மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு!

24/25/6/17 தேதிகளில் நடைபெறும் மலேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு  டத்தோசிரி டாக்டர் சுப்ரமணியம்  அவர்கள் மாநாட்டைத் துவக்கிவைப்பார்!

இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பேராளர்களாகப் பங்கேற்பு!

 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்பெரும் மாநாட்டில்

திராவிட இனத்தின் மீட்சியே; தமிழ் இனம்!

தமிழும் திராவிடமும் ஒன்றே!”யென கருத்தரங்கில் விவாதிக்கப்படும் !

இனத்தால் திராவிடன்,  மொழியால் தமிழன்,  உலகத்தால் மனிதன் என்ற கருப்பொருளால் முன்னெடுக்கப்படும் இம்மாநாட்டு வழி உலகம் தழுவி வாழ்கிற தமிழ் உணர்வாளர்களை ஒரே குடையில் கீழ் கட்டமைக்க முடியுமென்ற சிந்தனையின் வெளிபாடே இம்மாநாட்டுக்குரிய இலக்காகும்.

அதனால் இம்மாட்டையொட்டி நடைபெறும் இரண்டுநாள் கருத்தரங்கில் பேராசிரியர், சுப வீரபாண்டியன், பேராசிரியர் அ.மார்க்சு, கருத்தாளர் சு.அறிவுக்கரசு, திரைஇயக்குனர் வேலுபிரபாகரன், கருத்தாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் ஆதவன், கருத்தாளர் தோழி ஓவியா, கருத்தாளர் விடுதலை ராசேந்திரன், கருத்தாளர் இளபுகழேந்தி, எழுத்தாளர் மஞ்சை வசந்தன், கருத்தாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் கலந்து விவாதிப்பதுடன் அவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு தலைப்புகளில் அரிய உரைகளையும் நிகழ்த்துவார்கள்

இம்மாட்டை மாண்புமிகு அமைச்சர் டத்தோசிரி டாக்டர் சுப்ரமணியம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தவுடன் மாநாட்டு மலரை,பிரதமர்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோசிரி தேவமணி அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்து உரையாற்றுவார்.

மேலும் 24/6/17 ல் தொடங்கும் முதல் நாள் கருத்தரங்கை பிற்பகல் ஒரு மணியளவில் இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ சரவணன்அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து உரையாற்றுவார்.

அதேபோன்று 25/6/17 ல்  காலை பத்து மணிக்குத் துவங்கும் இரண்டாம் நாள் கருத்தரங்கை , கல்வித்துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ ப.கமலநாதன் அவர்கள் துவக்கிவைத்து உரை நிகழ்த்துவார்.

மாநாடு முக்கிய குறிக்கோளை முன்னிலைப்படுத்தப்படுவதால்,மாநாட்டின் கருப்பொருளை மாநாட்டுத்தலைவரின் எண்ணவோட்டத்தின் அடிப்படையில் பதிவிட வேண்டியது அவசியமாகும்! அதையொட்டிய சில முன்னோட்டப்பகுதி வருமாறு !

அதாவது;

*மனித இனத்தின் தொடக்க நிலையிலான மரப்பணுவின் தோற்றம், அந்தத் தோற்றத்தின் வழியே இனம் சார்ந்து, பின்னர் மொழிச்சார்ந்து,கட்டங்கட்டமாக பண்பாடு சார்ந்து,மண்வழி மரபாலும்,கடல் வழி பரப்பாலும்,நதிவழி வளத்தாலும்,மலைவழி நுழைவாலும் தோற்றமும் மகத்தான மாற்றமும் உள்ளாகிக்கொண்டு கட்டமைக்கப்பட்ட ஓர் இனத்தின் தொன்மைக்கும் மாண்புக்குமான நல்லுறவுக்குமான,முடிவுக்கு திருப்புமுனையாக முன்னெடுக்கவே இம்மாநாடு முனைப்புக்காட்டுகிறது.

