பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது ! 06082017

சாக்ரடீஸ் பெரியார் நினைவு விருது விழா, ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆழ்வார்பேட்டை சிஐடி நகர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

கழகத்தலைவர் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்புரையாற்றினார் !

கழகப்பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் இந்தய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் தோழர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட பெரியார் சாக்ரடீஸ் கடந்த 2015-ஆம் ஆண்டு மே-12 ம் நாள் சாலை விபத்தின் காரணமாக 44 ம் வயதில் உயிர் நீத்தார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில் பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருதுக்குழு அவரது நண்பர்கள் மூலம் உருவாக்கப்பட்டு 2015-ஆம் ஆண்டு முதல் காட்சி மற்றும் ஊடகத்துறைகளில் தன்னலமற்ற சேவை செய்பவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

2015-ஆம் ஆண்டு ஆர்.பி.அமுதன்(ஆவணப்பட இயக்குனர்) அவர்களும், 2016-ஆம் ஆண்டு ம.செந்தமிழன் (எழுத்தாளர்)அவர்களும் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இந்த வருடம் சமூக முன்னேற்றத்துக்கான 2017-ம் ஆண்டு பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

1. திவ்யா பாரதி, ஆவணப்பட இயக்குனர் (கக்கூஸ் ஆவணப்படம் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் ப்ரச்னையை காட்சி ஊடகத்தின் சிறந்த பங்களிப்புக்காக)

2. ஜெயராணி, எழுத்தாளர் (தலித்முரசு வில் வெளியான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் புகைப்பட பதிவு, கட்டுரைகளாக ஜாதியற்றவளின் குரல் தொகுப்பு, கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு எதிரான மஞ்சள் நாடகப் பிரதி ஆகிய பங்களிப்புகளுக்காக) வழங்கப்பட்டது.

புகைப்படங்களுக்கு

You may also like...