Category: தலைமை கழகம்

தோழர் செங்கொடி 6ம் ஆண்டு நினைவேந்தல் காஞ்சிபுரம் 28082017

தோழர் செங்கொடி 6ம் ஆண்டு நினைவேந்தல் காஞ்சிபுரம் 28082017

தோழர்.செங்கொடியின் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கழகதலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் பங்கேற்று சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைத்தார். புகைப்படங்களுக்கு  

பெரியார் கைத்தடி ஊர்வலம் சென்னை 31082017

திராவடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் கைத்தடி ஊர்வலம் இன்று உழைக்கும் மக்களுக்கு குரல் கொடுக்காத இந்து முண்ணனி இராமகோபாலனே விநாயகர் அரசியலுக்கு அழைக்காதே, எங்கள் நாடு தமிழ்நாடு இங்கு ஏதடா இந்து நாடு என்ற முழக்கத்துடன் சென்னை ஐஸ்அவுஸில் 31.8.17 மாலை 4.00 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கண்டன ஊர்வலம நடைப்பெற்றது. கழக தோழர்கள் 200 பேருக்கு மேல் கலந்து கொண்டு110 பேர் கைதானார்கள். அனைவரும் இராயப்பேட்டை பேகம்சாகிப் தெருவில் உள்ள மாநகராட்சி சமூக கூடத்தில் காவலில் உள்ளனர். செய்தி குகநந்தன்

“மஞ்சள்” நாடக நிகழ்வு! 30062017

“மஞ்சள்” நாடக நிகழ்வு! 30062017

மனிதன் கையால் மலம் அள்ளும் அவலம்; விழிப்புணர்வை ஏற்படுத்திய “மஞ்சள்” நாடக நிகழ்வு! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார் ! கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட ”மஞ்சள்”, நாடகம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். “சாதியை ஒழிப்போம், கையால் மலம் அள்ளும் இழிவுக்கு உடனே முடிவு கட்டுவோம்” என்ற கோஷத்துடன், கையால் மலம் அள்ளும் இழிவையும் அதற்கு சாதிய கட்டமைப்பு எப்படி காரணமாக அமைகிறது என்பதையும் இந்த நாடகம் மிக தெளிவாக எடுத்துரைப்பதாக அமைந்தது. ‘கட்டியக்காரி’ நாடகக்குழு நிகழ்த்திய “மஞ்சள்” நாடக நிகழ்வில், அரசியல், சினிமா, ஊடகம் மற்றும் பல துறைகளில் இருந்து ஏராளமான...

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது ! 06082017

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது ! 06082017

சாக்ரடீஸ் பெரியார் நினைவு விருது விழா, ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆழ்வார்பேட்டை சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. கழகத்தலைவர் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்புரையாற்றினார் ! கழகப்பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் இந்தய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட பெரியார் சாக்ரடீஸ் கடந்த 2015-ஆம் ஆண்டு மே-12 ம் நாள் சாலை விபத்தின் காரணமாக 44 ம் வயதில் உயிர் நீத்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருதுக்குழு அவரது நண்பர்கள் மூலம் உருவாக்கப்பட்டு 2015-ஆம் ஆண்டு முதல் காட்சி மற்றும் ஊடகத்துறைகளில் தன்னலமற்ற சேவை செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது...

“நடுகல்” மாத இதழ் வெளியீட்டு விழா !

“நடுகல்” மாத இதழ் வெளியீட்டு விழா !

  ஆதித்தமிழர் கட்சியின் “நடுகல்” மாத இதழ் வெளியீட்டு விழா 30.06.17 அன்று AICUF இல்லத்தில் காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இவ்விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி , மனுஷபுத்திரன், ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், மற்றும் ஜெபமாலை ராஜாஆகியோர் கலந்துகொண்டனர். நடுகல் மாத இதழை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட தோழர் ஜெபமாலை ராஜா அவர்கள் பெற்றுக்​கொண்டார் புகைப்படங்களுக்கு

