அரியூரில் தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்

“தமிழர்களை திராவிடர்களை இழிவுபடுத்தும் தீபாவளியை புறக்கணிப்போம்;  பார்ப்பன புராண தீபாவளி நரகாசூரன் கட்டுக்கதை அறிவியலுக்கு பொருந்துமா?” என்ற தலைப்பில்  24-10-2022 அன்று  காலை 10.30 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்ட தலைவர் பூஆ. இளையரசன் தலைமையில் அரியூரில் உள்ள கே.வி.ஆர் அரங்கத்தில் தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கடவுள் மறுப்பை  பிரகாஷ் பேசினார். கடலூர் மாவட்ட தி.வி.க செயலாளர் சிவக்குமார் வரவேற்பு கூறினார்.   தொடர்ந்து மக்கள் அதிகாரம் சாந்த குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரை செயலாளர் – விஜி பகுத்தறிவு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் – அறிவொளி, புரட்சி பாரதம் கட்சி புதுச்சேரி மாநில தலைவர் – ஓவியன், தமிழக வாழ்வுரிமை கட்சி விழுப்புரம் மாவட்டத் தலைவர் –  திராவிட நாகு, தி.வி.க விழுப்புரம் மாவட்ட தலைவர் –  பூஆ.இளையரசன்,  மக்கள் அதிகாரம் – ரூபாவதி ஆகியோர் தீபாவளி புராணக் கதையில் உள்ள ஆபாசம்  அறிவியலுக்கு முரணான கட்டுக்கதை தமிழர்களை இழிவுபடுத்தும் போக்கையும், தீபாவளி பண்டிகையில் வெடிக்கப்படும் பட்டாசால்  மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு சுற்று சூழல் கெடுதல் ஆகியவைகளை பற்றியும் விளக்கினர்.

தீபாவாளி பண்டிகையில் பார்ப்பன ஆதிக்கதின் மேலாண்மையும் பார்ப்பனர் அல்லாத மக்களின் அடிமைத்தனத்தை பற்றி பெரியார் பேசியவை குறித்தும், தீபாவளி பண்டிகைக்கு ஊடகங்கள் திரை நடிகர்கள் கொடுக்கும் விளம்பரம்  முக்கியத்துவம், தீபாவளி பண்டிக்கைகு அரசு மற்றும் தனியார்  நிறுவனங்கள் கொடுக்கும் போனஸ் அதை குறிவைத்து முதலாளித்துவ நிறுவனங்கள் தூண்டும்  நுகர்வெறியை  வைத்து  சுரண்டி கொழுத்துக் கொண்டு பார்ப்பனியத்தை வளர்த்துவரும் உள் அரசியலை புரிந்துகொண்டு திபாவளி பண்டிகையை புறக்கணிக்க வேண்டிய அவசியத்தையும், எதிர்வரும் காலத்தில் தீபாவளி உள்ளிட்ட பார்ப்பன பண்டிகையை மக்களை புறக்கணிப்பதற்கான வேலை திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர்  கே.வி.ராஜன்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் –  அம்பேத்கர், மருதூர் மதிவாணன், வழக்கறிஞர் பிரபாகரன், பெரிய பாபு சமுத்திரம் முருகையன், நவமால் காப்பேரி (விசிக),  விஜய், தமிழ்மாறன்,  சதீஷ், அப்பாஸ்,  விழுப்புரம் முத்து உள்ளிட்ட தோழர்கள்  கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 03112022 இதழ்

 

You may also like...