Category: பெரியார் முழக்கம் 2024

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

தமிழ்நாட்டின் மீதான பாஜகவின் வன்மம்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டதை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மிக மோசமாக சித்திரிப்பு செய்கிறது வேலையில் இறங்கியிருக்கிறது பாஜக. பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப் பிரதேசத்தில் என்ன நிலைமை என்பது கூட தெரியாமல், தமிழ்நாட்டின் மீது சேற்றை வாரி இறைக்கும் பாஜகவினருக்கு பத்திரிகையாளர் அரவிந்தாக்‌ஷன் தரவுகளால் பதிலடி கொடுத்திருக்கிறார். 15.02.2024 அன்று West Delhi-ல் இருக்கும் Aventa Company-ன் basement -ல் போதை மருந்து தயாரிப்பதற்கான pseudoephedrine எனும் மூலப்பொருள் 50.070 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அரசின் போதைத் தடுப்புப் பிரிவின் (NCB) டெல்லி மண்டல அலுவலகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கு எண்-VIII /03/DZU/2024 – இந்த வழக்குக்கு விகாஷ் ஷர்மா என்ற ஆய்வாளர்தான் விசாரணை அதிகாரி. இது சம்பந்தமாக 23-02-2024 அன்று ஜாபர் சாதிக் என்ற தமிழ்நாட்டைச் சார்ந்தவருக்கு சம்மன் வழங்கப்பட்டு,தொடர் சோதனைகள்...

தலையங்கம் – சி.ஏ.ஏ.-வை திரும்பப் பெறு!

தலையங்கம் – சி.ஏ.ஏ.-வை திரும்பப் பெறு!

இந்தியாவின் மதச்சார்பின்மையை சுக்கு நூறாக உடைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின்படி, அண்டை நாடுகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், பாரசீகர்கள், கிறித்தவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்கள் குடியுரிமை பெறலாம். ஆனால் இசுலாமியர்கள் வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. அதேபோல இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கும், அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படாது. ஆக, பாஜகவின் அணுவில் ஊறிப்போன மத வெறுப்பும், தமிழின விரோதப் போக்குமே இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழ், தமிழர் என்றெல்லாம் மோடி பேசுவதெல்லாம் பாஜக மீதான வெறுப்புணர்வை கரைக்கும் முயற்சியே தவிர, உண்மையான பற்றில்லை என்பதற்கு இது ஒன்றே போதுமானது. 2019ஆம் ஆண்டில் இந்த சட்டத்திற்கு எதிராக மிகக் கடுமையான போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தன....

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

மோடி ஆட்சியின் மோசமான சர்வாதிகாரம்

இந்தியாவில் மோடி ஆட்சி படு மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தனது 2024ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் V-Dem Institute ஆகும். உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையான ஜனநாயகங்கள் எப்படி செயல்பட்டு வருகின்றன என்பது குறித்து மிக நுட்பமாக ஆய்வு செய்யும் உலகின் முதன்மையானது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தில் மட்டும் 180 நாடுகளை சேர்ந்த 4080 பேர் பணியாற்றுகின்றனர். 201 நாடுகளை பற்றிய 31 மில்லியன் தரவுகள் இந்த நிறுவனத்திடம் உள்ளது. 1789 முதல் 2023 வரை உள்ள தரவுகள் இதில் அடங்கியுள்ளது. மிக துல்லியமாக ஒவ்வொரு நாட்டில் உள்ள வெவ்வேறு வகையான ஜனநாயகப் பண்பு குறித்து அறிக்கை தருவது இந்த நிறுவனம். அத்தகைய நிறுவனம் 2024ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் மோடி ஆட்சி மிக மோசமான சர்வாதிகாரத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது....

மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

மார்ச் 22-இல் கழக செயலவை கூடுகிறது!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவைக் கூட்டம் ஈரோட்டில் மார்ச் 21 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடைபெற உள்ளது. நாள் : 21.03.24 வியாழன் நேரம் : காலை 9.30 மணி முதல் இடம் : கே.கே.எஸ்.கே மகால், பவானி சாலை, ஈரோடு. பொருள் : • 2024 பாராளுமன்றத் தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு. • கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்கள். • நடைபெற்று வரும் பரப்புரை பயண அனுபவங்கள். கழகத்தின் செயலவை உறுப்பினர்கள் (மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர்கள்) இந்த செயலவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். 11.03.2024 பெரியார் முழக்கம் 15032024 இதழ்

எழுதிய தீர்ப்பை திருத்துவதுதான் சனாதன தர்மமா? நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

எழுதிய தீர்ப்பை திருத்துவதுதான் சனாதன தர்மமா? நீதிபதி அனிதா சுமந்துக்கு குவியும் கண்டனம்

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் சனாதனத்திற்கு எதிராக பேசியது சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், சனாதன தர்மத்தை தூக்கிப் பிடிப்பதற்காக அந்த தீர்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். இந்த தீர்ப்பின் நகல் கடந்த மார்ச் 7ஆம் தேதி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டது. திடீரென்று அடுத்த தினமே அந்த தீர்ப்பு இணையதளத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. மார்ச் 9 ஆம் தேதி பல்வேறு திருத்தங்களுடன் அந்த தீர்ப்பு மீண்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சனாதனம் பற்றிய கருத்துக்கள் அதில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சனாதனம் பற்றி குப்புசாமி சாஸ்திரியின் ஆய்வு மையத்தில் உள்ள பேராசிரியரின் கருத்தை நீதிமன்றம் கேட்டதாகவும், அவர்கள் தந்த விளக்கத்தின் அடிப்படையில் “சனாதன தர்மம் பிராமண – வைசிய – சத்திரிய – சூத்திர வர்ணாசிரம தர்மத்திற்கு எந்தத் தொடர்பும் கிடையாது, சனாதன தர்மம் வாழ்க்கையின் விழுமியங்களை பேசுகிறது. அது...

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

தோழர் திலீபன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து

வேலூர் : ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழகத் தலைவர் திலீபன், பெரப்பேரி கிராமத்தில் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை அகற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பு தோழர் திலீபனை கடுமையாகத் தாக்கியது. தோழர் திலீபனை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி 17.04.2023 அன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டக் கழக சார்பில் பானாவரம் காவல்நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கழகத் தோழர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 01.03.2024 அன்று தீர்ப்பானது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்ட வழக்குப்பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி ஆனந்த வெங்கடேசன். இந்த வழக்கில் கழக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 07032024 இதழ்

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு கழகம் ஆதரவு

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றுவரும் உண்ணா விரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறி ஞர்களை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா‌.உமாபதி ஆகியோர் 02.03.2024 அன்று சந்தித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்களது ஆதரவை தெரிவித்தனர். இராஜேஷ், அருண் கோமதி, எட்வின் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 1-இல் ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 07032024 இதழ்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

உடுமலையில் கழக சார்பில் பரப்புரை இயக்கம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! தெருமுனைக் கூட்டங்கள் 20.02.24 மற்றும் 21.02.24 ஆகிய இரு நாட்கள் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. உடுமலை பேருந்து நிலையம் முன்பு, பெதப்பம்பட்டி, துங்காவி, காரத் தொழுவு, கணியூர், வடதாரை பூளவாடி பிரிவு, ஐந்து முக்கு, பேரறிஞர் அண்ணா சிலை, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் கணக்கன், ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஒன்றிய அமைப்பாளர் அய்யப்பன், உடுமலை பகுதி பொறுப்பாளர் இயல்,கழகப் பொருளாளர் துரைசாமி, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, திருப்பூர் மாநகர அமைப்பாளர் முத்து, தமிழ்நாடு மாணவர் கழகம் மகிழவன், திவிக தாராபுரம் நகரப் பொறுப்பாளர் செல்வராசு, திருப்பூர் அய்யப்பன், சரசுவதி, விசிக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவை தங்கவேல், உடுமலை முற்போக்கு கூட்டமைப்பு...

