக்களை வாழ்த்தி பேராசிரியர் சுந்தரவள்ளி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பொறியாளர் தி.பரமசிவம், (திராவிடர் கழகம்), காசு.நாகராசன்...

வேலூரில் பெரியார் வெங்கட் இல்லத் திறப்பு விழா

வேலூரில் பெரியார் வெங்கட் இல்லத் திறப்பு விழா

வேலூர் மாவட்ட திராவிட விடுதலைக் கழகத் தோழர் பெரியார் வெங்கட்  இல்லத் திறப்பு விழா 30.10.2022 அன்று வேலூர் கன்னிகா புரத்தில், மாவட்டத் தலைவர் திலீபன்  தலைமையில் நடைபெற்றது . திராவிடர் விடுதலை கழகத் தலைமைக் குழு உறுப்பினர்  விழுப்புரம் அய்யனார்  இல்லத்தினை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். பெரியார் வெங்கட் வரவேற்பு கூறினார். நிகழ்வில் விழுப்புரம் கள்ளக்குறிச்சி வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். திறப்பு விழாவிற்கு பின் நடைபெற்ற வேலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் வேலூர் மாநகர  அமைப்பாளராக  பெரியார் வெங்கட்டை  நியமிக்க வேண்டும் என்று தோழர்கள் அனைவரும் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். தலைமை ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர்  திலீபன், மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்டப் பொருளாளர்  சதீஷ், தலைமைக் கழகச் செயற்குழு உறுப்பினர்  விழுப்புரம் அய்யனார் உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர். பெரியார் முழக்கம்...

அரியூரில் தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்

அரியூரில் தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்

“தமிழர்களை திராவிடர்களை இழிவுபடுத்தும் தீபாவளியை புறக்கணிப்போம்;  பார்ப்பன புராண தீபாவளி நரகாசூரன் கட்டுக்கதை அறிவியலுக்கு பொருந்துமா?” என்ற தலைப்பில்  24-10-2022 அன்று  காலை 10.30 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்ட தலைவர் பூஆ. இளையரசன் தலைமையில் அரியூரில் உள்ள கே.வி.ஆர் அரங்கத்தில் தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடவுள் மறுப்பை  பிரகாஷ் பேசினார். கடலூர் மாவட்ட தி.வி.க செயலாளர் சிவக்குமார் வரவேற்பு கூறினார்.   தொடர்ந்து மக்கள் அதிகாரம் சாந்த குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரை செயலாளர் – விஜி பகுத்தறிவு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் – அறிவொளி, புரட்சி பாரதம் கட்சி புதுச்சேரி மாநில தலைவர் – ஓவியன், தமிழக வாழ்வுரிமை கட்சி விழுப்புரம் மாவட்டத் தலைவர் –  திராவிட நாகு, தி.வி.க விழுப்புரம் மாவட்ட தலைவர் –  பூஆ.இளையரசன்,  மக்கள் அதிகாரம் – ரூபாவதி ஆகியோர் தீபாவளி புராணக் கதையில் உள்ள...

வைதீக எதிர்ப்பு; தனி மனிதர் மற்றும் ஒரு சமூகத்தின் சுயமரியாதையை உறுதி செய்கிறது

வைதீக எதிர்ப்பு; தனி மனிதர் மற்றும் ஒரு சமூகத்தின் சுயமரியாதையை உறுதி செய்கிறது

“வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்” என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் கருணானந்தன் ஆற்றிய உரை. இந்து என்ற பெயரில் பிறர் மீது தலைமையும், புனிதம் கொண்டவனாகவும் தன்னை காண்பிப் பதற்கு ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார் களல்லவா ? அதைத் தான் நாம் மறுக்கின்றோம். வள்ளலார், அந்த பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கு வதற்காகவும், அதுமட்டுமில்லாமல் இந்த மூடத்தனங்கள் நிறைந்துள்ள சடங்குகளை தவிர்த்து ஒரு தெய்வ நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் ஒளி வழிபாட்டைக் கொண்டு வந்தார். ஒளி வழிபாடு என்றால் அறிவு வழிபாடு என்று பொருள். ஒளி அறிவைக் குறிக்கும். ஒளி உள்ள இடத்தில் இருள் விலகும். அறிவூட்டுவது ஒளி. இதைத்தான் வள்ளலார் கொண்டு வந்தார். அக்கினி வழிபாடு அல்ல. அது பிராமணர்க்கு உரியது, அழிவுக்குரியது. ஒளி வழிபாடு, அறிவு வழிபாடு; வள்ளலார் காட்டிய வழிபாடு. அப்படியென்றால் இந்த சிலை, கோவில் அனைத்தையும் கடந்து அவர் வருகிறாரல்லவா...

ஜம்புகர் – நரிக்கும், மாண்டவியர் – தவளைக்கும், சனகர் – நாயிக்கும் பிறந்த ரிஷிகளா பாரதத்தை உருவாக்கினார்கள்?

ஜம்புகர் – நரிக்கும், மாண்டவியர் – தவளைக்கும், சனகர் – நாயிக்கும் பிறந்த ரிஷிகளா பாரதத்தை உருவாக்கினார்கள்?

பாரதம் (இந்தியா) ரிஷிகளாலும், சனாதன தர்மத்தாலும் உருவாக்கப்பட்டது என்று அரசியல் சட்டத்திற்கு எதிராக பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, 29.10.2022 அன்று சன் நியூஸ் “கேள்விக் களம்” நிகழ்வில் கலந்து கொண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன் வைத்த கருத்துகள். தமிழ்நாட்டின் ஆளுநர், அரசியல் சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக அரசியலை பேசுபவராகத்தான் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் தமிழ்நாட்டுக் கருத்தியலுக்கு எதிரான மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசி வருகிறார். ‘சனாதன தர்மம்’ என்பதை மீண்டும் மீண்டும் ஓங்கி ஒலிப்பவராகத் தான் ஆளுநர் இருக்கிறார். இப்போது அந்த உரையிலும் சனாதன தர்மத்தைப் பற்றி பேசியிருக்கிறார். சனாதன தர்மம் என்பது, ‘வேதங்களையும், ஸ்ருதிகளையும், ஸ்மிருதிகளையும் அடிப்படியாகக் கொண்டு அமைக்கப்பட்டது’ என்பதை ‘சனாதன தர்மா’ என்ற நூலே விளக்குகிறது. இது காசி பல்கலைக் கழகத்தில் எழுதப்பட்ட நூல். ஆளுநர் தற்போது...