மணப்பாறையில் கழகப் பொதுக்கூட்டம் ! 10082017

கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, சமூகநீதி சமத்துவப் பரப்புரைப் பயணத்தின் மதுரை அணி சார்பாக, மணப்பாறையில் பெரியார் சிலை அருகில் 10.08.2017 மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காவை. இளவரசுவின் “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி நடைபெற்றது.. நிகழ்வில் தோழர்.தனபால் தலைமை வகித்தார். தோழர்கள் அறிவுச்செல்வன்,விஜயமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.சி.க ஒன்றிய துணைச்செயலாளர் தோழர்.சீ.ரா ஆனந்தன் வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் தோழர். பாவலர் பசுலுதீன், ஆதிதிராவிடர் நலப்பேரவையின் தலைவர் தோழர்.மணிவண்ணன், மாவட்ட திராவிடர் கழக துணைத்தலைவர் 90 வயது கடந்த மூத்த பெரியார் தொண்டர்.தோழர் திருமால், CPI யின் நகரச் செயலாளர் ஜனசக்தி உசேன், திராவிடர் கழக நகரச் செயலாளர் CMS ரமேஷ், தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர்.துரை.காசிநாதன் ஆகியோர் உரையாற்றினர்.. 90 வயது கடந்த மூத்த பெரியார் பெருந்தொண்டர் அய்யா திருமால் அவர்களுக்கு கழகத்தலைவர் தோழர்.கொளத்தூர்மணி நினைவுப்பரிசு...

அமுதவர்சினி – சிவகுமார் இல்லற ஏற்பு விழா! சூலூர் 25082017

சூலூரில் 25082017 இல்லற ஏற்பு விழா ! ”அமுதவர்சினி – சிவகுமார்.”ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது . நாளை 25.8.2017 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி, சூலூர், கே.எஸ்.வி.திருமண அரங்கில் கழகத்தலைவர் தலைமையிலும், பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்துரையுடன் நடைபெற உள்ளது.

தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா இணையேற்பு விழா சோழபுரம் 20082017

தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா இணையேற்பு விழா சோழபுரம் 20082017

20082017 அன்று காலை 11-00 மணியளவில் தோழர் சிவ.விஜய பாரதி – பேரா.சங்கீதா. ஆகியோரின் இணையேற்பு விழா வாழ்த்தரங்கம்  கோவை ’நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறை முழக்கத்தோடு தொடங்கியது.. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றார்.. விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், தமிழ்ப்பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் பேராசிரியர் கு.சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் நலம் பேரியக்கம் தலைவர் இயக்குநர்  மு.களஞ்சியம்,நீலப் புலிகள் இயக்கத் தலைவர் பேரா.புரட்சிமணி, தோழர் ராஜாங்கம் , கோவை மாநகரக்  கழகத் தலைவர் நேருதாஸ் , சந்திரசேகரன் உள்ளிட்டோர்  வாழ்த்துரை வழங்கினர் புகைப்படங்களுக்கு

இணையேற்பு விழா ! சோழபுரம் 20082017

”சிவ.விஜயபாரதி – பேரா.பே.சங்கீதா” ஆகியோரின் இணையேற்பு விழா கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. நாள் : 20.08.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 7.30.- 9.00 மணி. இடம் : மங்களம் வீரமுத்து திருமண மாளிகை,சோழபுரம். பல்வேறு தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறார்கள்

இராவணன் – கழக மாநாட்டில் தோழர் மணி அவர்களின் ஆண் குழந்தைக்கு கழக தலைவர் பெயர் சூட்டல்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயண நிறைவுவிழா திருச்செங்கோடு மாநாட்டில் சம்பூகனை கொன்று ஒரு குலத்துக்கு ஒரு நீதி வழங்கியவன் அயோக்கியன் இராமன். தன் எதிரியின் மனைவி தனக்கு அடிமையாக இருந்தும் ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்ற சமூகநீதி காத்தவன் இராவணன் எனக்கூறி தோழர் மணி அவர்களின்மகனுக்கு இராவணன் என்ற பெயர் சூட்டலுடன் இனிதே முடிந்தது மாநாடு “இராவணன்” திருச்செங்கோடு நிறைவு விழா மாநாட்டு மேடையில் மணி – பிரியா இணையரின் ஆண் குழந்தைக்கு ‘இராவணன்’ என்று தோழர் கொளத்தூர் மணி பெயர் சூட்டினார். பெரியார் முழக்கம் 17082017 இதழ்

சமூக நீதி சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்கள் திருச்செங்கோடு 12082017

மாநாட்டு தீர்மானங்கள்: இழந்துவரும் உரிமைகளை மீட்போம்! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்! என்ற முழக்கத்தை முன்வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்… தீர்மானம் : 1 ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலைக்...

சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணத் துவக்க விழா பொதுக்கூட்டம் சென்னை 06082017

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்.! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்.! தமிழகம் ழுழுவதும் “சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணத்தின்” துவக்கப் பொதுக்கூட்டம்…. நாள் : 05.08.2017, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, இடம் : கங்கையம்மன் கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை. கருத்துரை: தோழர்.கொளத்தூர்.தா.செ.மணி கழகத் தலைவர், திவிக தோழர்.விடுதலை.க.இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக “விரட்டு” கலைக்குழுவின் வீதி நாடகம், கலை நிகழ்ச்சி நடைபெறும். “சூழ்ந்து வரும் ஆபத்துகளை முறியடித்து தமிழகத்தின் தனித்துவத்தைக் காப்போம் வாரீர்….!”  

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது ! தமிழக காவல் துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

01082017 மாலை 3 மணி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது ! நீதி மன்றங்களில் தமிழை் வழக்காடு மொழியாக்க வலியுருத்தி போராடி வரும் மதுரை வழக்கறிஞர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கச் சென்ற கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை செல்லும் வழிலேயே பாதியில் மறித்து ஜனநாயக உரிமைகளை மீறி கைது செய்துள்ளது தமிழக காவல் துறை . வழக்கறிஞர்களை சந்திக்கச் செல்லும் வழிபில் நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை 9.30 மணிக்கு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு மாலை 3.00 மணிக்கு நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கழக தலைவரும், தோழர்களும்கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல் துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

கழகத் தலைவர் கைது மதுரை 01082017

கொளத்தூர் மணி கைது… திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மதுரையில் நடைபெரும் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்திற்கு சென்ற போது நிலக்கோட்டை பள்ளபட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். நீண்ட நேர காத்திருப்பிற்கு பின்…. தடை மீறி செல்ல விருந்த திராவிடர் விடுலை கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் ஆதரவாளர்கள் நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் கைது செய்யப்பட்டனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி காவல்துறையால் தடுத்து வைப்பு

உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க கோரிப்ு லவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை திண்டுக்கல்லில் காவல் துறையினர் மதுரைக்குள் அனுமதிக்காமல் தடுத்து வைத்துள்ளனர்.

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு… தோற்றது ஒப்பந்தமா ? இந்திய பாதுகாப்பா? கருத்தரங்கம் சென்னை 29072017

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு… தோற்றது ஒப்பந்தமா ? இந்திய பாதுகாப்பா? #கருத்தரங்கம்…. நாள் : இன்று (29.07.2017)மாலை 5 மணிக்கு இடம் : கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை -04 #கருத்தாளர்கள் : தோழர்.பண்ருட்டி.இராமச்சந்திரன் தோழர்.கொளத்தூர் மணி தோழர்.ஆழி.செந்தில்நாதன் தோழர்.செந்தில் தோழர்.ஜவாஹிருல்லா தோழர்.தியாகு தோழர்.T.S.S.மணி வாருங்கள் தோழர்களே.! ஈழத் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்? எதற்காக? எப்படி – கருத்தரங்கம் சென்னை 22072017

காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞரின் 94வது பிறந்தநாள் கருத்தரங்கம் இன்று 22.07.17 டி.ஜி.பி. திருமண மண்டபத்தில் (தாம்பரம்) மாலை 6.00 மணியளவில் தொடங்கியது. இதில் “மாட்டிறைச்சி உணவும், மனுதர்ம அரசியலும்” எனும் தலைப்பில் கம்பம் செல்வேந்திரன், தலைமை தேர்தல் பணிக்குழுச் செயலாளர் அவர்களும் “நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்? எதற்காக? எப்படி?” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் விடுதலை இராசேந்திரன் அவர்களும் பேசினார்கள். வாழ்த்துரை எஸ்.ஆர்.ராஜா சட்ட மன்ற உறுப்பினர் வழங்கினார்.