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

நங்கவள்ளியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் பொதுக்கூட்டம்

சேலம் : சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியம் தானாபதியூரில் இந்து முன்னணியின் தடையைத் தகர்த்து சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 03.03.2024 அன்று தானாபதியூர் பகுதியில் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் சர்வாதிகார BJP அரசின் அவலங்களை விளக்கி பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து கார்ப்பரேட் சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல – தந்திரமே என்கின்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு தலைமையுரையாற்றினார். தொடர்ந்து கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், தானாபதியூர் தி.மு.க.இளைஞரணி சந்திரசேகரன், இளம்பிள்ளை திவ்யா, நங்கவள்ளி CPI ஒன்றியச் செயலாளர் பழ. ஜீவானந்தம், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் திருமதி வழக்கறிஞர் முத்து...

ஆளுநருக்கு அய்யாவழி தலைமை பதி பால பிரஜாபதி கடும் கண்டனம்

ஆளுநருக்கு அய்யாவழி தலைமை பதி பால பிரஜாபதி கடும் கண்டனம்

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அய்யா வைகுண்டர் குறித்து புத்தகம் வெளியிடுவது போல் வரலாற்றை திரித்து, ஆரிய கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பது போல் ஆளுநர் ரவி பேசியுள்ளார். அய்யா வைகுண்டர் சனாதன தர்மத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுத்தார். சமத்துவம் சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். சாதியை மறந்து பூமியில் ஒத்த இனமாக வாழ வலியுறுத்தினார். ஆனால் மனுதர்மத்தை ஏற்றிருந்த அரசு தான், அய்யாவை சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தியது. 800 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றை சரியாக படிக்க வேண்டும். அய்யாவின் வரலாறு தெரியாமல் யாரும் வாய் திறக்க கூடாது. ஆளுநர் சொல்வது போல் அய்யா வைகுண்டர் சனாதனத்தை காக்க வரவில்லை. மக்களை அதிலிருந்து காக்க வந்தார். அவர்களிடம் இருந்த மடமையை, அறியாமையை போக்க வந்தார். தங்களுடைய சுயலாபத்திற்காக யாரும் வரலாற்றை திரித்து பேசக்கூடாது. ஜாதியை வகுத்தவனை நீசன் என கூறும் அய்யா வைகுண்டரை சனாதனத்தை ஆதரித்தவர் என ஆளுநர் கூறுவதை ஒருபோதும் ஏற்க...

சனாதனத்தை வேரறுக்க பாடுபட்டவர் அய்யா வைகுண்ட சுவாமிகள்

சனாதனத்தை வேரறுக்க பாடுபட்டவர் அய்யா வைகுண்ட சுவாமிகள்

வள்ளலார், திருவள்ளுவர் என சனாதனத்துக்கு எதிராக, சமத்துவத்தைப் பேசிய தமிழின் பெருமைக்குரிய தலைவர்களை எல்லாம் ‘சனாதனவாதிகள்’ என திரிபுவாதம் செய்கிற வேலையை ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துகொண்டே இருக்கிறார். அந்த வரிசையில் இப்போது அய்யா வைகுண்ட சுவாமிகளையும் சேர்த்திருக்கிற ஆர்.என்.ரவி, “சனாதன தர்மத்துக்கு புத்துயிர் ஊட்டி வளப்படுத்தியவர் அய்யா வைகுண்டர்” என்று கூறியிருக்கிறார். அய்யா வைகுண்ட சுவாமிகளை இழிவுபடுத்துகிற ஆர்.என்.ரவியின் இப்பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள், தலைவர்களிடம் இருந்து கண்டனம் வலுத்து வருகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்ட சுவாமிகளைப் பற்றி 2018ஆம் ஆண்டு மே மாதம் நிமிர்வோம் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகளை தருகிறோம். ஜாதி தீண்டாமை பார்ப்பனிய எதிர்ப்புடன் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பே 1833இல் இயக்கம் தொடங்கியவர் வைகுண்டசாமி. அவர் வாழ்ந்த குமரிப் பகுதி அன்றைக்கு திருவிதாங்கூர் இராஜ்யத்திலிருந்தது. அதனை அப்பொழுது ஆண்டு வந்தவர் சுவாதித் திருநாள் மகாராஜா, சங்கீத விற்பன்னர்கள் இன்றளவும் போற்றிப் புகழுகிற இந்த மன்னரின் ஆட்சியில்...

வினா விடை

வினா விடை

• எனக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு மிகப் பழமையானது. – மோடி ஆமாம், கீழடி அகழ்வாராய்ச்சியிலேயே அதற்கு ஆதாரம் இருக்குன்னு சொல்லுவிங்களோ, உங்கள் பெயரே பத்தாண்டுகளாகத்தான் எங்களுக்கு தெரியும். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு. • சென்னைக்கு வரும் போது தமிழர்களால் எனக்கு சக்தி கிடைக்கிறது – மோடி அதனால் தான் கல்பாக்கத்தில் ஈனுலை அழிவு சக்தியை எங்கள் தலையில் கட்டியிருக்கிங்களா? • பாஜக தேர்தல் சுவரொட்டியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் – செய்தி விட்டா… முனுசாமி, சி.வி. சண்முகம் படத்தை கூட போட்டுப்பாங்க. • புதுக்கோட்டை கோயில் கர்ப்பகிரகத்தில் அரிவாளுடன் நுழைந்த நபரை காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்து வெளியேற்றியது. – செய்தி அய்யயோ ஆகமம் அனுமதிக்குமா? ஏன், வேத மந்திரங்களை வைத்து வெளியேற்ற முடியாதா? • ஆன்மீகம் தழைக்கும் நாடு நன்றாக மலரும் – ஆளுநர் தமிழிசை ஆனால், ஆன்மீக ஆளுநர்களை கொண்ட மாநிலங்கள் நன்றாக வதைபடும். •...