வேத எதிர்ப்பு

வேத எதிர்ப்பு

சுருக்கமாகச் சொல்லப் போனால் வேத எதிர்ப்பு சங்கதி தோன்றியது  இன்று நேற்றல்ல, “ஈரோட்டு இராமசாமி”யும், திராவிடர் கழகமும் தோன்றிய காலத்திலல்ல; புராண காலத் திலேயே வேதம் வெறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. மற்றபடி வேதத்தை ஏன் படித்தாய்? என்ன படித்தாய்? என்பது அக் காலத்தே தெரியாது. காரணம் அது ஒரு குறிப்பிட்ட வகுப்பாரிடையே வாய்மொழியாக உள்ளத்தில் ஒரு கருத்தளவிலேயே இருந்து வந்திருக் கிறது என்றாலும், இராவணன், இரணியன் ஆகியோர் வேதத் தினை முழுவதும் படித்ததினா லேயே அவர்கள் வேதத்திற்கும், யாகத்திற்கும், தேவர்களுக்கும், பிராமணர் களுக்கும் விரோதி களானார்கள் என்பதாகத் தெரிகிறது. எந்த மொழியில் வேதம் ஓதப்பட்டு வந்தது என்றே சொல்ல முடியாது. சமஸ்கிருத மொழியே வேதகாலத்தில் கிடையாது. சமஸ்கிருதம் என்று தனி மொழியே இருந்ததில்லை. அந்தக் காலத்திலே ஆரியர்கள் பேசிய மொழி பல மொழி, மலைவாசி மொழிகள். அப்படிப்பட்ட சகல மொழி களையும் கிரமப்படுத்தி சமஸ்கிருதம் சகலத்தையும் ஒன்றாக்கிய மொழி என்றாக்கினார்கள்....

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  விலை மாற்றம் குறித்த அறிவிப்பு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ விலை மாற்றம் குறித்த அறிவிப்பு

கொரோனா காலத்திற்குப் பின் அச்சுத்தாள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தாள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக் காரணமாக வேறு வழியின்றி நமது ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் சந்தா தொகை உயர்த்தப்படுகிறது. ஆண்டு சந்தா ரூ. 300/- ஆகவும் 5 ஆண்டு சந்தா ரூ. 1500/- ஆகவும் –  உயர்த்தப்பட்டுள்ளது. தோழர்கள், வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் ஆதரவினைத் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். “புரட்சிப் பெரியார்  முழக்கம்” ஆண்டுக்கட்டணம் ரூ.300 தொடர்புக்கு : ஆசிரியர்,  29, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. & 7373684049   பெரியார் முழக்கம் 03112022 இதழ்  

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராகத் தொடர்ந்த ‘குடிஅரசு’ வழக்கைத் திரும்பப் பெற்றது

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராகத் தொடர்ந்த ‘குடிஅரசு’ வழக்கைத் திரும்பப் பெற்றது

கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ‘குடி அரசு’ வழக்கு 15 வருடங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தற்போது திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராக 1925 முதல் 1949 வரை பெரியார் நடத்தி வந்த குடிஅரசு பத்திரிக்கையில் உள்ள மற்றும் பெரியாரின் எழுத்துகளும் பேச்சுக்களும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு மட்டுமே சொந்தமானது என்றும், தங்களுக்கு மட்டுமே பதிப்புரிமை உள்ளது என்றும்  தங்களைத் தவிர யாருக்கும் உரிமை இல்லை என்றும், கொளத்தூர் மணி பெரியாரின் எழுத்துகளையும் பேச்சுக்களையும் புத்தகமாக வெளியிடக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ்வாறு வெளியிட முயற்சித்ததற்காக ரூ. 15 இலட்சம் இழப்பீடாக தர வேண்டும் என்று அன்றைய பெரியார் திராவிடர் கழகத்...

ஈரோடு வடக்கு மாவட்டக் கழக செயல் திட்டங்கள்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழக செயல் திட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்ட கழக மாதந்திர கலந்துரையாடல் கூட்டம்  16.10.2022 ஞாயிறு அன்று  கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது.  நிகழ்விற்கு கழக வெளியீட்டுச் செயலாளர்  இராம. இளங்கோவன்  தலைமையேற்க,  அருளானந்தம்  முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட கழகத்திற்கு பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்டத் தலைவர் – நாத்திக சோதி, மாவட்ட செயலாளர் – எலத்தூர் செல்வக்குமார், மாவட்ட அமைப்பாளர் – சதுமுகை பழனிச்சாமி, கோபி நிவாசு,  மாவட்ட பிரச்சார அணி செயலாளர் – வேணுகோபால், கோபி ஒன்றிய செயலளர் – செகநாதன், கோபி நகர தலைவர் – ரகுநாதன், கோபி நகர செயலாளர் – அருளானந்தம், நம்பியூர் ஒன்றிய செயலாளர் – ரமேசு, நம்பியூர் ஒன்றியத் தலைவர் – அழகிரி, சத்தி ஒன்றிய செயலாளர் – புதுரோடு சிதம்பரம், கூசூ பாளையம் ஒன்றிய செயலாளர் – கருப்பணன், அந்தியூர் ஒன்றிய...

