சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டத்தை நிறைவேற்று! – நடைபயணம் விழுப்புரம் 15062017

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ் தலைமையில், ”சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டத்தை நிறைவேற்று!” என்ற கோரிக்கையை முன்வைத்து 25 தோழர்களுடன் நடைபயணத்தை 9-6-2017 அன்று சேலத்தில் தொடங்கினர்..

பயணக்குழு வழியில் உள்ள கிராமங்களில் உரை, பாடல்கள், நாடகங்கள் வழியாக கோரிக்கையை விளக்கியவாறு 15 நாட்கள் பயணித்து சென்னையை அடைகின்றனர்.. 15-6-2017 அன்று மாலை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள அரசூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட்டக் கழகத் தலைவர் மதியழகன், கழகத் தோழர் மகாலிங்கம், கண்ணன் ஆகியோரோடு பயணக் குழுவினரை வரவேற்று அவர்களுடன் விழுப்புரம் வரை நடந்துசென்றனர்.

விழுப்புரத்தில் நடந்த பயணக் குழு வரவேற்புப் பொதுக் கூட்டத்தில், மாநில ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் தோழர் வாலண்டினா, பயணக்குழுத் தலைவர் தோழர் சாமுவேல்ராஜ், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பயண நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினர்.

img_7874 img_7908 img_7910 img_7920 img_7927

You may also like...