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

கோவையில் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம்; கழக ஏட்டுக்கு 75,000 நன்கொடை

திராவிட இயக்கத் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் 55ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டக் கழக சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் கருத்தரங்கம் 02.03.2024 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. எம்.ஆர்.இராதா கலைக்குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கருத்தரங்கம் தொடங்கியது. சூலூர் தமிழ்செல்வி கருத்தரங்கை தொகுத்து வழங்கினார். மாவட்ட அமைப்பாளர் புரட்சித் தமிழன் தலைமை தாங்கினார், மாதவன் சங்கர் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து “கோயில்களும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய செயலாளர் வழக்கறிஞர் ச.பாலமுருகன், திராவிட முன்னேற்றக் கழக கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், திராவிட இயக்க செயல்பாட்டாளர் லோகநாயகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “அறிஞர் அண்ணாவும் தமிழ்நாடும்” என்ற தலைப்பில் நிறைவுரையாற்றினார். கருத்தரங்கின் முடிவில் ஜெகதீசன், கார்த்திக் ஆகியோர் கழகத் தலைவர் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கழகத்...

தலையங்கம் – பாஜகவால் யாருக்கு ஆபத்து?

தலையங்கம் – பாஜகவால் யாருக்கு ஆபத்து?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், வட மாநிலங்களில் வேலையின்மை, வறுமை போன்ற வாழ்வாதார சிக்கல்கள் மேலோங்கி இருக்கின்றன. பாஜகவின் வழக்கமான இந்துத்துவ கோஷம் இந்தத் தேர்தலில் எடுபடப் போவதில்லை, இந்தி ஹார்ட்லேண்ட் எனப்படும் இந்தி மொழி பேசும் மக்கள் அடர்த்தியாக வாழும் மாநிலங்களிலேயே பாஜகவுக்கு சறுக்கல் ஏற்படும் என்று அரசியல் வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர். அதற்கேற்ப இந்தியா கூட்டணி தலைவர்களும் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு உரிமைகளையே அதிகம் முன் வைக்கின்றனர். பெரும்பான்மை மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி சமூகத்தினரிடம் இதற்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. குறிப்பாக, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் 10 நாட்களாக அம்மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மார்ச் 3ஆம் தேதி பாட்னாவில் “ஜன் விஸ்வாஸ்’ பரப்புரையின் நிறைவுக் கூட்டத்தை நடத்தினார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்ட அந்த கூட்டத்தில், 15 நேரம் விட்டு விட்டு பெய்த...

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

பத்திரிகையாளர்களை பந்தாடிய பாஜக

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறத் தொடங்கியிருக்கிறது. அதற்கேற்ப மக்கள் மனநிலையைக் கட்டமைக்கும் விதமாக, பல ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை திணிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டில் டெபாசிட் வாங்கும் அளவுக்குக்கூட வளர்ந்திடாத பாஜக 18% வாக்குகளுக்கு மேல் பெறும் என்றும், 4 முதல் 6 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் என்றும் புதிய தலைமுறை ஊடகம் கூட கருத்துத் திணிப்பு செய்தது. இப்படி பாஜகவிற்கு ஆதரவாக கருத்துருவாக்கம் செய்ய முயலும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு எப்படி நடத்தியிருக்கிறது என்பது பெரும் விவாதத்துக்கு உரியது. இதுகுறித்து “தி ஸ்கிரால்” ஊடகத்தில் அயூஷ் திவாரி என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்: 2014ஆம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 180 நாடுகளில் 140-வது நாடாக இருந்தது. அதுவே மோசமான நிலைதான் என்றால், இப்போது 163வது இடத்துக்கு மேலும்...

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு; உச்சநீதிமன்றத்தின் கருத்து சரியா?

தமிழ்நாட்டு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சிற்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது. ஒரு அமைச்சரே இப்படி சனாதனத்தை எதிர்க்கலாமா? என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்துள்ளது. சனாதனம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது. சனாதன தர்மம் என்றால் என்ன? என்பதை விவாதித்து விளக்கமளிக்காத உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்தமாக சனாதன தர்மத்தை எதிர்க்க கூடாது, அது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துவது என்று கூறுவது சற்றும் நியாயமற்ற ஒரு வாதமாகும். சனாதன தர்மத்தை வாழ்க்கை முறை என்கிறார்கள். ஆனால் வேத பண்டிதர்கள் முதல் சங்கராச்சாரியார் வரை சனாதனம் என்பது வர்ணாசிரம தர்மம் தான் என்று கூறியுள்ளனர். பிராமணன் – சத்திரியன் – வைசியன் – சூத்திரன் என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது தான் சனாதன தர்மம் என்று கூறுகிறார்கள். கீதையிலே கிருஷ்ணனும் இந்த நான்கு வர்ணத்தை காப்பாற்றுவதற்கு...

பெரியார் பல்கலை. பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம்

பெரியார் பல்கலை. பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம்

நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலை.யில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்புப் பதிவாளராக பணியாற்றி வருபவர் தங்கவேல் (60) பல்கலை நிதியை களவாடியது உள்பட அவர் மீதான 8 குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்யும்படி உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்தி, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பரிந்துரை செய்தது. உயர்கல்வித்துறை பரிந்துரையை எதிர்த்து தங்கவேல் தொடர்ந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ,”உயர்கல்வித்துறை பரிந்துரை மீது பெரியார் பல்கலை. எடுத்த நடவடிக்கை என்ன?. உயர்கல்வித்துறை பரிந்துரை செய்தும் பல்கலை. பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்கல்வி செயலாளரின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காமல் துணைவேந்தர் ஜெகநாதன் அரசிடம் விளக்கம் கேட்டது...

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

வேலையில்லா கொடுமை; உயிரை இழக்கவும் துணியும் இந்தியர்கள்!

உத்தரப் பிரதேச இளைஞர்களை சில விதிகளைத் தளர்த்தி இஸ்ரேலுக்கு வேலைக்கு அனுப்பியிருப்பதாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. பாலஸ்தீன படைகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சண்டை நடக்கும் சூழலில் இது தேவைதானா என அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. இப்போது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கடந்த ஓராண்டில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இருதரப்பிலும் இழப்புகளும் தாக்குதல்களும் தொடரும் வேளையில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாட்டவரையும் தங்கள் நாட்டு ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய படையில் சேர அந்நாட்டு இளைஞர்கள் தயக்கம் காட்டுவதாக கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாகவே இதுபோல வெளிநாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து தங்கள் நாட்டு ராணுவத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. விடுமுறை இல்லை,...

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

கழகத்தின் தெருமுனைக் கூட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு! சேலம், திண்டுக்கல், சென்னையில் முழுவீச்சில் பரப்புரை!

சென்னை : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரைக் கூட்டங்கள் வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை, சைதாப்பேட்டை கங்கையம்மன் கோயில் தெரு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல், மங்களாபுரம், ஓட்டேரி அஞ்சு லைட், ஜாயின்ட் அலுவலகம், அயன்புரம் உள்ளிட்ட இடங்களில் பிப்ரவரி 20 முதல் பிப்ரவரி 24 வரை நடைபெற்றது. உமாபதி – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி மற்றும் ஈரோடு பேரன்புவின் ராப் இசை பாடல்களுடன் ஒவ்வொரு கூட்டமும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அருண் கோமதி, பெரியார் நம்பி, மக்கள் அதிகாரம் காமராஜ், துணைவேந்தன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மேற்கண்ட கூட்டங்களை வட சென்னை மாவட்ட அமைப்பாளர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தட்சிணாமூர்த்தி, ஏசு குமார், ராஜன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். திண்டுக்கல் : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!...