குஜராத்தி அதானி சுரண்டல்: அடுக்கடுக்கான ஆதாரங்கள்

குஜராத்தி அதானி சுரண்டல்: அடுக்கடுக்கான ஆதாரங்கள்

மோடி – அமித்ஷா – அதானி என்ற மூன்று குஜராத்திகளின் பிடிகளில் இந்தியாவின் பொருளாதாரமும் அரசியலும் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதானி கொள்ளைகளை விவரிக்கிறது இக்கட்டுரை. (கடந்த இதழ் தொடர்ச்சி) கடந்த 15 ஆண்டுகளில் அதானியின் வளர்ச்சி அபரிதமாக இருந்துள்ளது. 2006-07 நிதியாண்டில் அதானி குழுமத்தின் வருமானம் ரூ.16,953 கோடி. இதில் கடன் மட்டும் ரூ.4,353 கோடி. இதுவே 2012-13 நிதியாண்டில், வருமானம் ரூ.47,352 கோடி எனவும் கடன் ரூ.81,122 எனவும் இருந்தது. மோடி 2014இல் பிரதமராக பதவியேற்கும் போது அதானியின் நிகர மதிப்பு 7.1 பில்லியன் டாலர்கள். அது தற்போது 137 பில்லியன் டாலர்கள் என்றளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கு பின்னால் மோடி அரசு பின்புலத்தில் வங்கிகள் கொடுத்த கடனே உள்ளது என்பதை அறிய முடிகிறது. 2014-க்கு பிறகு மோடி அரசு 4.6 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த பிறகும், அதானிக்கு தற்போது 30 பில்லியன் டாலர்கள் கடன் நிலுவையில் உள்ளது...

தீட்சதர்களை சட்டங்கள் கட்டுப்படுத்தாதாம்; ‘தினமலர்’ திமிர்

தீட்சதர்களை சட்டங்கள் கட்டுப்படுத்தாதாம்; ‘தினமலர்’ திமிர்

“குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், தீட்சதர்களைக் கட்டுப்படுத்தாது. அது அவர்களின் இயல்பான வாழ்க்கை முறை. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தில்லை நடராஜன் கோபத்துக்கு உள்ளாக நேரிடும். தீட்சதர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு எஜமான் நடராஜன் மட்டுமே” என்று ‘தினமலர்’ ஆசிரியருக்கு கடிதம் வழியாக மிரட்டுகிறது. 2022ஆம் ஆண்டிலும் இப்படித் ‘திமிர்’ பிடித்து அலைகிறது ‘தினமலர்’ கும்பல். தமிழர்களால் பேரறிஞர் என்று போற்றப்படும் அண்ணாவை ‘இடியட்’ என்று பதிவு போடுகிறார் கிழக்குப் பதிப்பகம் நடத்தும் பத்ரிசேஷாத்ரி எனும் பார்ப்பனர். மாநிலங்களவையில் ‘இந்தி’ பற்றி ஏதும் தெரியாமலேயே அண்ணா பேசினாராம். இந்தப் பேர்வழிக்கு தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் பதவி தந்தது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி. இப்போது பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே தி.மு.க. ஆட்சி அப்பதவியிலிருந்து அவரை நீக்கியிருக்கிறது. அண்ணாவின் பெயரிலே கட்சி வைத்திருக்கும் குழுக்கள்,  அண்ணாவை இழிவுபடுத்திய பார்ப்பனரைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை....

தீபாவளி; கஷ்டம் – நஷ்டம்

தீபாவளி; கஷ்டம் – நஷ்டம்

தீபாவளிப் பண்டிகையென்று கஷ்டமும் – நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகை யொன்று வந்து போகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடமை உண்டா என்று கேட்கின்றேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது, விஷ்ணு என்னும்  கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியை புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான் நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணுக் கடவுள் நரகாசுரனைக் கொன்றாராம். இதைக் கொண்டாடப் படுவதற்காக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம். – ‘குடிஅரசு’ 20.10.1929   பெரியார் முழக்கம் 27102022 இதழ்

வள்ளலார் வரலாறு திரும்புகிறது

வள்ளலார் வரலாறு திரும்புகிறது

சிதம்பரத்துக்கு அருகில் உள்ள மருதூர் கிராமத்தில் 1823 அக்டோபரில்  கருணீகர் (கணக்குப் பிள்ளை) மரபில் பிறந்தவர் இராமலிங்கனார். அவர் முதலில் பாடிய ‘பாமாலை’யில் “பெருநெறி பிடித் தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்று எழுதினார். உருவ வழிபாடு, வேதம், ஆகமங்களைக் கடுமையாக எதிர்த்தார். 1872 ஜன. 25இல் வடலூரில் உருவ வழிபாடு இல்லாமல் ஒளியை மட்டுமே வணங்கும் ‘ஞான சபை’யைத் தொடங்கினார். இது எல்லா மதங்களுக்கும் பொதுவானது என்று அறிவித்தார். தில்லை நடராசன் பக்தராக இருந்தவர் தான்; அங்கே வழிபடச் சென்றபோது தீட்சதர்கள் அனுமதிக்கவில்லை. சினமடைந்த அவர், “இந்தக் கோயிலுக்கு எதிராக ஒரு தலத்தை உண்டாக்கி அங்கே நடராசனை அழைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று அறிவித்தார். (ஆதாரம்: 1904இல் பு. பாலசுந்தர நாயகர் எழுதிய “இராமலிங்க பிள்ளை பாடல்) 50 ஆண்டுகாலம் வாழ்ந்த வள்ளலார், கடைசி 10 ஆண்டு காலத்தில் தனது சைவம், முருகன், ஆகம பக்திகளைத் துறந்தார்....

அமீத்ஷா குழுவின் இந்தித் திணிப்பு முயற்சிகள் ஆட்சி மொழி சட்டத்துக்கே எதிரானது

அமீத்ஷா குழுவின் இந்தித் திணிப்பு முயற்சிகள் ஆட்சி மொழி சட்டத்துக்கே எதிரானது

நாடாளுமன்றத்தின் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.டி.டி. ஆச்சாரி – அமித்ஷா குழுவின் இந்தித் திணிப்புப் பரிந்துரைகள் ஆட்சி மொழி சட்டத்துக்கே எதிரானது என்பதை விளக்கி ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (அக்.21) எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ள இந்தித் திணிப்பு பரிந்துரைகளுக்கான அறிக்கையில் ஒன்றிய ஆட்சியின் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் கேந்திரா வித்யாலயாக்களில் இந்தி மட்டுமே பயிற்சி மொழி என்று கூறி ஆங்கிலத்தை அகற்றுகிறது. அரசியல் சட்டப்படி மாநில அரசுகள் இதை அமுல்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது. ஏனைய நாடாளுமன்றக் குழுவுக்கும் ஆட்சி மொழிக் குழுவுக்கும் வேறுபாடு உண்டு. இந்தக் குழு ஆட்சி மொழிச் சட்டம் 1963 -4ஆவது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்ற குழு. ஆட்சி மொழியான இந்திப் பயன்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு. குடியரசுத் தலைவரிடம் நேரடியாகக் குழு...

