சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி
ஏன் இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் ‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி – நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை – ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை முதல் தேதி முதல் அமுல்படுத்திவிட்டார். அம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த ஜி.எஸ்.டி. சிறிய நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் சாமான்ய மக்கள் தலை மீது சுமையை ஏற்றியிருக்கிறது. ஜவுளி, பீடி, மருந்துத் தொழில்கள், கட்டுமானம், போக்குவரத்து, தையல், தீப்பெட்டித் தொழில்கள்,...