பாஜக செய்த ஆட்சி கலைப்புகள்

பாஜக செய்த ஆட்சி கலைப்புகள்

சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதை ஏற்றுக்கொள்ளாத பாஜக, தேர்தல் அதிகாரியாக பாஜகவைச் சேர்ந்தவரை நியமித்து தேர்தலை நடத்த வைத்தது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், பாஜக தோல்வி தேர்தலுக்கு முன்பே உறுதியானது. ஆனாலும், தேர்தல் அதிகாரி பாஜகவின் கவுன்சிலர் என்பதால் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தார். கண்காணிப்பு கேமிராவில் தேர்தல் அதிகாரி அனில் மாஷி  வாக்குச்சீட்டுக்களை திருத்துவது அப்பட்டமாக பதிவானது. உச்சநீதிமன்றம் இதைக் கடுமையாக கண்டித்ததுடன், அரிதினும் அரிதான வழக்குகளில் பயன்படுத்தக்கூடிய விதி 142-யைப் பயன்படுத்தி ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது. சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் வழங்கிய நீதியை 2016 ஆம் ஆண்டிலிருந்து பல மாநிலங்களில் பாஜக செய்த ஆட்சி கவிழ்ப்புகளுக்கும் வழங்கியிருந்தால், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். தற்போது 12 மாநிலங்களில் நேரடியாகவும், 5 மாநிலங்களில் கூட்டணியுடனும் பாஜக...

சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளித்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை : நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ‘சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்’ என்ற தலைப்பில் சேலம் மேட்டூரில் உள்ள தானாபதியூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தத் திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருந்தது. இந்தக் கூட்டத்தை நடத்த சேலம் ஜலகண்டபுரம் காவல்நிலையத்தில் அனுமதி கேட்டுக் கடந்த பிப்.10ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கைச் சுட்டிக்காட்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கூறியும் கூட்டம் நடத்த அனுமதி மறுத்து சேலம் ஜலகண்டபுரம் காவல்துறை அந்த மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்தும், சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த...

வினா விடை

வினா விடை

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தலைமை அலுவலகத்தில் காத்திருந்த எடப்பாடி பழனிசாமி; யாரும் வராததால் அதிருப்தி – செய்தி கவலை வேண்டாம்… தங்கமணி, வேலுமணியை ஆளுக்கொரு கட்சி தொடங்கவைத்து பேச்சுவார்த்தைக்கு வரச் சொல்லிவிடலாம்.   தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வே இல்லை   – அண்ணாமலை 39 எம்.பி.க்களை அனுப்பப் போகிற கட்சிக்குத்தானே வேலை? பாஜகவுக்கு என்ன வேலை?   ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டுப்போட மக்கள் முடிவு – நரேந்திர மோடி ஆமாம்… துவாரகா எக்ஸ்பிரஸ், ஆயுஷ்மான் பாரத், டோல்கேட் ஊழல் செய்த கட்சிக்கு முடிவு கட்டப் போகிறார்கள்.   பொதுமக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றிவிட்டது      – அமித் ஷா கருப்புப் பணத்தை மீட்டு 15 லட்சம் ரூபாய் இன்னும் வரவு வைக்கவில்லையே! மதுரை எய்ம்ஸ் செங்கல்லோடு நிற்கிறதே?   இந்தியாவை யாராவது அச்சுறுத்த நினைத்தால் சரியான பதிலடி கொடுப்போம் – ராஜ்நாத் சிங்...

சென்னையில் ஆணவப் படுகொலை!

சென்னையில் ஆணவப் படுகொலை!

சென்னை : வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணையில் பிரவீன் என்கிற ஆசிக் என்ற இளைஞர் 24.02.2024 அன்று ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சென்னை மாவட்டக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி மடிப்பாக்கம் பகுதிச் செயலாளர் ம. கி. எட்வின் பிரபாகரன், அட்டி அருண் ஆகியோர் பிரவீனின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதில் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், மக்கள் குடியரசு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜான் மண்டேலா ஆகியோர் பங்கேற்றனர் பின்னர் வழக்கறிஞர் ரமேஷ் பெரியார், அருள் ஜெகன், ஏதுசாமி, மோகன் உள்ளிட்ட தோழர்களை சந்தித்து ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். சென்னை போன்ற மாநகரங்களிலேயே ஆணவப் படுகொலை செய்யும் அளவுக்கு ஜாதியவாதிகளுக்கு துணிச்சல் அதிகரித்திருப்பது கவலைக்குரிய ஒன்று. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ்நாடு அரசு இதுகுறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டியது அவசியமாகிறது....

தலையங்கம் – முன்னேறுகிறது இந்தியா; சறுக்குகிறது பாஜக

தலையங்கம் – முன்னேறுகிறது இந்தியா; சறுக்குகிறது பாஜக

தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையங்கள், நீதிமன்றங்கள் என பாஜகவின் கட்டுப்பாட்டில் பல துறைகள் இருப்பதைப் போல ஊடகத் துறையும் ஒன்றாக கலந்துவிட்டன. கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துருவாக்கத்தை கட்டமைப்பதையே பல ஊடகங்கள் செய்கின்றன. 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வேலையின்மை, விலைவாசி உயர்வு பிரச்னைகள் மக்களை வாட்டி வதைக்கிறது. விளைபொருட்களுக்கு உரிய விலை கேட்டு டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் மீது மும்முனைகளில் இருந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாரதிய ஜனதா அரசு. காவல்துறை லத்திகளால் கடும் காயங்களை சந்தித்திருக்கிறார்கள் விவசாயிகள். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, காற்றின் வழியாகவும் நிலைகுலையச் செய்திருக்கிறார்கள். டிரோன்களை பறக்கவிட்டு, அதில் இருந்து ரப்பர் குண்டு மழை பொழிந்து விவசாயிகளின் உடல்களை குத்திக் கிழித்திருக்கிறார்கள். இதுவரை 3 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். உற்பத்தித் துறை, ஏற்றுமதித் துறை, சேவைத்துறை என...

ஊழல் கறையைப் போக்கும் அதிநவீன வாஷிங்மெசின் பாஜக

ஊழல் கறையைப் போக்கும் அதிநவீன வாஷிங்மெசின் பாஜக

எதிர்க்கட்சியில் இருக்கும்போது பாஜகவால் தீவிரமான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், அமலாக்கத்துறை- வருமான வரித்துறை போன்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளால் சோதனைகளுக்கும், விசாரிப்புகளுக்கு உள்ளானவர்கள் பாஜகவில் இணைந்துவிட்டாலோ அல்லது பாஜக ஆதரவாளர்கள் ஆகிவிட்டாலோ அவர்கள் மீதான மோசடி குற்றச்சாட்டுக்களும் ஒரு நொடியில் பறந்துவிடும், பிறவிப் புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படி பாஜகவின் வாஷிங் மெஷினில் சிக்கி தூய்மையானவர்களின் பட்டியல். பாவனா கவாலி : சிவசேனாவை சேர்ந்த இவர், பொது அறக்கட்டளைக்கு சொந்தமான 7 கோடி ரூபாய் பணத்தை முறைகேடு செய்ததாக 2020ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கினார். இந்த வழக்கில் சில மாதங்கள் கழித்து இவருக்கு நெருக்கமான சயீத் கான் என்பவர் கைது செய்யப்பட்டார். 2021, 2022-இல் பாவனாவை விசாரிக்க அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. குற்றப்பத்திரிகையில் இவருடைய பெயரும் இருந்தது. ஆனால் 2022 ஜூலையில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தார் பாவனா. மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே அணியின் தலைமைக் கொறடாவாகவும் அறிவிக்கப்பட்டார்....