*உலகத்தால் தொன்மைக்காலமாக கட்டமைக்கப்பட்ட மாந்தரில் திராவிட இன மரபுவழி தோற்றமே முதன்மை பெற்று வாழ்ந்திருக்கிறது.அந்த இனத்தின், சைகைமொழியாகவும் ;பின்னர் பேசும் மொழியாகவும் திராவிடமோ முன்னோக்கியுள்ளது. பின்னர் அதுவே தமிழாகவும் முன்னுரிமை பெற்ற வடிவமாகவும் மாற்றம் பெற்றறுள்ளதாகவும் உணர்த்த முடிகிறது.பிரளயமிக்க பூகோள மாற்றங்களால் நிகழ்ந்துவிட்ட பல்வேறு மாற்றங்களால் திராவிட இனத்தின் கூறுகள் பல்வேறு சிதைவுகளுக்கு உள்ளாக வேண்டிய எதார்த்தமான போக்குகள் கட்டாயக் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப நிகழ வேண்டியதாயிற்று,ஒரு நிலயமைப்பு மாறுப்பட்டாலே அந் நிலத்தில் வாழும் மமக்களின் வாழ்க்கையம் நிலை வேறுப்பட்டுதான் நிற்கவேண்டியதாகும்.

* எனவே அடிப்படையிலான கட்டமைப்பிலிருந்து, திராவிடர் என்பதும் தமிழரே,தமிழர் என்பதும் திராவிடரே,திராவிட மொழி என்பதும் தமிழே,தமிழ் மொழி என்பதும் திராவிட மொழியே; இனமரபுக்குப்பிறகே மொழிமரபு வந்திருக்க முடியும். அதாவது மொழியை முன் நிறுத்தினால் ததமிழரின் வரலாற்று ஆயுள் குறைக்கப்பட்டுவிடும்,இனத்தை முன் நிறுத்தி  தமிழ் மொழியைப் பின் நிறுத்தினால்தான் ஆயுள் நீண்டுள்ள இனத்தின் வரலாறு விரிவுப்பட்டதாக அமையும் .என்று அறிவியல் முடிவுகள் தெரிவிக்கும் செய்தியாகும், அதனாலே திராவிடர் வேறு, தமிழர் வேறு என்ற தவறான கோட்ப்பாட்டுக்குள்ளே நுழைவது மிகவும் தவறானமுடிவாகும்.

*காலவோட்டத்தில் ஒரே குடும்பத்துப்பிள்ளைகளிடையே மண்ணுக்கு தகுந்த மாதரியும் அந்தப் பின்னணிக்குத் தகுந்த மாதரியும் வாழ்க்கை கட்டமைப்பும்,பண்பாட்டுக்கட்டமைப்பும் மொழியின் கட்டமைப்பும் மாறவும் மாற்றிக்கொள்ளவுமான காலநிகழ்ச்சிகளுக்கு வித்தூண்டப்பட்டு விடும்.இது எதார்த்தமான முடிவாகவும் அமையும்.எனவே அகண்ட மெமோரியா கண்ட பிளவால் அகண்ட திராவிடம் முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது,

*இத்தகைய சிதைவினாலேயே பெரும் நிலப்பகுதிக்கான நாடடின்  எல்லைகள் சுருங்கிக்கொண்டன. நிலயமைப் பும் திருபு நிலையானாகின கண்டம் விட்டு கண்டம்;  மக்கள் மாறத் தொடங்கினர்.அப்படியேற்பட்ட மாற்றங்களாலே இனக் கலப்பும் மொழிக்கலப்பும் பின்னர் மதக்கலப்பும் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்தேறியுள்ளன.இத்தகைய சூழ்நிலைக்குச் சுற்றி விடப்பட்ட மக்களிடையே ,அவ்வப்போது தோன்றி வந்துள்ள ஆதிக்கவாதிகள் தங்களிடமிருந்து  தூக்கி வீசிய பலாத்தாரமான அடக்குமுறை அணுகுமுறைகள்,திராவிடர்களையும் ,அந்த மக்கள் வாழ்ந்த நிலங்களையும்,அவர்கள் அதுவரை பின்பற்றி வந்த நல்ல மரபுகளையும் மாண்புகளையும் சிதைத்துவிட்டன.

*இன்றைக்குத் தவறான அரசியல் ஆளுமையாளும்,சுயநல அரசியல்                அறுவடைக்கானக் காரணங்களாலும் திராவிட இனத்தின் லட்சக்கணக்கான ஆண்டுகளைச் சுருக்கிக்கொண்டு,வெட்டித்தனமான இனவாதம் பேசத் துவங்கியுள்ள சில கூட்டத்தால், தமிழினத்தின் ;அதாவது திராவிட இனத்தின் நீண்ட நெடிய வரலாறு கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன.