போக்குவரத்து விதிகளை மீறினால் பூங்கொத்து: ‘சந்தி சிரிக்கும்’ குஜராத் மாடல்

போக்குவரத்து விதிகளை மீறினால் பூங்கொத்து: ‘சந்தி சிரிக்கும்’ குஜராத் மாடல்

விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து விதிகளை மீறுவோர், குடித்து விட்டு வண்டி ஓட்டுவோர்களுக்கு  அபராதத் தொகையைக் கடுமையாக உயர்த்தியிருக்கிறது – தி.மு.க. ஆட்சி; இது திராவிட மாடல் ஆட்சி. குஜராத்தில் என்ன நடக்கிறது? போக்குவரத்து விதியை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதிக்க மாட்டார்களாம். மாறாக, போலீசார் அவர்களுக்கு பூக்களை வழங்கி பாராட்டுவார்களாம். தீபாவளிக்காக வரும் 27ஆம்  தேதி வரை இது நடைமுறையில் இருக்கும். குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சுங்வி, மாநில முதல்வர் பூபேந்திரபட்டில் வழிகாட்டுதலின்படி இதை அறிவித்துள்ளனர். விபத்துகள் நடந்தாலோ உயிரிழப்புகள் நடந்தாலோ அது பற்றி கவலை இல்லை. கொலை கொள்ளைகளில் ஈடுபடுவோருக்கு தீபாவளி பரிசாக அரசு பணமுடிப்புகூட வழங்கி கவுரவிக்கும் அறிவிப்பு வந்தாலும் வியப்பதற்கு இல்லை. – இது குஜராத் மாடல். தேர்தலில் ஓட்டு வாங்க இவ்வளவு கேவலமான அறிவிப்புகளை குஜராத் ஆட்சி அறிவித்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடு. பெரியார் முழக்கம் 27102022 இதழ்

வைதீக சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய கருத்தரங்கம் வள்ளலார் ‘ஜோதி’யில் கலந்தாரா?

வைதீக சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய கருத்தரங்கம் வள்ளலார் ‘ஜோதி’யில் கலந்தாரா?

‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கம், அக்டோபர் 22, மாலை சென்னை அன்பகத்தில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். முன்னதாக வைதீக எதிர்ப்புப் புரட்சிகரப் பாடல் களுடன் பாடகர் கோவன் குழுவினர் நடத்திய கலை நிகழ்ச்சி அரங்கை சூடேற்றியது. “இந்த அரங்கில் தலைசிறந்த ஆளுமைகள், துடிப்பு மிக்க இளைஞர்கள், பெண்கள் என்று அரங்கத்தில் கூடியிருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த நம்பிக்கை யும் எழுச்சியும் உருவாகிறது” என்று  கோவன் குறிப்பிட்டார். மு.வெ. சத்தியவேல் முருகனார் ‘ஆகமங்களும் அர்ச்சகர்களும்’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் வீ. அரசு, ‘வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்’ எனும் தலைப்பிலும், பேராசிரியர் கருணானந்தன், ‘வள்ளலார் வைதீக எதிர்ப்பு’ எனும் தலைப்பிலும், நிறைவாக கொளத்தூர் மணி, ‘வள்ளாருக்குப் பிறகு பார்ப்பனியம், வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சபையில் உருவ வழிபாட்டைத் தொடங்கி,...

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். சாகாவுக்கு தடை கோரி கழகம் மனு

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். சாகாவுக்கு தடை கோரி கழகம் மனு

ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகளுக்கு மாநகராட்சி பள்ளிகளில் அனுமதி தரக் கூடாது  என்பதை வலியுறுத்தியும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பக் கோரியும்  கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிடமும் மாநகராட்சி கல்விக்  குழுத் தலைவர் நா.மாலதியிடமும் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 17.10.2022 அன்று காலை 11 மணியளவில் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட மேயர் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார். தோழர்கள் நிர்மல் குமார், மாதவன், துளசி, பொன்மணி, நிலா கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20102022 இதழ்    

பெரியார் குடும்பத் தோழர்கள்  இலக்கியா-கவுதமன் ஜாதி மறுப்பு மணவிழா

பெரியார் குடும்பத் தோழர்கள் இலக்கியா-கவுதமன் ஜாதி மறுப்பு மணவிழா

திராவிடர்  இயக்கத் தமிழர் பேரவை யின் கொள்கை பரப்புச் செயலாளர் உமா, மகள் இலக்கியாவுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சிவராசு – மணிமேகலை இணையரின் மகன் கவுதமனுக்கும்  சனாதன எதிர்ப்பு,  ஜாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம்  02.10.2022 அன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சௌபாக்கியா மகாலில் நடைபெற்றது. புத்தர் கலைக்குழு மற்றும் நிமிர்வு கலையகம் பறை இசை முழக்கத்துடன் விழா துவங்கியது. இவ்விழா அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், பார்ப்பன சனாதன  சடங்குகள் எதுவுமின்றி தாலி கட்டாமல் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ள ஜாதி மறுப்பு சுயமரியாதை திருமணத்தை புலவர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் நடத்தி வைத்தார். புதிய குரல் ஓவியா நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இணையேற்பின் வரவேற்பு நிகழ்வு, 09.10.2022 அன்று காலை கோவை விக்னேசு மகாலில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர்...