தமிழ்நாட்டை முந்துகிறதா உத்தரப் பிரதேசம்? சங்கிகளின் பொய்யுரைகளை அம்பலப்படுத்துவோம்

தமிழ்நாட்டை முந்துகிறதா உத்தரப் பிரதேசம்? சங்கிகளின் பொய்யுரைகளை அம்பலப்படுத்துவோம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை பின்னுக்குத்தள்ளி உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டதாக, பாஜகவினர் சமூக ஊடகங்களில் பொய்ச்செய்தி ஒன்றை பரப்பினர். இதுபோன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுதான் “குஜராத் மாடல்” என்ற போலி பிம்பத்தை உருவாக்கினார்கள். அந்த பிம்பம் இப்போது சுக்குநூறாக உடைந்துவிட்டதால் “உ.பி. மாடல்” என்ற ஒன்றுக்கும் உதவாத மாடலை போலிச் செய்திகளால் கட்டமைக்க பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ன? உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி என்பதற்கான சிறு ஒப்பீட்டை இங்கு காணலாம். 2024-25 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் மதிப்பீட்டின்படி, ஒன்றிய நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப் போகிற தொகை 49,754.95 கோடி ரூபாய். ஆனால் உத்தரப் பிரதேசத்துக்கு கிடைக்கப் போகிற தொகையோ 2,18,816.84 கோடி ரூபாய். ஒன்றியத்துக்கு வரியாகச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது தமிழ்நாடு. ஆனால் உத்தரப் பிரதேசமோ 2.73 ரூபாயாக...

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

பரப்புரையில் பம்பரமாய்ச் சுழலும் திண்டுக்கல் – சென்னை மாவட்டங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டக் கழக சார்பில் 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் 11.02.2024 அன்று நெய்காரபட்டி, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம் புதூர், பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், வயலூர், மிடாப்பாடி, குமாரபாளையம், குருவன்வலசு, தாழையூத்து, சின்னக்கலையம்புத்தூர், மானூர், நரிக்கல்பட்டி, மேல்கரைப்பட்டி, கீரனூர், தொப்பம்பட்டி, வாகரை, புளியம்பட்டி, அமரபூண்டி, விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, மாட்டுப்பாதை, கணக்கன்பட்டி, பொருளூர், கள்ளிமந்தயம், கொ.கீரனூர், I.வாடிப்பட்டி, சக்கம்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை, இடையகோட்டை, மார்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, வெரியப்பூர், கேதையறும்பு, லெக்கயன்கோட்டை, அத்திக்கோம்பை, தும்பிச்சம்பட்டி, ஒட்டன்சத்திரம் இரயில் நிலையம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், மூலச்சத்திரம், ஸ்ரீராமபுரம், கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆத்தூர், சித்தயன்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் பத்து நாட்களாக தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. புளியம்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தை கவனித்த பெரியார் தொண்டர் ஒருவர் மாலை ஒன்றை வாங்கி பெரியார் படத்திற்கு மாலை அணிவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது....

வந்திடுச்சு; ராமராஜ்ஜியம் வந்துடுச்சு – கோடங்குடி மாரிமுத்து

வந்திடுச்சு; ராமராஜ்ஜியம் வந்துடுச்சு – கோடங்குடி மாரிமுத்து

”பங்கஜம் இனி நம்மளவா ஆட்சி தான்டீ. ராமன் கோயில் திறந்த அந்த நிமிஷத்திலேயே ராமராஜ்ஜியம் வந்திருச்சு. அமித்ஷா இதை அறிவிச்சுட்டாரு, இனி ஆயிரம் ஆண்டு ராமராஜ்ஜியம் தான் என்று அவரே கூறிட்டாரு. பாஜக தேசியக் குழு தீர்மானமே போட்டுடுச்சுடீ. போய் பால் பாயாசம் கொண்டு வா” இப்படி ஆனந்தக் கூத்தாடி இருக்கும் ஒரு கூட்டம். அவர்களுக்கு பல பெயர்கள் உண்டு. சமூக ஆர்வலர்கள், வலதுசாரி, அரசியல் ஆய்வாளர், பாஜக, இந்து முண்ணனி என்று பல பல முகமூடிகளில் வருவார்கள். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள். எதிர்த்து பேசுபவர்களின் நெத்தியடி கேள்விகளால் திக்குமுக்காடினாலும் கூச்சல் போட்டு மடைமாற்றம் செய்துவிடுவார்கள்.இவர்களெல்லாம் யார்? ஒற்றை இந்தியாவைப் போல ஒற்றை வரியில் சொல்லப்போனால் சங்கிகள் பாமர வாக்காளர்களுக்கு தலை சுற்றுகிறது. அவர்களுக்கு பல சந்தேகங்கள் வந்துவிட்டன. சங்கிகள் என்ன கூறுகிறார்கள், பாமர மக்கள் என்ன நினைக்கிறார்கள். இருவரும் நேருக்கு நேராக சந்தித்தால்… ஒரு உரையாடல் பாமர வாக்காளன் :...

வினா விடை

வினா விடை

பழனி கோயில் கொடி மரத்தின் அருகே இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தீர்ப்பு பழனி கோயிலில் கொடிமரமே கிடையாது என்கிறார் ஆன்மீகப் பேச்சாளர் சுகி.சிவம். பாஜக கொடிமரம் ஒன்றை நட்டு, அறிவிப்பு பலகையை தொங்கவிடலாமா? இஸ்லாமிய நாடான அபுதாபியில் அரசர் ஆதரவோடு இந்து கோயிலை திறந்து அங்கே நாட்டின் பெருமையை பேசினார் மோடி – செய்தி அங்கே கோயில் கட்டுவார்கள், இங்கே மசூதி இடிப்பார்கள் உலகிலேயே ‘விதவைகள்’ அதிகம் வாழும் நாடு இந்தியா – உலக பொருளாதார மன்றம் ஆளுநரே! உங்கள் சனாதனப் பெருமையில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆண் சிங்கத்துக்கு அக்பர் பெயர்; பெண் சிங்கத்துக்கு சீதை பெயரா? ‘இந்து’க்களை புண்படுத்துகிறார்கள் – விஷ்வ இந்து பரிசத் வழக்கு ‘சிங்கங்களுக்கு’ ஜாதி, மதம் கிடையாது. “அசிங்கங்கள்” தான் இதற்கு நீதிமன்றம் ஓடும் பெரியார் முழக்கம் 22022024