சமூக நீதி – சமத்துவ பரப்புரைப் பயண திட்ட கலந்துரையாடல்கள்

திராவிடர் விடுதலைக் கழகம் 2012 ஆகஸ்டு 12ஆம் நாள் தொடங்கப்பட்டது. அதையொட்டி கடந்த ஆண்டு ‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’ என்ற தலைப்பில் தமிழகம் முழுதும் பரப்புரை இயக்கங்களை நடத்தி, ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆத்தூரில் பயண நிறைவு விழா மாநாடு போல் நடத்தப்பட்டது. அதேபோல இவ்வாண்டு ஜூலை 8ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை பரப்புரைப் பயணம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான பயணத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டன. “இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, “சமூக நீதி – சமத்துவ பரப்புரைப் பயணம்” என்ற தலைப்பில் பயணம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. மேட்டூர், கோவை, மதுரை, சென்னை, மயிலாடுதுறை ஆகிய ஐந்து ஊர்களிலிருந்து பரப்புரைக் குழு ஆகஸ்டு 8ஆம் தேதி புறப்படும், ஆகஸ்டு 12இல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பயணம் நிறைவடைகிறது. திருச்செங்கோட்டில் நிறைவு விழா நிகழ்வு நடைபெறுகிறது. (பயணத் திட்டங்கள்,...

சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான ஐ. நா. வின் அகில உலக ஆதரவு நாள் மதுரை 27062017

சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான ஐ. நா. வின் அகில உலக ஆதரவு நாளினை முன்னிட்டு பொதுக்கூட்டம்  27.06.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு   விக்டோரியா எட்வெர்ட் திறந்தவெளி அரங்கம் (ரயில் நிலையம் அருகில்) மதுரையில் நடைபெற உள்ளது இதற்கான அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம் தங்கள் இதில் பங்கேற்று கருத்துரை வழங்க அன்புடன் அழைக்கிறோம் “சித்திரவதையற்ற உலகு அமைய அணியமாவோம்!” தொடர்புக்கு  99943-68502          9952315757

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு! 24/25/6/17 தேதிகளில் நடைபெறும் மலேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு  டத்தோசிரி டாக்டர் சுப்ரமணியம்  அவர்கள் மாநாட்டைத் துவக்கிவைப்பார்! இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பேராளர்களாகப் பங்கேற்பு!   ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்பெரும் மாநாட்டில் “திராவிட இனத்தின் மீட்சியே; தமிழ் இனம்! தமிழும் திராவிடமும் ஒன்றே!”யென கருத்தரங்கில் விவாதிக்கப்படும் ! இனத்தால் திராவிடன்,  மொழியால் தமிழன்,  உலகத்தால் மனிதன் என்ற கருப்பொருளால் முன்னெடுக்கப்படும் இம்மாநாட்டு வழி உலகம் தழுவி வாழ்கிற தமிழ் உணர்வாளர்களை ஒரே குடையில் கீழ் கட்டமைக்க முடியுமென்ற சிந்தனையின் வெளிபாடே இம்மாநாட்டுக்குரிய இலக்காகும். அதனால் இம்மாட்டையொட்டி நடைபெறும் இரண்டுநாள் கருத்தரங்கில் பேராசிரியர், சுப வீரபாண்டியன், பேராசிரியர் அ.மார்க்சு, கருத்தாளர் சு.அறிவுக்கரசு, திரைஇயக்குனர் வேலுபிரபாகரன், கருத்தாளர் வே.மதிமாறன், எழுத்தாளர் ஆதவன், கருத்தாளர் தோழி ஓவியா, கருத்தாளர் விடுதலை ராசேந்திரன், கருத்தாளர் இளபுகழேந்தி, எழுத்தாளர் மஞ்சை வசந்தன், கருத்தாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோருடன் கலந்து விவாதிப்பதுடன் அவர்களுக்கு...

தோழர்கள் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் வீடு முற்றுகை சென்னை 17062017

தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பாஜகவின் பினாமியான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17062017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழர் விரோத பாஜகவின் அடியாளாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், UAPA என அடக்குமுறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தோழர்கள்...

இந்தி அழிப்புப் போராட்டம் சென்னை 05062017

திராவிடர் விடுதலைக் கழகம் 05062017 காலை 10.30 மணியளவில் சாஸ்திரி பவனில் இந்தி அழிப்புப் போராட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் 130 பேர் இவ்வழிப்பு போராட்டத்தில் கலந்து கைதானார்கள். மேலும் செய்திகள் விரைவில்

தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் நினைவு அரங்கத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு” 04062017 மாலை திருவான்மியூர் தெப்பக் குளம் அருகில் நடைபெற்றது

அய்.அய்.டி மாணவர் சூரஜ் சந்தித்து கழகத் தலைவர், பொதுச்செயலாளர் ஆறுதல் சென்னை 03062017