பல்லடம் ஒன்றியத்தில் கழகத்தின் பரப்புரைப் பயணம்

பல்லடம் ஒன்றியத்தில் கழகத்தின் பரப்புரைப் பயணம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள், சனாதனத்தை வேரறுக்க உறுதி ஏற்போம் என்ற முழக்கத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்தில் 16.10.2022 ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில் துவங்கி  தெருமுனை பரப்புரைக் கூட்டங் களாக மாலை வரை நடைபெற்றது. தொடக்கமாக பல்லடம் என்.ஜி.ஆர் சாலையில் நடந்த  பரப்புரைப் பயணத்திற்கு பல்லடம் நகர அமைப்பாளர்  கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம், செம்பரிதி, பழனிச்சாமி ஆகிய தோழர்கள்  முன்னிலை வகித்தனர் . முதல் நிகழ்வில் ஒன்றிய அமைப் பாளர் சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்,  திருப்பூர் மாவட்டத் தலைவர்  முகில் ராசு, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், பொருளாளர் சு.துரைசாமி ஆகியோர் உரையாற்றினர்.  ராஜசிங்கம் நன்றி உரையாற்றினார். பரப்புரையின் இரண்டாவது நிகழ்வு 11 மணிக்கு வடுகுபாளையம் பகுதியில், பயணத்திற்கு பல்லடம் ஒன்றிய நகர அமைப்பாளர் கோவிந்த ராஜ்  தலைமை வகித்தார். தி.மு.க...

போதைப் பொருள்களின் கடத்தல் மய்யம் குஜராத்

போதைப் பொருள்களின் கடத்தல் மய்யம் குஜராத்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தபிறகு, சர்வதேச சந்தைகளில் அதிக விலை மதிப்புமிக்க போதைப் பொருட்களின் கடத்தல் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக, போதைப் பொருட்கள் கடத்தலின் தலைநகரமாக குஜராத்தும் மாறி வருகிறது. கடந்தாண்டு செப்டம்பரில் முந்த்ரா துறைமுகத்திற்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட  3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி. இந்தியாவில் இதற்கு முன் இந்தளவுக்கு பெரியளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது கிடையாது. ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து உலகின் மிகப் பெரிய பணக்காரராக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபரும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான அதானிக்கு சொந்தமானது தான் இந்த முந்த்ரா துறைமுகம். இந்த துறைமுகத்தின் மூலமாக சர்வதேச நாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, இம்மாநில துறைமுகங்களுக்கு  வெளிநாடுகளில் இருந்து வரும்  சரக்கு கப்பல்களில் இருந்து பல கோடி மதிப்புள்ள போதை...

நாட்டை சூறையாடும் மோடி – அதானி கூட்டு

நாட்டை சூறையாடும் மோடி – அதானி கூட்டு

மோடி – அமித்ஷா – அதானி என்ற மூன்று குஜராத்திகளின் பிடிகளில் இந்தியாவின் பொருளாதாரமும் அரசியலும் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதானி கொள்ளைகளை விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான குஜராத்தி மார்வாடி கௌதம் அதானி, சுமார் 137 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் உலகின் மூன்றாவது பணக்காரராக முன்னேறியுள்ளார்.  தற்போது இவருக்கு முன்பாக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலோன் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஆகிய இருவர் முறையே முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் தான் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி ஆசியாவின் முதல் பணக்காரர் என்று உயர்ந்ததோடு, உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய வணிகப் பின்புலம் எதுவும் இல்லாமல், டாடா, பிர்லா போல பரம்பரை பணக்காரரும் இல்லாமல், 1988ஆம் ஆண்டு முதல் தான் வணிகம் புரியத்...

‘சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்’ புவனகிரியில் பொதுக்கூட்டம்

‘சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்’ புவனகிரியில் பொதுக்கூட்டம்

சனாதனத்தை வேரறுக்க உறுதியேற் போம், என்ற முழக்கத் தோடு பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம், புவனகிரி யில் 15.10.2022 அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி நடை பெற்றது. பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக ‘விடுதலைக் குரல்’ கலைக் குழுவின் பகுத்தறிவு, சாதியொழிப்பு பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் செ.பிரகாஷ்  வரவேற்பு கூறினார். அ. சதிசு இந்நிகழ்விற்கு தலைமையேற்றார். மாவட்ட தலைவர் அ.மதன்குமார், மாவட்ட செயலாளர் சிவகுமார், அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் அறிவழகன், மங்களூர் ஒன்றிய செயலாளர் ந.கொளஞ்சி, த.முத்துகிருஷ்ணன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து சதானந்தம் (மு.ஒ.செயலாளர், சி.பி.எம்.), கணபதி (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), தயாநிதி (மா.தலைவர், மக்கள் தமிழகம்), ஆசிரியர் பழனிவேல், காரல் மார்க்ஸ் (பாலா பேரவை), ஆகிய தோழமை இயக்கத் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர். தொடர்ந்து சிறப்புரையாற்ற வருகை தந்த சௌந்திரபாண்டியன் (காங்கிரஸ்), திருமார்பன் (மாநில அமைப்புச் செயலாளர்,...

தி ரெட் பலூன்: ஓர் நெகிழ்ச்சியான சந்திப்பு

தி ரெட் பலூன்: ஓர் நெகிழ்ச்சியான சந்திப்பு

மாணவர்களின் கற்றல் திறன் படைப்பாற்றலை வளர்த்து எடுக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை  ஒவ்வொரு மாதமும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு குழந்தைகள் திரைப்படங்களை திரையிடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர் ஒருவரும் அழைக்கப்பட வேண்டும். கடந்த அக்டோபர் 13ஆம் தேதி “தி ரெட் பலூன்” என்ற  பிரெஞ்சு திரைப்படம்  அனைத்து பள்ளிகளிலும் திரையிடப்பட்டது. 34 நிமிடம் ஓடக்கூடிய இந்த மௌனப் படம்  ஆஸ்கார் விருது பெற்ற ஒன்று.  1956ஆம் ஆண்டு வெளியானது. சென்னை பெசன்ட்நகர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை அழைப்பை ஏற்று  நான் (விடுதலை இராசேந்திரன்) சிறப்பு விருந்தினராக பங்கேற்றேன். “பள்ளி மாணவன் ஒருவனிடம் பலூன் ஒன்று கிடைக்கிறது. நூல் கயிற்றுடன் கிடைக்கும் அந்த பலூன் மீது அவனுக்கு உணர்வு பூர்வமான ஒரு  ஈர்ப்பு  உருவாகிறது. எங்குச் சென்றாலும் பலூனின் நூலை உயர்த்திப் பிடித்தவாறே செல்கிறான். பல்வேறு தடைகளை  எதிர்ப்புகளை எதிர்கொள்கிறான். பள்ளிப்...