மிருகத்துக்கும் மதச்சாயம்

மிருகத்துக்கும் மதச்சாயம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறது. அம்மாநிலத்தில் சிலிகுரி என்ற பகுதியில் பெங்கால் சவேரி என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அந்த பூங்காவில் ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்துக்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிங்கங்களும் திரிபுராவில் இருந்து வந்தவை. இதற்கு திரிபுராவிலேயே பெயர் சூட்டப்பட்டுவிட்டது. ஆண் சிங்கத்துக்கு அக்பர் என்ற இஸ்லாமியப் பெயரையும், பெண் சிங்கத்துக்கு சீதா என்ற ராமாயண பாத்திரப் பெயரையும் சூட்டியிருப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே பெண் சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பதுதான் விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் கருத்து. அக்பர் ராமாயணத்துக்கு எதிரானவரா? இந்துமதத்துக்கு எதிரானவரா? என்பதையும் வரலாற்றுரீதியாக நாம் சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. ராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் இருந்து பாரசீக மொழிக்கு மொழிப்பெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட மன்னர் தான் அக்பர். ...

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா

ஜாதி மறுப்பு இணையர்களுக்கு மதுரையில் பாராட்டு விழா

மதுரை : காதலர் தினத்தையொட்டி மதுரை மாவட்டக் கழக சார்பில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் வாசுகி வரவேற்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன், அதிமமுக பொதுச் செயலாளர் பசும்பொன்.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.கனியமுதன், தமிழ்ப்புலிகள் கட்சி தென்மண்டல பொறுப்பாளர் கனகராஜ் ஆகியோர் உரையாற்றினார்.. முன்னதாக ஜாதி மறுப்பு இணையர்களுக்கு தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் இன்குலாப் ஆகியோர் நினைவுப் பரிசினை வழங்கினர். தொடர்ந்து ஜாதி மறுப்பு இணையேற்பு நடத்தி சட்ட போராட்டம் நடத்தும் தோழர்களான கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரனுக்கு ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் நினைவுப் பரிசு வழங்கினார். தமிழ்நாடு ஜாதி மறுப்பு இணையர் நலச் சங்க செயலாளர் ரமேசு...

தலையங்கம் – பிரதமர் ராஜினாமா செய்வாரா?

தலையங்கம் – பிரதமர் ராஜினாமா செய்வாரா?

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக ‘தேர்தல் பத்திரங்கள்’ என்ற நடைமுறையை 2018-ஆம் ஆண்டில் கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு. உரிய விவாதம் கூட இல்லாமல் நிதி மசோதாவாக இந்த சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் கார்பரேட் நிறுவனங்கள், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இந்த நன்கொடையை வழங்கலாம். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்படும் பத்திரங்களை பெற்று, அரசியல் கட்சிகளிடம் கொடுத்துவிட்டால், அந்த கட்சிகள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் செலுத்தி பணமாக பெற்றுக்கொள்ளும். இதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை, பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை என்றும் சட்டத்தில் ஏற்படுத்தினார்கள். இச்சட்டம் இயற்றப்பட்டபோது பெருநிறுவனங்கள் தங்களுடைய மூன்று ஆண்டு லாபத்தின் சராசரியில் 7.5% விழுக்காட்டுக்கும் மேல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியாது என்ற வரம்பும் நீக்கப்பட்டது. அதாவது, நிறுவனங்களை மிரட்டிப் பணம் பறிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் சட்டத்தின் வாயிலாகவே ஏற்படுத்தி வைத்தது...

‘திராவிட மாடல் ஆட்சி’யின் ஈராண்டு சாதனைகள் – பட்டியலிட்ட முதலமைச்சர்

‘திராவிட மாடல் ஆட்சி’யின் ஈராண்டு சாதனைகள் – பட்டியலிட்ட முதலமைச்சர்

சட்டப்பேரவையில் பிப்ரவரி 15-ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அவற்றால் ஏற்பட்ட பலன்கள் குறித்து முதலமைச்சர் ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகளைக் காணலாம். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது! ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! கல்வியில்...

200 நிறுவனங்களில் ஓ.பி.சி. எஸ்.சி-க்கு சொந்தமாக ஒன்றுகூட இல்லை : ராகுல் காந்தி

200 நிறுவனங்களில் ஓ.பி.சி. எஸ்.சி-க்கு சொந்தமாக ஒன்றுகூட இல்லை : ராகுல் காந்தி

‘நாட்டின் மக்கள்தொகையில் 73 விழுக்காடு பேர் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினராக இருந்தாலும், முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை’ என ராகுல் காந்தி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பிப்ரவரி 18ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது நாட்டின் எக்ஸ்ரே. அதுதான் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும். சாதிவாரி கணக்கெடுப்பு இளைஞர்களின் ஆயுதம். அதன்மூலம் தான் உங்கள் மக்கள்தொகை என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும். நாட்டின் செல்வத்தில் உங்கள் பங்கு என்ன என்பதை அறிய முடியும். தற்போது நாட்டில் ஓ.பி.சி. வகுப்பினர் 50 விழுக்காடு, தாழ்த்தப்பட்டவர்கள் 15 விழுக்காடு, பழங்குடியினர் 8 விழுக்காடு உள்ளனர். இவர்களின் மொத்த மக்கள் தொகை 73 விழுக்காடு. ஆனால் நாட்டில் உள்ள முதல் 200 நிறுவனங்களில் ஒன்று கூட ஓ.பி.சி. அல்லது தாழ்த்தப்பட்ட...

திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சி : திருச்சி மாவட்டக் கழக சார்பில் வைக்கம் நூற்றாண்டு மற்றும் எது திராவிடம்? எது சனாதனம்? என்ற தலைப்பில்  3.2.2024 அன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் கைலாஷ் நகர், காட்டூர் கடைவீதி உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தை குணராஜ் தொடங்கி வைத்தார். டார்வின் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தாமோதரன், மந்திரமில்லை! தந்திரமே!  பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா கருத்துரையாற்றினார். நிறைவாக குமரேசன் நன்றி கூறினார். நிகழ்வில் மணிகண்டன், சர்மிளா, ஜெய சீனிவாசன், அசோக், ஆறுமுகம், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 15.02.2024

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு

சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  10.02.2024 அன்று சேலம் கருப்பூர் சக்தி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா தொகை ஒப்படைப்பு மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையாக  “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் ;சமூக ஒற்றுமையைக் காப்போம்” என்ற தலைப்பில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 11.02.2024 ஞாயிறு அன்று நங்கவள்ளியில் பொதுக் கூட்டத்துடன் பரப்புரையை தொடங்கி, சேலம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா முதல் தவணையாக சேலம் மாவட்டத்தின் சார்பாக (கிழக்கு – மேற்கு) 525 சந்தாவிற்கு தொகையினை கழகத் தலைவரின் முன்னிலையில் தோழர்கள் ஒப்படைத்தனர். வருகின்ற 18.2. 2024 ஞாயிற்றுகிழமை எஞ்சிய பெரியார் முழக்க சந்தாக்களையும் மாவட்ட தலைமையிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கான...

