“ரிஷிகள் நேரில் வரவேண்டும்”

ழ         ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எல்லாம் பயப்பட மாட்டார். அவருக்கு பாரதத்தை உருவாக்கிய ரிஷிகளும் முனிவர்களும் வந்து கட்டளையிட வேண்டும், அப்போது தான் அவர் பதவி விலகுவார்!

ழ         உயர் ஜாதி ஒதுக்கீட்டில் பிராமணர் களுக்கு கிடைக்கும் இடங்கள் குறித்து அரசிடம் வெள்ளை அறிக்கை கேட்கிறார் வானதி சீனிவாசன்.

அத்துடன் கொட்டும் மழையில் இரவு பகல் பாராது மழைநீரை அகற்றிக் கொண்டிருக்கும் தொழி லாளர்களில் பிராமணர்கள் எவ்வளவு பேர்? என்ற அறிக்கையையும் கேட்டால் நல்லது.

ழ         கடவுளுக்கு ஆண்டுதோறும் நடத்தும் திருமணம் போலியானது என்று தீட்சதர்கள் நீதிமன்றத்தில் மனு போட்டிருக்கிறார்கள்.

ஆனால் பக்தர்களை உண்மை என்று நம்ப வைக்கிறார்கள் !

இதற்குப் பெயர் பக்தி ஆன்மீகம்!

– விடுதலை இராசேந்திரன் டுவிட்டரிலிருந்து

 

பெரியார் முழக்கம் 17112022 இதழ்

 

You may also like...