தலைமை செயலக முற்றுகைப் போராட்டம் சென்னை 30102017
#செய்துவிட்டது_கேரளம்
#அறிவித்து_விட்டது_கர்நாடகம்
#தமிழகம்_சோம்பிக்_கிடப்பதா?
ஜாதியின் பெயரால் மறுக்கப்படும் எதையுமே சமூகநீதியால் அனைவருக்கும் உரித்தாக்குவதே ஜாதிய கட்டமைப்பை தகர்க்கும் எளிய வழி.
அந்தவகையில் ஆகம விதி என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாகவும், மற்ற ஜாதியினருக்கு மறுக்கப்பட்டும் வருகிற சைவ, வைணவ ஆலயங்களுக்கான அர்ச்சகர் பணியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற வேண்டும் என்ற பெரியாரின் இறுதிக் கனவிற்கு உயிர் கொடுத்திருக்கிறது பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி. விரைவில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கப் போவதாக அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு.
இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற ஆணையைப் பிறப்பித்த தமிழக அரசு இன்னும் நிறைவேற்றாமல் என்ன செய்துக் கொண்டிருக்கிறது? ஒற்றைப் பண்பாடு, ஒற்றைக் கலாச்சாரம் என்று பெருமைகொள்ளும் இந்து மதத்தில் வேறு எங்கும் இல்லாத ஆகமவிதிகள் தமிழ்நாட்டிற்கு மட்டும் எப்படி வந்தது? தமிழ்நாட்டில் உள்ள 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆலயங்களில் முறையாக ஆகம விதிகள் பின்பற்றப்படுவதே இல்லை. ஆகமத்தை பின்பற்றாத பார்ப்பனர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது? ஆகம விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்ட பார்ப்பனர்களின் பணிநியமனம் ஏன் ரத்து செய்யப்பட்டதே இல்லை? அப்போதெல்லாம் சாகாத இந்துக்கடவுள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகி சிலையைத் தொட்டு அர்ச்சனை செய்தால் செத்துவிடுமா? அப்படியானால் கேரளக் கடவுள்கள் செத்துவிட்டது இனிமேல் வழிபாடாதீர்கள் என்று பார்ப்பனர்கள் சொல்வார்களா?
ஆகமம் என்ற இல்லாத ஒன்றைக் காட்டி, வழிபடுவனுக்கு அர்ச்சனை செய்யும் உரிமையை இன்னும் எத்தனை காலத்திற்கு மறுப்பீர்கள்? பார்ப்பனிய பயங்கரவாதத்திற்கு அடிபணியாமல், ஜாதியின் பெயரால் மறுக்கப்படும் உரிமையைப் பெற தமிழக அரசே ஆவணம் செய்!
“பயிற்சி பெற்று காத்திருக்கும் 206 பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களையும் அறநிலையத் துறைக் கோயில்களில் உடனடியாக பணியில் அமர்த்து” என்ற கோரிக்கையோடு திராவிடர் விடுதலைக் கழகம் முன்னெடுக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்திற்கு தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வீர்..
தமிழகத்தின் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், ஜாதிய கட்டமைப்பின் மூலம் திணிக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை தகர்த்திடவும் சமகாலத்தில் வெற்றிகாண வேண்டிய ஒரு போராட்டத்தை முன்னெடுத்து இன்று நாள்: 30.10.2017,
நேரம்: காலை 10.00 மணி,
இடம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை நடைபெற்றது
இந்த முற்றுகைப் போராட்டத்தில்
திவிக தலைவர் தோழர் கொளத்தூர் மணி
பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி
அமைப்பு செயலாளர் தோழர் ஈரோடு இரத்தினசாமி
தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் அன்பு தனசேகர், அய்யனார், வடசென்னை மாவட்ட தலைவர் யேசு குமார், செயலாளர் செந்தில், தென் சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், செயலாளர் உமாபதி
இளந்தமிழகம் இயக்கம் செந்தில்
மற்றும் பல்வேறு திவிக மாவட்ட பொறுப்பாளர்களும் தோழர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.