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

காஸா நகரில் பாலஸ்தீனிய மக்களையும், படைகளையும் குறிவைத்து இஸ்ரேலிய படைகள் கடந்த 4 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை வைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 28,000 பேர் உயிரிழந்தனர். அதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இனப்படுகொலைக்கு ஒப்பான இக்கொடூரச் செயலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வழக்கை எதிர்கொள்ளும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இந்த ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை அதானி குழுமம் தற்போது தயாரித்து அனுப்பியிருக்கிறது என்ற தகவல்  வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு உபகரணங்கள் சார்ந்த பிரபல ஊடகமான ஷெப்பர்டு மீடியா கூறியுள்ளது. இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2018ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் 15 மில்லியன் டாலர் முதலீட்டில் அதானி குழுமம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு ஆலையை நிறுவியது. அந்த ஆலையில் இருந்துதான் இந்த டிரோன்கள் தயாரித்து அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதானி குழுமத்திற்கு எதிராக...

பாஜகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார் ஆளுநர்!

பாஜகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார் ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் ஒரு நாடகத்தை சட்டப்பேரவையில் அரங்கேற்றி இருக்கிறார். அரசு எழுதிக்கொடுத்த உரையை படிக்காமல் தனது உரையை இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே முடித்துக் கொண்டார். அவர் எதையுமே முழுமையாக படிப்பதில்லை. அது திராவிடம் என்றாலும் சரி, வள்ளுவர் என்றாலும் சரி, சனாதனம் என்றாலும் சரி எதையும் அவர் முழுமையாக படிக்காமல் தனக்கு தெரிந்ததையெல்லாம் பேச வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒருவர். அதேபோல அரசே எழுதிக்கொடுத்து சட்டப்படி படிக்க வேண்டிய ஆளுநர் அதில் எனக்கு முரண்பாடு இருக்கிறது என்று கூறி தானே ஒரு உரையை எழுதிப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல. அப்படியானால் தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சராகி, அவர் அமைக்கிற அமைச்சரவையில் ஒரு உரையை தயாரித்த பின்னர் அவர் விரும்புகிற உரையை படிக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, அமைச்சரவையின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஒரு ஆளுநர் தமிழ்நாடு அரசின் உரையில் தனக்கு...

வினா விடை

வினா விடை

நாங்கள் ஆட்சியில் இருந்த போது கவர்னருடன் எந்த பிரச்சனையும் இல்லை – எடப்பாடி பாஜக ஆட்சிகளுக்கு எல்லாம் அவர்கள் பிரச்சினை கொடுப்பதில்லை. ஆளுநர் உரையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன் தேசியகீதம் பாட வேண்டும் என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. இது ஆளுநருக்கும், திமுக ஆட்சிக்கும் உள்ள பிரச்சினை                                                                  – எடப்பாடி சத்தியமாக எனக்கு தெரியாது; நான் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த போது ஆளுநர் உரையாற்றும் போது சட்டசபையிலேயே தூங்கிவிடுவேன். திருவேற்காடு கருமாரியம்மன் தாலியை திருடிய அர்ச்சகர்கள் கைது – செய்தி ஆகம விதிப்படி நியமனம்; கிரிமினல் சட்டப்படி கைது! காங்கிரஸ் ஆட்சி தயாரித்த உரையை முழுமையாகப் படித்தார் கருநாடக கவர்னர் கெலாட் – செய்தி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுக்கள் விழ வேண்டும் என்ற கவலை அந்த கவர்னருக்கு! பெரியார் முழக்கம் 15.02.2024

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

(08.02.2024  இதழில்   வெளியான உரையின் தொடர்ச்சி) 1892-இல் ஆங்கிலக் கல்வி வந்தபோது சென்னை மாகாணத்தில் சர்வீஸ் கமிசன் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த 1892-க்கும் 1904-க்கும் இடையில் அய்.சி.எஸ். அதிகாரிகளாக 16 இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் 15 பேர் பிராமணர்கள். அந்த காலகட்டத்தில் ஆளுநர் நிர்வாக கவுன்சிலில் 3 இந்தியர்கள், அதில் இருவர் பிராமணர்கள். 1900-ஆம் ஆண்டு ஐந்து பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். அதில் நால்வர் பிராமணர்கள். 1907-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களாக 12 நியமிக்கப்பட்டனர். அதில் 11 பேர் பிராமணர்கள். அவர்கள் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கக்கூடாது என்று கூறி அதை எடுத்துவிட்டனர். அதற்குப் பின்னர் ஆட்சியமைத்த பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி காலத்தில்தான் தமிழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது. திராவிடம் என்ற சொல் 7ஆம் நூற்றாண்டில் குமரில பட்டர் எழுதிய தாந்திர வார்த்திகா என்பதில் ஆந்திரா திராவிட பாஷை என்று வருகிறது. இந்த மண்ணில்...

ஆளுநரின் ‘மனசாட்சி’ உரை இப்படி…

ஆளுநரின் ‘மனசாட்சி’ உரை இப்படி…

ஆளுநர் உரை : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களே, உறுப்பினர்களே, அவைத் தலைவரே உங்கள் அனைவருக்கும் குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரின் நமஷ்காரம். ஜெய் சிரி ராம் என்று நான் இப்போது கூறுவேன். அதை நீங்கள் திருப்பி முழங்க வேண்டும் (அவையில் நான்கு பேர் மட்டுமே திருப்பி முழங்குகிறார்கள்) சரி அனைவரும் இதை முழங்காவிட்டாலும், நான் அனைவரும் முழங்கியதாக பேரவைக் குறிப்பில் பதிவு செய்ய உத்தரவிடுகிறேன். தமிழ்நாட்டில் இப்போது மாநில உரிமை என்ற கூச்சல் காதை துளைக்கிறது. இப்போதைய தேவை மாநில உரிமை அல்ல, ஆளுநர்களின் உரிமை. அதுவும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களுக்கான உரிமை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் சனாதன தர்மம். இந்த சனாதன தர்மம் இல்லாவிட்டால் ஜனநாயகமே இல்லை என்று நமது முன்னோர்களும், ரிஷிகளும், தேவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அடித்து கூறிவிட்டார்கள். சூத்திரர்கள், பஞ்சமர்கள் அன்னிய மதத்தினர் ஓட்டு போட்டதாலேயே மக்கள் பிரதிநிதியாகிவிட...

தலையங்கம் – சோதனைக்கூட எலிகளா மக்கள்?

தலையங்கம் – சோதனைக்கூட எலிகளா மக்கள்?

