மயிலைப் பகுதியில் மனிதச் சங்கிலி குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள்
குடியுரிமை சட்டங்களுக்கு எதிராகவும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு போராட்டக் களமாக மாறி நிற்கிறது. சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் மக்கள் 24 மணி நேரமும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாநாடுகள், ஆர்ப்பாட் டங்கள், கருத்தரங்குகள், மனித சங்கிலி, கையெழுத்து இயக்கங்கள் என்று தமிழகமே கொந்தளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு அதை எதிர்த்துப் போராடியவர்கள் மீது பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கட்சிகளை கொடூரமாக ஒடுக்கின. அசாமில் 6 பேரும், உ.பி.யில் 19 பேரும், கருநாடகாவில் 2 பேரும் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்கள். டெல்லியில் சங்கிகள் வெளி மாநிலத்திலிருந்து வன்முறையாளர்களை இறக்குமதி செய்து இஸ்லாமியர்கள் மீது நடத்திய கொலை வெறியாட்டத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்து விட்டனர். காஷ்மீரில் 370ஆவது பிரிவை நீக்கி, அயோத்தியில் மசூதியை இடித்த இடத்தில் ‘ராமன்’ கோயிலைக் கட்ட நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற ஆணவத்தில் குடியுரிமை...