1. தமிழர் கடமை

வேலூரில் சென்னை மாநிலத் தமிழர் மாநாடும் சென்னையில் தென்னிந்திய நலவுரிமைச் சங்க 14-வது மாநாடும் கூடி முடிவடைந்துவிட்டன. வேலூரில் கூடிய மாநாட்டின் நோக்கம் நமது தாய் மொழியான தமிழைக் காப்பது; சென்னையில் கூடிய மாநாட்டின் நோக்கம் திராவிடப் பெருமக்கள் சகல துறைகளிலும் தமது பிறப்புரிமையைப் பெற வேண்டுமென்பது. இரு மாநாட்டாரும் ராமசாமிப் பெரியாரே தமது தனிப்பெருந்தலைவரென சபதம் செய்து விட்டனர். பெரியார் சிறை புகுந்து இன்று 27 நாட்கள் ஆகின்றன. அவர் எதற்காகச் சிறை புகுந்தார்? திராவிட பெருங்குடி மக்களுக்காகவே தமிழ் நாட்டாருக்காகவே சிறை புகுந்தார். திராவிட மக்கள் விடுதலையை முன்னிட்டே சிறை புகுந்தார்.  மதத்தையும் கலைகளையும் புதிய உருவத்தில் நமது தலைமேல் சுமத்த ஆரியப் பார்ப்பனர் காங்கிரஸ் மூலம் சூழ்ச்சிகள் செய்கின்றனர். தென்னாட்டாரில் ஒரு சாராருக்குக் காங்கிரஸ் மோகமும் காந்தி பக்தியும் இருந்து வருவதினால் காந்தி ஆணையே? காங்கிரஸ் ஆணையே முக்கியமெனத் தப்பாகக் கருதுகின்றனர், காந்தி மூலமே – காங்கிரஸ் மூலமே தமக்கும் தமது நாட்டுக்கும்  விடுதலையேற் படுமெனவும் மனப்பால் குடிக்கின்றனர்.

காந்தியார் துரோகம்

காந்தியாரோ பார்ப்பன பக்தர்; ஆரிய நாகரிகக் கிறுக்கர். தென்னாப்பிரிக்காவிலே அவருக்குப் புகழ்தேடிக் கொடுத்தது தமிழர்களேயாயினும் இந்திய நாட்டின் தனிப்பெரும் தலைவராகும் மோகத்தினால் தம்மை மேலேற்றிவிட்ட தமிழர்களுக்கே துரோகம் செய்யத் துணிந்து விட்டார். தென்னாப்பிரிக்கா சத்யாக்ரகப் போரில் தமிழர் காட்டிய வீரத்தையும், தியாகத்தையும்  தமிழ் பாஷை, நான் படிப்பதிலிருந்து எனக்குத் தெரிவது என்ன வெனில் ? தமிழர்களின் மத்தியில் பூர்வ காலத்திலும் இப்போதும் அநேக புத்திமான்களும் ஞானவான்களும் இருக்கிறார்கள். முடிவில் இந்தியா முழுமையும் ஒரே ஜனசங்கமாக ஏற்டவேண்டுமானால் சென்னை ராஜதானிக்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ் பாஷையைத் தெரிந்துகொள்ளவேண்டும் இவ்வாறு காந்தியார் கல்கத்தா மாடர்ன் ரிவியூ பத்திரிகையில் எழுதினால் அதை சுதேசமித்திரன் மொழிபெயர்த்து வெளியிட்டது. இவ்வாறு அன்று கூறிய காந்தியார் இன்று இந்தியே இந்தியாவின் தேசீய பொது பாஷையாக இருக்க வேண்டுமென்று கூறவேண்டுமானல் அவர் நய வஞ்சகர் என்றும் சமயத்துக்குத் தக்கபடி பேசும் புரட்டர் என்றும் கூறுவது மிகையாகுமா!