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிவிட்டோம், காஷ்மீருக்கான சிறப்பு உரிமையை பறித்து விட்டோம் என்ற மிதப்போடு பொது சிவில் சட்டத்தை திணிக்க துணிந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்கு முன்னோட்டமாகத்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மதத்தினருக்கும் திருமணம், விவகாரத்து சார்ந்த நடைமுறைகளில் இனி ஒரே சட்டம்தான் இருக்கப் போகிறது. அந்தந்த மத வழக்கப்படி திருமணம் செய்யலாம், ஆனால் யார் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்பதற்கு பொது சிவில் சட்டம் பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதற்கும், விவாகரத்து செய்வதற்கும்கூட பொது சிவில் சட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இசுலாமியர்களின் திருமண விவகாரங்களில் மூக்கை நுழைப்பதாக நினைத்து பாஜக அரசு உருவாக்கிய இந்த சட்டத்தால் இந்துக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. யார் யாரை திருமணம் செய்ய வேண்டுமென்று பாஜக அரசு முடிவு செய்யக்கூடாது, இந்த சட்டத்தின் கூறுகள் பெரும்பாலும்...

கருத்துரிமைக்கு எதிரான சுற்றறிக்கை – கழகத் தலைவர் கண்டனம்

கருத்துரிமைக்கு எதிரான சுற்றறிக்கை – கழகத் தலைவர் கண்டனம்

கருத்துரிமை – பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என்று கழகம் வலியுறுத்தல்! இதுகுறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:- பெரியார் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை கடந்த 5.2.2024 ஆம் நாளன்று அனைத்து பணியாளர்களுக்கும் விடுத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் நடத்தை விதிகளின் 14 (1) (2) என்ற விதிகளைக் காட்டி, இதுவரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் முன்னனுமதி பெற்றோ, பெறாமலோ நூல்கள் வெளியிட்டிருந்தால் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை, தலைப்பு, பதிப்பாளர் முகவரி, பெற்ற பணப் பலன்கள் என்றெல்லாம் பல விவரங்களை அந்த சுற்றறிக்கை கோருகிறது. ஆனால் பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கும் விதிகள் தொலைக்காட்சி வானொலி விவாதங்களில் பங்கேற்பது குறித்தும்,  செய்தி ஏடுகளுக்கு, வார ஏடுகள் போன்ற பருவ வெளியீடுகளுக்கு எழுதுவது குறித்தும் உள்ள விதிகளைத்தான் அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அந்த விதிகளின்படி கூட இலக்கியம், கலை, அறிவியல்,...

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற கழகத் தலைமைக் குழுவில், “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” என்ற முழக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கழகத்தின் பரப்புரைக் கூட்டங்கள் பொதுமக்களின் வரவேற்போடு எழுச்சியோடு தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை: சென்னை மாவட்டத்தின் முதல் பரப்புரைக் கூட்டம் 10.02.2024 அன்று வேளச்சேரி காந்தி சாலையில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் எட்வின் பிரபாகரன் தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். பாடகர் கோவன் பங்கேற்ற ம.க.இ.க கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கழகத் தோழர் பேரன்பு ராப் பாடல்கள் பாடினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இரா.உமா, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ஆகியோர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் பேராபத்துக்களை மக்களிடம் விளக்கிப் பேசினர். திராவிட முன்னேற்றக்...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர், இதழியல் துறை இணைப் பேராசிரியராகவும், பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார். மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தவே பெரியாரின் போராட்ட வரலாறுகளை தொகுத்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு. இது தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பெயரிலான பல்கலை நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்திற்கு...

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார், இராஜேசு, அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி மயிலைப் பகுதிக் கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், அய்யா உணவகம் சுரேஷ், பிரவீன், உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டில் ராஜேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மேற்கு : புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவுநாளை ஒட்டி 06.12.23 காலை 10 மணியளவில் சேலம் மேற்கு...

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

1970ஆம் ஆண்டில் “தமிழ்ப் பாடமொழித் திட்டத்தை” கலைஞர் அமல்படுத்தியபோது அதனை வரவேற்று பெரியார் அளித்த அறிக்கை. தமிழ்நாட்டில் வீழ்ச்சி அடைந்த காங்கிரஸ் இயக்கம் தலை எடுக்க, வளர நான் காரணமாக இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டு  நீதிக்கட்சித் தலைவரானதன் காரணமே பார்ப்பனரல்லாத தமிழர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக ஆக்குவதற்காகவேயாகும். அதற்காக அன்றிலிருந்து இன்றுவரை நான் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியும் ஒரு நிமிடமும் ஓய்வு கொள்ளாமல் பணியாற்றிக்கொண்டுள்ளேன். லட்சியங்களில் வெற்றி பலருக்குக் கிடைத்தது போல், எனக்கு இளமைக் காலத்தில் கிடைக்காவிட்டாலும் எனது முதுமைக் காலத்திலாவது கிடைத்தது என்பதற்கு அடையாளமாகத்தான் என்னோடு  இருந்து  வளர்ந்தவர்களால்  ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்ப் பாட மொழி என்ற யுத்த தளவாடம்: இந்த ஆட்சியுனுடைய சாதனைகளில் எந்தவித ஓட்டை உடைசல்களையும் குறிப்பிட்டுக்காட்டி எதிர்க்கமுடியாமல்  தமிழ்ப் பாட மொழிப் பயற்சியைத் தங்கள் யுத்த தளவாடமாக எடுத்துக்கொண்டு, ஆச்சாரியாருடைய சுதந்திராக்கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக்...

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் கடந்த 30.12.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு புவனகிரியில் தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் மாணிக்.முருகேசன் தலைமை தாங்கினார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழன், மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. அ.மதன்குமார் வரவேற்றார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சதானந்தம், கழக கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் ந.கொளஞ்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி, தியாகி பாலா பேரவையின் பொதுச்செயலாளர் கார்ல் மார்க்ஸ், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்ட கழகச் செயலாளர் அ.சதிசு நன்றி கூறினார். சென்னை :  தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம், 20.12.2023, புதன்கிழமை...

மயிலாப்பூரில் மார்கழியில் மக்களிசை

மயிலாப்பூரில் மார்கழியில் மக்களிசை

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஏற்காதபோது பெரியார் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கீழே இருந்த பார்ப்பனர்கள் கூச்சலிட, அவர்களைப் பார்த்து, “நீங்கள் கூச்சலிட்டு நான் அமைதியாக வேண்டுமா? நாங்கள் திரும்பி கூச்சலிட்டால் நீங்கள் என்ன ஆவீர்கள் என யோசித்துப் பாருங்கள்” என்றாராம் பெரியார். அப்படித்தான் மார்கழி மாதம் வந்துவிட்டாலே போதும்… பார்ப்பனர்கள் சில நூறு பேர் சபாக்களை நடத்துவதும், பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக நடத்தப்பட்ட இந்த சபாக்கள் இல்லாவிட்டால் சென்னைக்கு இசையே இல்லை என்பதுபோல, பார்ப்பன ஏடுகள் பக்கம், பக்கமாக சிலாகித்து எழுதுவதும் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருந்தது. இப்போதும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும், இப்போதெல்லாம் மார்கழி மாதம் வந்துவிட்டாலே “மார்கழியில் மக்களிசை” எங்கே நடக்கிறது என்று மக்கள் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், 4-வது ஆண்டாக மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பகுதியில் டிசம்பர் 30, 31 ஆகிய 2 நாட்கள் “மார்கழியில் மக்களிசை” நிகழ்ச்சி...