தலையங்கம் பகுத்தறிவுப் பரப்புரைகளை  ஏன் தடுக்க வேண்டும்?

தலையங்கம் பகுத்தறிவுப் பரப்புரைகளை ஏன் தடுக்க வேண்டும்?

நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் பெரிய இடைவெளி எதுவும் கிடையாது. இரண்டுக்கும் அடிப்படையானது அறிவியல் பகுத்தறிவு சிந்தனை மறுப்பு தான். கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி தரப்பட்ட கொடுமையான செய்தி நாட்டில் பலத்த விவாதங்களை எழுப்பியிருக்கிறது. கேரளாவில் தொடர்ந்து நரபலிக் கொடுமை மாந்திரீக வாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது என்ற செய்திகள் வருகின்றன. வடமாநிலங்களில் ‘பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கையில் பல தலித் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க ‘மந்திரவாதியை’ நாடிச் செல்கிறார்கள். அங்கே நகைகளையும் பணத்தையும் பறிகொடுத்து ஏமாற்றப்படுகிறார்கள். ‘பேய் பில்லி சூன்யம்’ என்ற நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கின்றன. இந்த ஆபத்தான  மூடநம்பிக்கைகள் பற்றி அறிவியல் அடிப்படையில் மக்களுக்கு பகுத்தறிவுப் பரப்புரை செய்யக்கூடிய ஒரே இயக்கம் பெரியார் இயக்கம் தான். கேரளாவில் நரபலிக்குப் பிறகு தான் மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை முடிவு எடுத்துள்ளது. கடவுள் நம்பிக்கை என்பதே அறிவியலுக்கு...

90ரூ மாற்றுத் திறன் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு இரக்கம் காட்ட மறுக்கும் பாசிச ஆட்சி

90ரூ மாற்றுத் திறன் மனித உரிமை செயல்பாட்டாளருக்கு இரக்கம் காட்ட மறுக்கும் பாசிச ஆட்சி

நகர்ப்புற நக்சலைட்டுகள் என்ற முத்திரை குத்தி மனித உரிமை செயல்பாட்டாளர்களைக் கொடூரமாக நசுக்கி வருகிறது பாசிச ஒன்றிய ஆட்சி. அதில் ஒருவர்தான் டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த ஜி.என்.சாய்பாபா. 90ரூ உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலிகளால் தான் அவரால் நகர முடியும். கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டி மகராஷ்டிரா சிறையிலே 7 ஆண்டுகளாக அடைத்து வைத்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. அவருக்கான பிணை கோரி வழக்கு வந்தது. வழக்கை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம் அவரை சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மகராஷ்டிரா மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பம்பாய் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்து அறிவித்திருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிற கருத்து தான் மிகவும் வியப்புக்குரிய ஒன்றாகும். “மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை அவர்கள் எவ்வளவுதான் உடல் ஊனமுற்று இருந்தாலும்,...

சிறையில் தீட்சதர்கள்

சிறையில் தீட்சதர்கள்

அறநிலையத் துறை சட்டம் எதற்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம்; நாங்கள் வானுலகத்திலிருந்து நடராசப் பெருமானோடு “பாரா சூட்டில்” வந்து பூமிக்கு குதித்தவர்கள் என்று உச்சநீதி மன்றம் போய் தீர்ப்பு வாங்கி வைத் துள்ளவர்கள் தில்லை தீட்சதப் பார்ப்பனர்கள். அரசுக்கு கோயில் உண்டியல் கணக்குக் காட்ட மாட்டோம்; தில்லை நடராசன் வந்து கேட்கட்டும் என்பார்கள். வரவு செலவு கணக்குகளை சரி பார்க்க அறநிலையத் துறை அதிகாரிகள் வந்தால் கோயிலுக்குள் வராதே; போ வெளியே ‘கெட் அவுட்’ என்பார்கள். இப்படித்தான் பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜாவும் அண்மையில் பத்திரிகை யாளர்களைப் பார்த்து ‘கெட் அவுட்’ என்று ஆவேசமாகக் கூறினார். பிறகு தான் தெரிந்தது அவர் அப்படிக் கூறிக் கொண்டது தனக்குத் தான் என்று. ‘பிரம்மா’வால் அந்தக் கால கருத்தரிப்பு மய்யத்தில் நெற்றி வழியாகப் பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் ‘பிராமணர்’ களுக்கு ‘பிறவித் திமிர்’ என்ற பண்பும் உண்டு. (விதி விலக்குகள் இருக்கலாம்). தில்லை...

உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேச்சு சாதியம் – ஆணாதிக்கம் – தகுதி திறமை சமூகத்தை ஒடுக்கும் கட்டமைப்புகள்

உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேச்சு சாதியம் – ஆணாதிக்கம் – தகுதி திறமை சமூகத்தை ஒடுக்கும் கட்டமைப்புகள்

இந்தியாவின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய். சந்திரசூட், சாதியம்-ஆணாதிக்கம், தகுதி திறமைக் கோட் பாடு ஆகியவை சமூகத்தை ஒடுக்கும் கட்டமைப்புகளாக இருக்கின்றன என்று கூறியுள்ளார். தேசிய சட்ட பல்கலைக் கழகத்தில் கடந்த சனிக்கிழமை (அக்.15, 2022) பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று அவர் பேசினார். “நாம் இப்போது சட்டம் ஆட்சி செய்யும் ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்மை வழி நடத்தும் இந்த சட்டங்களின் இலக்கு எத்தகையதாக இருத்தல் வேண்டும்? நிச்சயமாக சட்டத்தின் விதிகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டு அதன் உள்ளடக்கத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாக இருக்க முடியாது. நம்முடைய அரசியல் பண்பாடு, குடிமக்களின் பழக்கங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டும். குறிப்பாக இளைய தலைமுறை வழக்கறிஞர்களிடம் இந்தக் கண்ணோட்டம் வரவேண்டும். நாம் இப்போது சட்டத்தின் ஆட்சி நடக்கும் சமூகத்தில் வாழ்கிறோம். இந்தச் சமூகம் – சாதியம், ஆணாதிக்கம் – தகுதி திறமைக் கோட்பாடுகளைப் (யடெநளைஅ) பேசி, சமூக ஒடுக்குமுறைக் கட்டமைப்புகளாக மாற்றி...

வள்ளலார் வைதீக எதிர்ப்பு கருத்தரங்கம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

வள்ளலார் வைதீக எதிர்ப்பு கருத்தரங்கம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

  சமகால அரசியல் சூழல் குறித்த விவாதம் பெரியார் முழக்கம் சந்தா 1000 இலக்காக வைத்து சேர்ப்பது சென்னை மாவட்ட கழகத்தின் எதிர்கால திட்டங்கள், ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வட சென்னை, திருவல்லிக் கேணி, மயிலை, அடையாறு, திருவான்மியூர், நங்கநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், சூலை, ராமாபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். முன்னதாக, கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்,  “தமிழ்நாட்டில் பார்ப்பனிய மதவாதம் காலூன்று வதற்கு எப்படி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன என்பதை விளக்கினார். கட்சிகளை உடைத்தல்; ஊடகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்; தமிழ்நாட்டில் இரண்டா வது இடத்தில் பா.ஜ.க. இருப்பது போன்ற பிம்பங்களைக் கட்ட மைத்தல்; இந்த செயல் திட்டங் களுக்காகப் பணத்தை பெருமளவு செலவு செய்தல் போன்ற விரிவான  தகவல்களைப் பகிர்ந்து கொண் டார். உண்மைக்கு மாறான பா.ஜ.க.வின் பரப்புரைகளை நாம் எப்படி சந்திக்க வேண்டும் என்பது பற்றியும்...

இந்தியாவை இந்தி நாடாக்க ஒன்றிய ஆட்சி தீவிரம்: தமிழகம் கொந்தளிக்கிறது

இந்தியாவை இந்தி நாடாக்க ஒன்றிய ஆட்சி தீவிரம்: தமிழகம் கொந்தளிக்கிறது

இந்தியாவை இந்திநாடாக்க அமீத்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழுப் பரிந்துரைத்துள்ளது. தேர்தலில் வடமாநிலங்களின் வாக்குகளைக் குறி வைத்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி இறங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் தமிழகம் கொந்தளித்துள்ளது. அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, முதல் முறையாக 1976ம் ஆண்டில் அலுவல்பூர்வ மொழி சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இக்குழுவில் மக்களவை எம்பி.க்கள் 20, மாநிலங்களவை எம்பி.க்கள் 10 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இக்குழு செயல்படுகிறது. இக்குழு அதன் 11வது அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு: இந்தி மொழி பேசும் மாநிலங்களில் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், ஒன்றிய பல்கலைக் கழகங்கள், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் இந்தி மொழியிலும், பிற மாநிலங்களில் உள்ளூர் மொழியான தாய்மொழியிலும் பயிற்றுவிக்க வேண்டும். இந்தி மொழியை ஐநா.வின் அலுவல் மொழிகளில் ஒன்றாக்க...

நங்கவள்ளிப் பகுதியிலில் கழகத்தில் இணைந்த 30 தோழர்களுக்கு பயிற்சி வகுப்பு

நங்கவள்ளிப் பகுதியிலில் கழகத்தில் இணைந்த 30 தோழர்களுக்கு பயிற்சி வகுப்பு

நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 07.10.2022 வெள்ளி அன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நங்கவள்ளி சமுதாயக் கூடத்தில் புதிய தோழர்களுக்கான ‘பெரியாரியல் ஓர் அறிமுகம்’ எனும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இவ்வகுப்பிற்கு நகரச் செய லாளர்  பிரபாகரன் அனைவரை யும் வரவேற்று புதிய தோழர் களின் அறிமுகத்தோடு துவக்கி வைத்தார். காலை முதல் அமர்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘தமிழகம் பெரியாருக்கு முன் பின்’ எனும் தலைப்பிலும், மதியம் இரண்டாம் அமர்வில் கழக பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன்  ‘திராவிடர் விடுதலைக் கழகத் தின் செயல்பாடுகள்’ குறித்தும், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ‘கழகத்தின் களப் பணிகள்’ குறித்தும் உரையாற்றினர். காலையிலும் மதிய உணவு இடை வேளைக்குப் பின்பும் வகுப்புகள் துவங்குவதற்கு முன் கழக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு, மேட்டூர் நகர கழக பொருளாளர் முத்துக்குமார்,...

வள்ளலாரின் ஆரிய மொழி எதிர்ப்பு

வள்ளலாரின் ஆரிய மொழி எதிர்ப்பு

வள்ளலார்,  ‘சத்தியப் பெரு விண்ணப்பத்’தில், தமக்குத் தமிழ்ப்பற்றை உண்டாக்கியதற்காக  இறைவனுக்கு நன்றி கூறும் பகுதி வருமாறு: “எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித் தலைமைக் கடவுளே! இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ‘ஆரிய முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவொட்டாது’, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கு மிகவும் இனிமையுடையதாய் சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த ‘தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்து’ அத்தென்மொழிகளாற் பல்வகைத் தோத்திரப் பாட்டுகளைப் பாடுவித் தருளினீர்.” பெரியார் முழக்கம் 13102022 இதழ்      