தென்னாப்பிரிக்கப் புகழை கைம்முதலாக வைத்துக்கொண்டு இந்தியாவிலே அரசியல் வியாபாரம் தொடங்கிய பனியா காந்தியார்? இந்தியாவிலே மதிப்பும் புகழும் சர்வாதிகாரமும் பெற வேண்டுமானால் காங்கரஸ் உதவியில்லாமல் முடியாதென முதன் முதலில் கண்டுகொண்டார். அப்பால் காங்கிரசிலே பார்ப்பன ஆதிக்கம் மிகுந்திருப்பதையும் உணர்ந்தார்; பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்த காங்கிரசில் தலைமை ஸ்தானம் பெறுவது சாத்தியமல்லவென்றும் தெரிந்து கொண்டார். காங்கிரஸ் பார்ப்பனர்களை எதிர்க்க அப்பொழுது அவருக்குச் சக்தியும் இல்லை. ஆகவே எதிர்த்துத் தோல்வி அடைவதைவிட சரணாகதி அடைந்து வெற்றி பெறுவதென முடிவு செய்து கொண்டார். பார்ப்பனர் ஆதரவு பெறுவதற்கு வர்ணாச்சிரமத்தை ஆதரிப்பதே நல்ல வழியென உணர்ந்த காந்தியார் வர்ணாச்சிரமத்தைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கத் தொடங்கினார். எனினும் அவருடைய சுதந்தர மனத்துக்கு? சீர்திருத்த மனத்துக்கு அது பிடிக்கவில்லை.

புதுவியாக்கினம்

எனவே வர்ணாச்சிரம முறைக்கு அவர் ஒரு புதுவியாக்கியானம் கூறத்தொடங்கினார். வர்ணப்பாகுபாடு. பிறப்புப்பற்றியதல்ல வென்றும் தொழில் பற்றியதென்றும் ஒவ்வொரு வகுப்பிலும் அத்தொழில் முறைப்படி நான்கு ஜாதியுண்டென்றும் அம்மாதிரி தொழில் பற்றிய பாகுபாடு உலகியல் வெற்றிக்கு இன்றியமையாததென்றும் எல்லாருக்கும் அவரவர் விருப்பப்படி எந்த ஜாதியாகவும் மாறலாமென்றும் கூறத்தொடங்கினார். அவரது புது வியாக்கியானப்படி பார்த்தால் பார்ப்பன ஜாதியிலும் பார்ப்பனப்பார்பான், பார்ப்பன க்ஷத்திரியன், பார்ப்பன வைசியன், பார்ப்பனச் சூத்திரன் என நான்கு ஜாதிகள் இருக்கவேண்டும். பாறையர்களுக்குள்ளும் பறையப் பார்ப்பான், பறைய சத்திரியன், பறைய வைசியன், பறைய சூத்திரன் என நான்கு ஜாதிகள் இருக்கவேண்டும். இப்படியே இந்தியாவிலுள்ள ஒவ்வொரு ஜாதியிலும் நான்கு ஜாதிகள் காண முயன்றால் நிலைமை எவ்வாறு ஆபாசமாகி விடுமென்பதை நாம் கூறுவும் வேண்டுமா? ஆகவே அவருடைய புது வியாக்கியானத்தைக் கேட்டு அறிவுடையோர் எள்ளி நகையாடுகின்றனர். அவருடைய புது வியாக்கியானத்தை சீரிதிருத்தக்காரரும் ஒப்புக்கொள்ளவில்லை. வைதீகர்களும் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் வர்ணாச்சிரம தர்மத்தை காந்தியார் ஆதரிக்கிறார் என்ற தப்பெண்ணம் மட்டும் நிலைபெற்றுவிட்டது.

மாயாஜாலங்கள்

பார்ப்பனர்களுக்கு இந்தத்தப்பெண்ணமே போதுமானது உண்ணாவிரதம், இடுப்புத் துணி, பிரார்த்தனை, காய் கனி ஆட்டுப்பால், உணவு முதலிய மாய ஜாலங்கள் மூலம் பாமர மக்கள் ஆதரவை காந்தியார் பெற்றிருப்பதினால் அவர் துணை கொண்டு தமது வர்ணாச்சிரமத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாமெனக் கண்ட பார்ப்பனர் அவருக்கு மகாத்மா பட்டம் சூட்டி காங்கிரஸ் தலைமையும் அளித்துவிட்டனர். ஆகவே பார்ப்பன மதத்தையும், வருணாச்சிரமத்தையும், ஆரிய நாகரிகத்தையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் காந்தியாருக்கு ஏற்பட்டு விட்டது. ஆரிய நாகரிகம் மீண்டும் விருத்தியடைய வேண்டுமானால் செத்துப்போன சமஸ்கிருதம் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். ஆனால் அது சாத்தியமல்ல. ஆகவே சமஸ்கிருதத்தின் வழிமொழியான இந்தியை இந்திய பொதுப்பாஷையாக்கவேண்டுமென்று காந்தியார் கட்டளையிட்டு விட்டார்.

