குஜராத்தி அதானி சுரண்டல்: அடுக்கடுக்கான ஆதாரங்கள்

மோடி – அமித்ஷா – அதானி என்ற மூன்று குஜராத்திகளின் பிடிகளில் இந்தியாவின் பொருளாதாரமும் அரசியலும் சிக்கிக் கொண்டிருக்கிறது. அதானி கொள்ளைகளை விவரிக்கிறது இக்கட்டுரை. (கடந்த இதழ் தொடர்ச்சி)

கடந்த 15 ஆண்டுகளில் அதானியின் வளர்ச்சி அபரிதமாக இருந்துள்ளது. 2006-07 நிதியாண்டில் அதானி குழுமத்தின் வருமானம் ரூ.16,953 கோடி. இதில் கடன் மட்டும் ரூ.4,353 கோடி. இதுவே 2012-13 நிதியாண்டில், வருமானம் ரூ.47,352 கோடி எனவும் கடன் ரூ.81,122 எனவும் இருந்தது. மோடி 2014இல் பிரதமராக பதவியேற்கும் போது அதானியின் நிகர மதிப்பு 7.1 பில்லியன் டாலர்கள். அது தற்போது 137 பில்லியன் டாலர்கள் என்றளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்கு பின்னால் மோடி அரசு பின்புலத்தில் வங்கிகள் கொடுத்த கடனே உள்ளது என்பதை அறிய முடிகிறது.

2014-க்கு பிறகு மோடி அரசு 4.6 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த பிறகும், அதானிக்கு தற்போது 30 பில்லியன் டாலர்கள் கடன் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் பின்ச் குரூப்-ன் கிளை நிறுவனமான Credit Sights அதானி குழுமத்தின் கடன் மற்றும் வேகமான வர்த்தக விரிவாக்கத்தை ஆய்வு செய்து “Deeply overliveraged” என அறிவித் துள்ளது. அதாவது அதானி குழுமத்தின் சந்தை மதிப்பைக் காட்டிலும் கடன் அளவு அதிகப்படியாக உள்ளது என்பது பொருள்.

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான அதானி தலைமையிலான அதானி குழுமம் கடந்த 5 வருடத்தில் ஏற்கனவே வர்த்தகம் செய்து வந்த துறைகளைத் தாண்டி பல புதிய துறைகளில் முதலீடு செய்து தனது வர்த்தகங்களை ராக்கெட் வேகத்தில் விரிவாக்கம் செய்து வருகிறது. ஆனால் இதில் 90 சதவீத விரிவாக்கம் மற்றும் முதலீட்டு பணம் கடன் வாயிலாக வந்தது என்பதால் அதானி குழுமத்தின் கடன் அளவீடுகள் மற்றும் பணப் புழக்கத்தின் மீது அதிகப் ளபடியான அழுத்தத்தை உருவாக்கியுள்ளது எனவும் கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தாலோ அல்லது ஏதாவது ஒரு வர்த்தகம் மோசமான வர்த்தக நிலைக்குத் தள்ளப்பட்டாலோ அதானி குழுமம் கழுத்து வரையில் கடன்களை வைத்திருக்கும் காரணத்தால் மோசமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கடன் வலைக் குள் தள்ளப்படும் வாய்ப்புகள் உள்ளது எனவும் கிரெடிட்சைட்ஸ் கூறியுள்ளது.

அதானி குழுமம், புதிய மற்றும் தொடர்பில்லாத வணிகங்களில் நுழைவதால் அத்தகைய புதிய வணிகங்கள் பெரும்பாலும் அதிக மூலதனம் மிகுந்தவை என்பதால் செயல்படுத்தல் மற்றும் மேற்பார்வை குறித்த கவலைகள் எழுப்புகின்றன என அதானி குழுமத்தில் இருக்கும் முக்கியப் பிரச்சனைகளை கிரெடிட்சைட்ஸ் பட்டிய லிடுகிறது. அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி, பிரதமர் மோடி அரசுடன் “வலுவான உறவை பெற்றுள்ளார். இதே போல பல அரசு கொள்கை முடிவுகள் அதானி குழுமத்திற்கு சாதகமாக விளங்கு கிறது” எனவும் கிரெடிட்சைட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • அதானி குழுமம் பெற்ற முக்கிய கடன்கள் (ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2022 வரை)

ரூ. 48,000 கோடி. இதில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அதாவது ரூ.18,770 கோடி அரசு வங்கியான ‘பாரத் ஸ்டேட் வங்கி’யால் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல குஜராத்தில் உள்ள முந்த்ராவில் PVC ஆலையை கட்டுவதற்கு 14,000 கோடி கடனுக்காக அதானி குழுமம் பாரத ஸ்டேட் வங்கியை (SBI) அணுகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில்தான் நவி மும்பையில் உள்ள கிரீன்பிஎல்ட் சர்வதேச விமான நிலையத்திற்காக 12,770 கோடி பாரத ஸ்டேட் வங்கியிடம் அதானி குழுமம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

  • அதானியின் நிறுவனம் முந்த்ரா துறைமுகத்தில் புதிய செப்பு சுத்திகரிப்பு திட்டத்திற்காக ஸ்ரீ6,071 கோடி திரட்டி யுள்ளது. மார்ச் 2022 இறுதியில், அதானி குழும நிறுவனங்களின் மொத்தக் கடன், முந்தைய ஆண்டைவிட 42 சதவீதம் அதிகரித்து 2.22 லட்சம் கோடியை எட்டி யுள்ளது. இவ்வாறு பல இலட்சக் கணக்கான கோடிகளில் இந்திய மக்களின் பணத்தை கடனாக வாரி வழங்கி மோடி அரசு அவரை உலகின் மூன்றாம் பணக்காரராக ஆக்கியுள்ளது.
  • அதானியின் இந்த வளர்ச்சி கொரானா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினர் என நாட்டின் 90ரூ அதிகமான மக்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில், அவர்களை சந்தையாக கொண்ட அதானி குழுமம் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது எனில், நம் மக்களை சுரண்ட அதானியை மோடி அரசு அனுமதித்துள்ளது.

முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் ஒரு கூட்டத்தில் நிலம், இயற்கை வளங்கள், அரசு ஒப்பந்தங்கள்/உரிமங்கள் தான் இந்திய பணக்காரர்கள் பலரின் பெரிய வருவாய் மூலங்களாக இருக்கின்றன என்றார். அதற்கு “ரிசோர்ஸ் ராஜ்” எனவும் அவர் பெயரிட்டார். அவர் அன்று அவ்வாறு குறிப்பிட்டது அதானி,  அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரியாக பொருந்துகிறது.

இந்தியாவில் ஏழை மற்றும் பணக்காரர் களுக்கு இடையே சமத்துவமின்மை வரலாறு காணாத அளவுக்கு மிகவும் அதிகரித் திருப்பதாக பிரான்ஸ் நாட்டு பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டி கூறுகிறார். அது உண்மை என நிரூபிக்கும் வகையில் அதானி அம்பானி போன்ற இந்திய பணக்காரர்கள் உலக பணக்கார வரிசையில் இடம்பெற, எளிய மக்களோ ஒரு வேளை உணவு கூட கிடைக்க பெறாத நிலையிலும், மேலும் விலைவாசி ஏற்றத்தால் எதிர்காலமே சூனியமாக செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலைக்கு தள்ளியுள்ளது இந்த மோடி அரசு.

– மே 17 இயக்க இணையதளத்திலிருந்து

(முற்றும்)

பெரியார் முழக்கம் 27102022 இதழ்

You may also like...