*எந்த ஆய்வுக்கும் உட்ப்படாத பல கருத்துகளுக்கு வெற்று உணர்ச்சிகள் மூலமாக ஆரிய பழக்க வழக்கங்கள் திராவிட பெருநிலத்தில் ஆழமாக பதிவிட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொழியாலும் இனத்தாலும் பழக்க வழக்கத்தாலும் வேறுப்பட்டு மாறுப்பட்டு இருக்கும் ஆரியம்,எந்தவகையிலும் தமிழர் நிலத்திலோ அவர்தம் உள்ளத்திலோ ஆட்சிப்பீடம் ஏறிட அனுமதித்திடக்கூடாது.

*அதேவேளை திராவிடம் என்பதானது அதன் நிலப்பகுதியானது ,இந்திய சுதந்திரம் பெற்றப்பிறகு, மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தளிக்கப்பட்ட எலலைகளுக்குள்ளேயே  நிறுத்திவிடவோ, நின்றுவிட்டதாகவோ,அந்த நிலப்பகுதிதான் திராவிட நிலப்பகுதியாகவும் கருதி வரலாற்றைச் சுருக்கி எழுதிவிடவும் கூடாது.குறிப்பாக அன்றைக்கிருந்த மெமோரியா கண்டத்தின் நுழைவாயிலிருந்து இன்று நமது பயணத்தைத் தொடங்க வேண்டியுள்ளது.

*இன்றைக்கு அந்தக் கண்டத்தில் பூகோள மாற்றங்களால் பல நாடுகள் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் ,அந்த நாடுகளை மீண்டும் மீட்டெடுக்கும் போராட்டக்களம் ஒன்று ;இன்றைக்கு தேவைப்படாமல் போனாலும், அந்த நிலங்களிலெல்லாம் திராவிட இனத்தின் தொடக்க வேர்கள் பதிவாகியிருக்கின்றது என்பதை எந்த ஆய்வுகளாலும் மூடிமறைத்திடவும் முடியாது.

*உதாரணமாக இன்றைக்குரிய சீனாவின் நோக்கமென்ன? அதைச்சுற்றியுள்ள நாடுகளைப்பற்றி; அதன் பார்வை என்ன? வட,தென் கொரியாவிலிருந்து வட,தென் வியட்நாம்,தைவான்,சப்பான் ,ஆங்காங்காங் வரை, கம்போடியாவிலிந்து, தாய்லாந்து மங்கோலியா வரைக்கும் சீன பெருநிலத்தின் பெரும்பகுதிகளே என்ற,அந்தக் கருத்தியலிருந்து அது,இன்னும் தன்னைப்பின் வாங்கிக்கொள்ளவில்லை,அதில் எந்த மாற்றத்தையும் சமரசத்தையும் உள்வாங்கிக்கொள்ளவுமில்லை. வாய்ப்புக்கிடைத்தால் போரிட்டு அந்த நிலப்பகுதிகளை மீட்டெடுக்கவும் அந்நாடு தயங்கப்போவதும்மில்லை. காலம் அப்படியொரு பாடத்தைப் படிப்பினையை ஏற்படுத்தித் தராது இன்று அறுதியிட்டு கூறிடவும் முடியாது.

அத்தகைய நிலைப்பாட்டினை நினைத்துப்பார்க்கும் போது;இன்றைய காலகட்டத்தில் உலகளாவியளவில் தமிழர் நிலைபாடு என்ன?தமிழக எல்லைக்குள் நின்றுக்கொண்டு இன அரசியலையும் தொடர்ந்து சாதி அரசியலையும் உசுப்பேற்றிக்கொண்டிருக்கப்போகிறோமா? அல்லது இன்றைய மொழிவாரி மாநிலங்களிடையே பிரிவினை வாதத்தை முன் வைத்து மலிவான அரசியலை முழங்கிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது மரப்பணு கருத்தியலால் முதல் இனமாக மொழிவழி பண்பாட்டால் தலைச்சிறந்த இனமாக,( மெமோரியா)திராவிட பெருநிலத்தில் பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பு, கோடி ஆண்டுகளுக்கு முன்பு தலையெடுத்த நல்ல மரபை மீண்டும் தூக்கிநிறுத்தப்போகிறோமா?