வார்தா திட்டம்

ஆரியக் கலைகளுக்கும் மதத்துக்கும் வர்ணாச்சிரம தர்மத்துக்கும் (புத்துயிரளிக்க வார்தா கல்வித்திட்டத்தையும் ஏற்படுத்திவிட்டார். இந்தி கட்டாய பாடமும் வார்தா திட்டமும் ஆரியரல்லாதாரை நசுக்கும் உபாயங்கள் என உணர்ந்த முஸ்லீம்களும் தமிழர்களும் இரண்டையும் எதிர்க்க கங்கணங் கட்டிக்கொண்டு முனைந்திருக்கின்றனர். வடநாட்டிலே முஸ்லீம்கள் வார்தா வித்தியாமந்திரத் திட்டங்களை எதிர்த்து சத்தியாக்கிரகம் தொடங்க முஸ்தீபு செய்து வருகின்றனர். தென்னாட்டிலே இந்தி எதிர்ப்புப் போரும் ஆரம்பமாகி முட்டின்றி நடைபெற்று வருகிறது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 586 பேர் சிறை புகுந்து விட்டனர். தமிழ் நாட்டுத் தனிப்பெருந்தலைவரை சிறைப்படுத்திய பிறகும் இந்தி எதிர்ப்பு ஓயவில்லை, மாறாக எதிர்ப்பு வலுக்கும் அறிகுறி தோன்றியுள்ளது…

காந்தி துவேஷியுடையவும் காங்கிரஸ் துரோகியுடையவும் சூழ்ச்சி என்கிறார் சென்னை மாகாண முதன் மந்திரியார் கனம் ஆச்சாரியார். இந்தி எதிர்ப்பு இயக்கம் போலி இயக்கம்  என காங்கிரஸ் பிரகஸ்பதிகள் முடிவு கூறிவிட்டார்கள். இந்தி எதிர்ப்புக்கு பொதுஜன ஆதரவில்லாத தினாலேயே கனம் ஆச்சாரியார் பிடிவாதம் செய்கிறார் என ஆச்சாரியார் பத்திரிகைகளும் கூறிவிட்டன.

இந்தி எதிர்ப்பு தோல்வியுற்றால்?

இந்தி எதிர்ப்பு இயக்கம் தோல்வியுற்றால் இனித் தமிழர்கள் ஒரு நாளும் தலைதூக்கப் போவதில்லை. இத்தகைய நெருக்கடியான ஆபத்தான ? பயங்கரமான  சமயத்திலே வேலூர் மாநாடும் சென்னை மாநாடும் கூடி முடிந்திருக்கின்றன. அந்த இரண்டு மாநாட்டுத் தீர்மானங்களையும் நடைமுறையில் அனுஷ்டித்தால் இந்தி எதிர்ப்பு இயக்கம் வெற்றி பெறுவது உறுதி ஆகவே அந்த இரண்டு மாநாட்டுத் தீர்மானங்களையும் கிரியாம்சையில் நடத்திவைக்க வேண்டியதே தமிழர்களின் இன்றைய நீங்காக் கடமை. நாம் இதுகாறும் நிறைவேற்றிய தீர்மானங்களின் படி நடக்கமுயலாத தினாலேயே 100?க்கு 3கொண்ட ஒரு சிறு சமூகம் தென்னாட்டிலே சர்வாதிகாரம் செலுத்த முயன்று பார்க்கிறது. ஆகவே மேலும் சோம்பி இராமல் தமிழர்கள் ஊக்கமாக உழைக்க முன் வர வேண்டுமென்று மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.

(குடிஅரசு, தலையங்கம் – 01.01.1939

You may also like...