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, துணைப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் மதிமாறன், கழக வழக்குறைஞர் அருண், சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐஐடி மாணவர் சூரஜ்யை 03062017 அன்று இரவு 8.30 மணியளவில் பார்த்துவிட்டு தலைமை அலுவலகம் திரும்பினார்கள். அவரின் உறவினர்கள் ராஜகோபால், வாசுதேவன் தலைவரிடமும் பொதுச் செயலாளரிடமும் ஆர்வமாக தமிழகத்தின் ஆதரவை மற்றும் கேரள முதலமைச்சர், திமுக செயல் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் மற்றும் மாணவர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதை விளக்கினர். செய்தி குகன்

மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தஞ்சாவூர் 01062017

தஞ்சையில் ஜுன் 12ல் காவிரி நீரை பெற்றுத் தந்து மத்திய அரசிடம் வாழ வழி கேட்டு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர்,பனகல் பில்டிங் அருகில்,ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த போராட்டத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் தோழர் பழ.நெடுமாறன் அவர்கள் துவங்கி வைத்தார். ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் துவக்க நாளான நேற்று 01.06.2017 அன்று கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தோழர் கு.ராமகிருட்டிணன், S.D.P.I. தலைவர் தோழர் தெஹலான் பாகவி,தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் சி.முருகேசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, ஒருங்கிணைப்புக்குழு கவுரவ தலைவர்...

இந்தி அழிப்பு போராட்டம் சென்னை 05062017

ஜூன் 5ல் “இந்தி அழிப்பு போராட்டம்” திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. மத்திய அரசு அலுவலகங்களில் “இந்தி அழிப்பு போராட்டம்” தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை.! பா.ஜ.க அரசே.! திணிப்புகளை திரும்பப் பெறு.!! நாள் : 05.06.2017, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு…. இடம் : சாஸ்திரிபவன், நுங்கம்பாக்கம், சென்னை தலைமை : கொளத்தூர்.தா.செ.மணி தலைவர்.திராவிடர் விடுதலைக் கழகம் #இந்தி_திணிப்பை_எதிர்ப்போம்.! #இழந்துவரும்_உரிமைகளை_மீட்போம்.!! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு மாநாடு சென்னை 04062017

04062017 அன்று சென்னையில் “தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு” மாநாடு. இந்தித்திணிப்பை எதிர்ப்போம் ! இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! எனும் முழக்கத்தோடு, திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் சார்பில்.. நாள் : 04.06.2017. ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 4 மணி இடம் : திருவான்மியூர் தெப்பக்குளம், சென்னை – 41. தலைமை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம். சிறப்புரை : நீதியரசர்.அரிபரந்தாமன், முன்னாள் நீதிபதி,உயர் நீதி மன்றம்,சென்னை. தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம். பேராசிரியர்.சரசுவதி அவர்கள். மற்றும் கழக நிர்வாகிகள்,தோழர்கள் ! காஞ்சி மக்கள் மன்றத்தினரின் பறையிசை, புரட்சிகர கலை நிகழ்ச்சி இடம்பெறும். விழித்தெழுவோம்.! தடுத்து நிறுத்துவோம்.! தமிழர்களே வாரீர்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

பாஜகவின் மாட்டிறைச்சி தடைச் சட்டம் – கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

கழகத் தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ! பசுவதை தடைச்சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டுவரப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச்சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது. பசு மாடு மட்டுமல்லகாளை,எருமை,கன்றுக்குட்டி, கறைவை ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்க்கக்கூடாதாம். சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக உறுதி மொழி தரவேண்டுமாம். வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப்பத்திரம்,விவசாயி என்பதற்கான அடையாள சான்றுபௌள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக்கூடாதாம்.இப்படி கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம். இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக்குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர்...

இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரை துண்டறிக்கை

திராவிடர் விடுதலைக் கழகத்தலைமை அறிவித்துள்ள ’இந்தி எதிர்ப்பு இயக்க பரப்புரைக்கான துண்டறிக்கை அச்சிட கழகத்தோழர்கள் கீழ் காணும் மாதிரியை பயன்படுத்திக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் : இந்தித் திணிப்பை எதிர்ப்போம்! இழந்து வரும் உரிமைகளை மீட்போம்! இந்தியாவின் எத்தனையோ மாநிலங்களில் நமது தமிழ்நாட்டுக்குத் தனித்த சிறப்புகள் பல உண்டு. நம்மை வழிநடத்திய தலைவர்கள் நமக்காக போராடிப் பெற்றுத் தந்த உரிமைகள்தான் அதற்குக் காரணம்.ஒரு காலத்தில் நமது நாட்டுக்குப் பெயர் ‘சென்னை மாகாணம்’ என்பதுதான். அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு நாம் நமது நாட்டை ‘தமிழ்நாடு’ என்று அறிவித்துக் கொண்டோம். இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனாலும் நமது தமிழ்நாட்டின் எல்லைக்குள் இந்திக்கு இடமில்லை என்று அறிவித்து, தமிழும் ஆங்கிலமும் எமக்குப் போதும் என்ற இரு மொழிக் கொள்கையை உருவாக்கிக் கொண்டோம். பார்ப்பனிய ஜாதி அமைப்பு, ஒருவனை மேல் ஜாதி; ஒருவனைக் கீழ் ஜாதி என்று பாகுபடுத்தியது. படிக்கவும்,...

தோழர் பாரூக் படுகொலை – மலையாள நாளிதழ் கண்டன கட்டுரை

தோழர் ஃபாரூக் கொலை சம்பவத்தை கண்டித்தும் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரது படுகொலைகளைப் போன்றே ஃபாரூக் கொலை வழக்கையும் முக்கியத்துவம் கொடுத்து அணுகவேண்டும் எனும் சாரத்தில் இந்திய அரசியலில் இந்து இசுலாமிய மத மோதல்களின் தாக்கத்தையும் ஒப்பாய்வு செய்து கேரளாவில் மூத்த சமூக செயல்பாட்டாளர் எம் என் காரசேரி அவர்கள் எழுதி மாத்ருபூமி நாளிதழில் வெளியான கட்டுரை http://digitalpaper.mathrubhumi.com/m/1210299/Mathrubhumi/17-May-2017#issue/8/1

மாட்டுக்கறி அரசியல் – மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் ! சேலம் 12052017

கருத்துரிமை உணவு உரிமைக்கு தடை போடும் தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து இன்று 12052017 காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காவல் துறையின் தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் தடையை மீறி மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள். போராட்டத்தின் போது தோழர் கொளத்தூர் மணி பேச்சு போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. இப்போராட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அமைப்பாளர் டைகர் பாலன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், மாவட்ட செயலாளர் சரவணன்,...

களப்பணிகளில் கழகத் தோழர்கள்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த கழகத்தின் களப்பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்ற நிகழ்வுகளின் தொகுப்பு. ஈரோட்டில் ‘கனி ராவுத்தர்’ குளம் மீட்பு இயக்கத்தின் தொடர் போராட்டம் ஈரோடு நகருக்கு அருகே உள்ளது கனிராவுத்தர் குளம். 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் அரசு அதிகாரிகளின் துணையோடு பணமுதலை களால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது வெறும்14 ஏக்கராக சுருங்கியுள்ளது. குளத்தை மீட்டெடுப் பதற்காக ‘கனிராவுத்தர் குள மீட்பு இயக்கம்’ என்ற பெயரால் தமிழத் தேசிய நடுவம் தோழர் நிலவன் ஒருங்கிணைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி போன்றோர் இணைந்து மக்கள் திரள் போராட்டங்கள், நீதிமன்ற வழக்கு என்ற வழிமுறைகளில் போராடிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்தேறிவருகின்றன. 23-4-2017 அன்று ஈரோட்டுக்கு ஒரு நூல் வெளியீட்டுக்காக சென்றிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர்...

தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது! ஜூன் 5இல் சென்னையில் மத்திய அரசு பெயர்ப் பலகையில் இந்தி அழிப்பு கழக தலைமைக் குழுவின் முக்கிய முடிவுகள்

சென்னையில் மத்திய அரசு அலுவலக வளாகமான சாஸ்திரி பவனில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை ஜூன் 5இல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது. இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தும் 1976ஆம் ஆண்டு ஆட்சி மொழி விதிகள் இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பிலேயே 1 (ii)ஆவது பிரிவில் “They shall extend to the whole of India, except the state of Tamil Nadu” – என்று தெளிவாக குறிப்பிடப்பட் டிருந்தது.  1987, 2007, 2011இல் திருத்தங்கள் செய்யப் பட்டன. 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டுக்கு தந்த விதிவிலக்கை நீக்கிவிட்டார்கள். இந்த உள்துறை அமைச்சக ஆவணத்தில் மாநில ஆட்சி மத்திய ஆட்சி களில் இந்தியைப் பயன்படுத்துதல் இரண்டு ஆட்சி களுக்கிடையிலான தகவல் தொடர்புகளில் இந்தியைப் பயன்படுத்துதல் குறித்து ஆட்சி...

