மணப்பாறையில் கழகப் பொதுக்கூட்டம் ! 10082017

கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக, சமூகநீதி சமத்துவப் பரப்புரைப் பயணத்தின் மதுரை அணி சார்பாக, மணப்பாறையில் பெரியார் சிலை அருகில் 10.08.2017 மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காவை. இளவரசுவின் “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி நடைபெற்றது..

நிகழ்வில் தோழர்.தனபால் தலைமை வகித்தார். தோழர்கள் அறிவுச்செல்வன்,விஜயமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வி.சி.க ஒன்றிய துணைச்செயலாளர் தோழர்.சீ.ரா ஆனந்தன் வரவேற்புரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் தோழர். பாவலர் பசுலுதீன்,
ஆதிதிராவிடர் நலப்பேரவையின் தலைவர் தோழர்.மணிவண்ணன், மாவட்ட திராவிடர் கழக துணைத்தலைவர் 90 வயது கடந்த மூத்த பெரியார் தொண்டர்.தோழர் திருமால்,
CPI யின் நகரச் செயலாளர் ஜனசக்தி உசேன்,
திராவிடர் கழக நகரச் செயலாளர் CMS ரமேஷ்,
தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளர் தோழர்.துரை.காசிநாதன் ஆகியோர் உரையாற்றினர்..

90 வயது கடந்த மூத்த பெரியார் பெருந்தொண்டர் அய்யா திருமால் அவர்களுக்கு கழகத்தலைவர் தோழர்.கொளத்தூர்மணி நினைவுப்பரிசு வழங்கினார்..

அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர்.சிவகாமி கருத்துரை வழங்கினார்..

கழகத்தலைவர் தோழர்.கொளத்தூர்மணி சிறப்புரையாற்றினார்..

அவர் தனது உரையில், பாடப்புத்தகங்களில் இஸ்லாமியர் படையெடுப்பு என்றும் ஆரியர் வருகை என்றும் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்..

மேலும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஆண்டு வருமானம் 9000 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று ஆணையிட்டதையும்,அதை எதிர்த்து திராவிடர் கழகம் பிரச்சாரப் பயணம் நடத்தியதையும், 1979 ல் குமரியில் இருந்து தஞ்சை வரை 30 நாட்கள் நடைபெற்ற நடைபயண பரப்புரைக்கு தான் தளபதியாகப் பொறுப்பேற்று பயணத்தை வழி நடத்தியதையும் நினைவு கூர்ந்தார்..

மேலும் தனது உரையில், 1989 ல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவந்ததையும் ஆனால் அதற்கான விதிகள் 1995 ஆம் ஆண்டுதான் எழுதப்பட்டதையும்

ஆனால் அதே நேரத்தில் பார்ப்பனர்கள் அதிமாகப் படிக்கிற IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் அமைப்பதற்கான சட்டம் 1956 ல் கொண்டு வந்ததையும்,ஆனால் அதற்கான விதிகள் ஓராண்டுக்கு முன்னதாக 1955 லேயே கொண்டு வரப்பட்டதையும் கூறி

இரண்டுக்குமான வேறுபாடுகளை நினைவு கூர்ந்தார்..

நிகழ்வின் இறுதியில் தோழர் மாதம்பட்டி கார்த்திகேயன் நன்றி கூறினார்

20935134_1997272397223317_8052070847684110121_o

You may also like...