அதற்காக அன்று கைமாறி போய்விட்ட நாடுகளை மீண்டும் கட்டியாளப்போகிறோமா?என்பதில்லை நமது கேள்வி?,இன்றைக்கு ஒவ்வொரு நாட்டாலும் ஒவ்வொரு மதத்தாலும்,பல்வேறு இனக்கலப்பாலும் ஒன்றிப்போய்விட்ட திராவிட பேரினத்தின் பிம்பதைத் நல்லத் தமிழ் உணர்வாலே ஒன்றிணைத்தாலே நாம்  பெரும் வெற்றிக்குரிய சரியான வித்தைப் பதிவு செய்ததாக அமைந்துவிடும் அதை சரியாக உணர்ந்தாலே போதும்.  இதுவரைக்குமான நமது பார்வையில் நமது  பயணத்தில்;

*இந்தியாவை இந்தியாவுக்குள் பார்ப்பதைத் தவிர்த்து விடுவோம்.தமிழனை தமிழ் நாட்டு எல்லைக்குள் அடைப்பதைத் நிறுத்தி விடுவோம் மொழிவாரி *மாநிலங்களுக்குள் திராவிட இனவாதத்தைப் புதைப்பதை வேரோடு  மீட்டுவோம்.

உண்மையான திராவிடனைத் தமிழனாகப் பார்க்க மறந்து விட்டதனாலே இன்றைக்கு 250 கோடிக்கும் மேற்பட்ட மக்களை  திராவிடப்பெருங்குடி மக்களாகயிருந்தும்  அம்மக்களை வேறுப்படுத்திருக்கிறோம்  சிதறடித்திருக்கிறோம் என்பதை உணர்ந்து பார்க்கவேண்டியுள்ளது.

* அதாவது முழுமையான இனக்கணக்கெடுப்பைத் தவறவிட்டிருக்கிறோம். உலகம் முழுவதும் பரவிவாழும் தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைக்க மறந்துவிட்டிருக்கிறோம்.அதனால் ஏற்பட்ட இழப்புகளையும்,மனித குமூகாயத்தில் தனிமனித கட்டமைப்புகளையும் சீர்படுத்த முடியாமல் திணறியிருக்கிறோம் இதையெல்லாம் எண்ணிப்பார்த்து; இன்றைய கட்டாய தேவைக்கான உண்மையான இன சீரமைப்பு ஒன்றுத் தேவைப்படுகிறது

அதைச்சரியாக உணர்த்தவே இன்றைக்கு இந்த மாநாடு தேவைப்படுகிறது.. இவ்வாறு மாநாட்டுத்தலைவர் பெரு.அ.தமிழ்மணி ஊடகங்களுக்குத் தமது செய்தி வழி தெளிப்படுத்தியுள்ளார்.

உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாட்டையொட்டி மலேசியா முழுவதுமான உரைக் கூட்ட நிகழ்வுகள்! 28.6.17 முதல் 1.7.17 வரை

*********

பேச்சாளர்கள்;

(1) சு.அறிவுக்கரசு

2) இள புகழேந்தி

(3)ஓவியா

(4)அ.மார்க்சு

(5)இயக்குனர் வேலுபிரபாகரன்

(6)விடுதலை ராசேந்திரன்

(7) ஆதவன்தீட்சணியா

(8)வே.மதிமாறன்

(9)இராம.அன்பழகன்

(10) வா.மு.சே.திருவள்ளுவர்

(11) மஞ்சை வசந்தன்

12) கவிஞர் மார்சல் முருகன்

13) தஞ்சை கூத்தரசன்

2/7/17 ஞாயிற்றுக்கிழமை  கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் காலை10.30 மணியளவில்  ம இ கா உதவித்தலைவரும் மீப்பா தலைவருமான டத்தோ டி.மோகன் தலைமையில் மாபெரும்உரை கூட்டத்தை  மலேசியத் தமிழர் தன்மான  இயக்க ஏற்பாட்டில் பல்வேறு கலை, இலக்கியப் பண்பாட்டு, சமூக இயகங்களின்  பேராதரவில் நடைபெறும்.

18739960_1793166604328466_2569791964383464414_n 18882006_1797086273936499_2783341404316759477_n 19060197_840812876087814_563154168323463813_n

You may also like...