மாட்டுக்கறி அரசியல் – சேலம் 12052017

அன்பார்ந்த தோழர்களே! 23-4-2017 அன்று கொளத்தூரில் மாட்டுக்கறி அரசியல், மாட்டுக்கறி விருந்து என்றறிவித்தோம்; அனுமதி மறுப்பு என்றது காவல்துறை. 2-5-2017 அன்று ஈரோட்டிலதே நிகழ்வு. நாம் அனுமதி கேட்கவில்லை; பாதுகாப்பு மட்டும் கேட்டோம். ஆனாலும் அனுமதி இல்லை என்றது காவல்துறை; உயர்நீதி மன்றமோ அடுத்த மாதம்தான் விசாரிப்பேன் என்கிறது. 12-5-2017 அன்று சேலத்திலும் அதே நிகழ்வு. பாதுகாப்பு மட்டுமே கேட்டிருந்தோம். அனுமதி இல்லை என்று கூறிவிட்டது காவல்துறை. அரசியல் சட்டத்தின் 48ஆவது பிரிவு நேரடி சட்டம்கூட இல்லை; வெறும் வழிகாட்டும் நெறிமுறை மட்டும்தான். அப்பிரிவு “பால் கொடுக்கும் பசுக்களையும், பாரம் இழுக்கும் எருதுகளையும், இளங்கன்றுகளையும் வெட்டுவதை வேண்டுமானால் – தடை செய்ய விரும்பினால் – மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. நாமோ பால் கொடுக்காத, விவசாய வேலைக்குப் பயன்படாத மாட்டின் கறியைத்தான் உண்ணப்போகிறோம் என்பதை தெளிவாக – அடிமடையன் கூட புரிந்துகொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு கோரும்...

மாட்டுக்கறி உணவு விழா குறித்து கழகத் தலைவர் அவர்களின் அறிக்கை

அன்பு தோழர்களே, வணக்கம். சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதல் செய்தி 23.04.2017 அன்று காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் கொளத்தூர், பெரியார் படிப்பகத்தில் நடைபெறுவதாக இருந்த மாட்டுக்கறி விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதாகும். நீதிமன்றத்தை அணுகி உடனடியாக அனுமதி பெறுவதற்குப் போதிய கால இடைவெளி இல்லாத காரணத்தால் பின்னொரு தேதிக்கு அனுமதிபெற்று சிறப்பாக நடத்திக் கொள்ளலாம். மாட்டுக்கறி விருந்து கொளத்தூரில் நடந்தால் ஈரோட்டில் பெரியார் சிலைக்கு ஏதோ மாலை அணிவிக்க உள்ளதாக சில இந்து இயக்கங்கள் அறிவித்திருக்கிறார்கள். அவ்வாறு மாலைமரியாதை செய்ய வருவோருக்கு நல்லமுறையில் வரவேற்பளித்து, உரிய பதில் மரியாதை அளிக்க வேண்டியது நமது கடமையாகும். எனவே, மாட்டுக்கறி (அவர்கள் மொழியில், பசு மாமிசம்) விருந்தினை, அவர்கள் (இந்து இயக்கங்கள்) வசதிக்காகவும், அவர்கள் ஈரோடு பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வரும்பொழுது சிறு காலதாமதமும் இன்றி வரவேற்று, பதில் மரியாதை செய்வதற்கு வாய்ப்பாகவும், 30-4-2017 அல்லது 1-5-2017 அன்று நண்பகல் ஈரோட்டில்...

மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பொது உரையாடல் தருமபுரி 07042017

செம்மரக் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரால், ஆந்திர காவல், வனத்துறை அதிகாரிகளால் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டு, ஆந்திர வனப்பகுதிக்குள் கொண்டு சென்று 20 அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் 06042015 அன்று சுட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவாய் 07042017 அன்று மாலை, தருமபுரி வள்ளலார் திடலில் மதுரை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு அமைப்பு, கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து பொது உரையாடல் நடைபெற்றது. கலை நிகழ்வுகளுடன் தொடங்கிய அந்நிகழ்வில் மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் ஆணைகள், திருப்பதி, ஆந்திர உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நடந்துகொண்டுள்ள வழக்கின் நிலவரம், தேவைப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக உரையாற்றினார். அந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க.வின் துணைப் பொதுச் செய்லாளர் மல்லை சத்யா,...

தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும் கருத்தரங்கம் சென்னை 04042017

04042017 திங்கட்கிழமை மாலை 6-00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும்,...

வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ ஏப்ரல் இதழ்

‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள். இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை – ஒரு விரிவான தொகுப்பு நீட் தேர்வும் – சமூக அநீதியும் புத்த தம்மம் ஒ வர்ணதர்மம் – அம்பேத்கர் துருக்கியில் கெமால் செய்த புரட்சி சீரடி சாய்பாபா யார்? – பரபரப்பான பின்னணித் தகவல்கள் பசுவதைத் தடையின் அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை மதங்கள் தேவையில்லை – இன்குலாப் கவிதை மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…    தனி இதழ் விலை : ரூ.20 தொடர்புக்கு :  நிர்வாகி,  ‘நிமர்வோம்’ மாத இதழ், 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி எண் : 044 24980745 / 7299230363 www.dvkperiyar.com / nimirvomdvk@gmail.com பெரியார் முழக்கம் 13042017 இதழ்

தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா காளிப்பட்டி 06042017

சேலம் மாவட்டம் பஞ்சு காளிப்பட்டி, சவுத் இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளீயில் தற்காப்புக் கலையில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா பள்ளி தாளாளர் திரு. சவுந்திர ராசன் தலைமையில் 06042016 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு கிக்பாக்சிங் கழகப் பொதுச்செயலாளரும் பயிற்றுநருமான சிவபெருமாள் வரவேர்புரையாற்றினார். அடுத்து தந்தை பெரியார் அவர்களின் படத்தினைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்துவைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் அப்பள்ளியின் விழா அரங்குக்கு தந்தை பெரியார் விழா அரங்கம் எனப் பெயரிடப்படுவதை உற்சாகக் கைதட்டல்களுக்கு இடையே அறிவித்தார். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் பிருதிவிராசன், புதுவை சிந்தனையாளர் கழகத் தலைவர் தீனா, சிந்தாமணியூர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்

பெரியாரியல் விளக்கப் பொதுக்கூட்டம் மேச்சேரி 05042017

05042017 அன்று மாலை 6-00 மணியளவில், சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுக்கூட்டம் கிளைக்கழக செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் துவக்கத்தில் தோழர் காவை இளவரசனின் மந்திரமல்லதந்திரமே என்ற செயல்முறை விளக்கா நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து நங்கவள்ளீ அன்பு, தலைமைக் கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் ஆகியோர் உரைகளுக்குப் பின்னர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். நங்கவள்ளி கிருட்டிணன்  நன்றி கூறலுடன் நிறைவுபெற்றது.

வாழ்க்கை இணையேற்பு விழா தோழர் நீலாவதி – சந்திரமோகன் நிலக்கோட்டை 02042017

கழகத்தின் எல்லா குழந்தைகள் பழகு முகாம்களிலும் கலந்துகொண்டு உளவியல், தன்நம்பிக்கை வகுப்புகளை திறம்பட எடுத்துவருபவரும், நிலக்கோட்டை தொழிர் சங்கத் தலைவர் தோழர் செல்வராசு அவர்களின் மகளுமான தோழர் நீலாவதி, சந்திர மோகன் ஆகியோரின் வாழ்க்கைதுணையேற்பு விழா பவுத்த நெறிப்படி, 02042017 அன்று காலை 9-00 மணியளவில் சிறப்புற நடந்தேறியது. வாழ்த்தரங்கம் தமிழ்நாடு இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் செ.கு.தமிழரசன் தலைமையில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தகைவர் ஆசிரியர் சிவகாமி, திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் முகில்ராசு, முனைவர் பள்ளப்பட்டி மணிமாறன், கும்பகோணம் இணைப்பதிவாளர் தோழர் ரமணிதேவி ஆகியோரும் கலந்துகொண்டு சிறபித்தனர்.