இராஜராஜசோழன் நடத்திய பார்ப்பனிய ஆட்சி

இராஜராஜசோழன் நடத்திய பார்ப்பனிய ஆட்சி

இராஜ இராஜ சோழன் பதவிக்கு வருவதற்கு முன்பே நடந்த சம்பவங்கள் தான் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்களமாக இருந்தாலும் சோழ மன்னர்கள் அனைவருமே பார்ப்பனர்களின் அடிமை ஆட்சியைத் தான் நடத்தி வந்திருக்கிறார்கள் என்பதே  உண்மையான வரலாறு. “தமிழ்த் தேசியத்திற்கு முன்னோடி”, “தமிழர்களின் பொற்காலம்” என்று வர்ணிக்கப்படுற இராஜ ராஜனைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும் பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது! பார்ப்பனர்களை சேனாதிபதிகளாகவும், அவைத் தலைவர்களாகவும், அரியணை யேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலை விரித்தாடியது இராஜராஜன் காலத்தில். அருண்மொழித் தேவன் என்ற தமிழ்ப் பெயரை இராஜராஜசோழன் என்று வடமொழிக்கு மாற்றிக் கொண்டவன்! அடிமைகள் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக் காட்டுகின்றன. தாசியின் மக்கள், பெற்றோரால் விற்கப்பட்டவர் போன்ற பலவகையான...

வேத – ஆகம சாஸ்திரப் புராணங்களைக் கடுமையாக எதிர்த்தார் வள்ளலார்

வேத – ஆகம சாஸ்திரப் புராணங்களைக் கடுமையாக எதிர்த்தார் வள்ளலார்

  வள்ளலார் தொடக்கக் காலத்தில் சைவத்திலும் முருகக் கடவுளிடமும் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனையில் மாற்றங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் சைவம், ஆகமம், வேதங்களைக் கேள்விக்கு உட்படுத் தினார். பெரியார் ஆறாம் திருமுறைப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டாh. வள்ளலாரின் வரலாற்றில் தலைசிறந்த நூலாகக் கருதப்படும் நூல் – முனைவர் ஊரன் அடிகள் எழுதியதாகும். அண்மையில் ஜூன் 13, 2022 அன்று தமது 89ஆம் அகவையில் முடிவெய்தினார். தமிழக அரசின் விருது பெற்ற அந்த நூலிலிருந்து வள்ளலாரின் வேத ஆகம எதிர்ப்புக் கருத்துகளின் தொகுப்பு. வேத, ஆகம, சாத்திர, புராண, இதிகாசங்கள் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா. வேதங்கள் ஆகமங்கள் சாத்திரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் கூறும் கதைகளையும் கற்பனைகளையும் பெருமான் ஒவ்வார் . ‘கலை உரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ என்பார். வேதாகமங்கள் சூதாகச் சொல்லுகின்றன, உண்மையை வெளிப்படையாக உரைக்கவில்லை, இவற்றால் என்ன...

தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ‘சரணாகதி’

தலையங்கம் ஆர்.எஸ்.எஸ். ‘சரணாகதி’

1925ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி அன்று தான் ஆர்.எஸ்.எஸ். நாக்பூரில் துவக்கப்பட்டது. எனவே விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய விழாக்களை நடத்துவது வழக்கம். நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி பேரணியை தொலைக் காட்சிகள் வெளியிட்டன. அதில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. ‘ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்திலிருந்து முதன் முறையாக பேரணியை பார்வையிடுகிற பார்வையாளர்களில் ஒரு பெண் இப்போது தான் அழைக்கப்பட்டு இருக்கிறார்’ என்ற செய்தியை தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவில் பங்கெடுப்பதற்கு பார்வையாளராகவே ஒரு பெண் அழைக்கப்பட்டிருப்பது 1925க்குப் பிறகு இதுவே முதல் முறை. ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்கள் யாரும் உறுப்பினராக முடியாது என்ற தடை அப்படியே இப்போதும் நீடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி அணி வகுப்பையும் தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள். அதில் ‘சுவயம் சேவக்காக’ ஒரு பெண் கூட வரவில்லை. ஆனால், இங்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பெண்களுக்காக ஆர்.எஸ்.எஸ் தனி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறது என்று அதற்கு ஒரு சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்....

இரத்தக் கலப்பு இல்லாத இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை நிரூபித்த மரபியல் ஆய்வாளருக்கு நோபல் பரிசு ர. பிரகாசு

இரத்தக் கலப்பு இல்லாத இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை நிரூபித்த மரபியல் ஆய்வாளருக்கு நோபல் பரிசு ர. பிரகாசு

மனித சமூகம் கலப்பில்லாமல் தனித்தனி குழுக்களாக வாழ்ந்திருந்தால் மற்ற டைனோசர்கள் உள்ளிட்ட பல உயிரினங்களைப் போல காலப் போக்கில் கரைந்து போயிருக்கக்கூடும். ஜாதியப் பெருமை பேசி ஜாதியக் கலப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ‘மனுவாதிகள்’ கருத்துகளை அறிவியல் ரீதியாக தகர்த்து எறிந்துள்ள மரபணு ஆய்வாளருக்கு இப்போது நோபல் பரிசு கிடைத்துள்ளது; அவரது பெயர் சுவாந்தே பாபோ. மருத்துவப் பிரிவில் 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மரபியல் ஆய்வாளர் சுவாந்தே பாபோ-விற்கு அறிவிக்கப் பட்டுள்ளது. உலகில் இனத்தூய்மை வாதத்திற்கு இடமில்லை, இனக்கலப்பு இல்லாத ஒரு மனித இனம் உலகில் இல்லவே இல்லை என்பதை டி.என்.ஏ. ஆய்வுகள் மூலம் நிரூபித்ததற்காக சுவாந்தே பாபோவிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடவுள்தான் உலகைப் படைத்தார், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான உயிரினங்களையும் படைத்தார், மரம், செடி, கொடிகளை படைத்தார் என்பது உலகில் இதுவரை தோன்றிய அனைத்து மதங்களும் கூறியிருக்கும் கட்டுக்கதைகள். ஆனால் பால்வெளியில் ஒரு...