கோவையை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் அண்ணாமலை மீது கழகம், காவல் துறையில் புகார்

கோவையில் கடந்த 23.10.2022 அன்று கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில்  இருந்த சிலிண்டர் வெடித்து  விபத்து நடந்தது. கோவை மாநகரக் காவல் துறை இந்த விசயத்தில் தொடர்ந்து விசாரித்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் விசாரணையைக் கெடுக்கும் விதமாகவும், கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாகவும் தொடர்ந்து மதக் கலவரத்தை உருவாக்கும் வகையில் முன்னுக்கு பின் முரணாகப் பேசி விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

பொது அமைதியைக் கெடுத்து கோவையை கலவர பூமியாக்கத்  துடிக்கும் அண்ணாமலையை விசாரணைக்கு உட்படுத்தக் கோரியும், விசாரணையில் குற்றம் இருக்கும் பட்சத்தில் அதற்கு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், மாநகர செயலாளர் நிர்மல் குமார் தலைமையில் கோவை மாநகர உதவி ஆணையாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்டவர், ‘மாநகர காவல் ஆணையாளரிடம் தகவலை சொல்கிறோம் உரிய நடவடிக்கை எடுக்கின்றோம்’ என்று கூறினார்.

தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம், வழக்கறிஞர் சரவணன், தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன், மாதவன், இயல், வழக்கறிஞர் விஷ்ணு உடன் இருந்தனர்.

பெரியார் முழக்கம் 03112022 இதழ்

You may also like...