பிரகலாதன் முதலாம் ஆண்டு நினைவு நாள்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூரில் பெரியாரின் பெருந் தொண்டர்  திராவிடர் கழக மண்டல செயலாளர் பிரகலாதன்  முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி  தலைமை உரை நிகழ்த்தினார். கழகத்தின் அம்மா பேட்டை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் வரவேற்பு கூறினார்.

தொடர்ந்து ஈரோடு வடக்கு மாவட்டத்தின் பிரச்சார அணியின் செயலாளர்  வேணுகோபால், மாநில செயற்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி, தமிழர் இன உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக  பன்னீர்செல்வம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அம்மாபேட்டை ஒன்றிய பொறுப்பாளர் பெரியநாயகம், கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத்தின் வெளியீட்டுச் செயலாளர்  இராம இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிறைவாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரை யாற்றினார். நிகழ்வில் கலந்து கொண்ட தோழமை அமைப்புகள் கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழகத்தின் குருவை நகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழர் இன உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக கோவிந்தராசு, பத்மநாதன் பிரகலாதன் குடும்பத்தினர் தோழர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில், புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தாவாக கழகத் தலைவரிடமும் பொருளாளர் இடமும் 50 சந்தாவுக்கு உண்டான ரூ.15,000 ஆயிரம் வழங்கப்பட்டது. நிறைவாக திலீபன் நன்றி கூறினார்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குருவை பெரியார் படிப்பகத்தில் அசைவ உணவு வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 17112022 இதழ்

 

 

You may also like...