கோவை இராமகிருட்டிணனை வழக்கிலிருந்து விடுவிக்க சுயமரியாதைப் பிச்சார நிறுவனம் ஒப்புதல் ‘குடிஅரசு’ வழக்கு விசாரணை தொடங்கியது
சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக குடிஅரசு தொகுதிகள் வெளியிட்டதற்கு எதிராக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி வீரமணி அவர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் 03.01.2020 அன்று சாட்சி விசாரணைப் பதிவு ஆயளவநச ஊடிரசவ இல் நடைபெற்றது.
இவ்வழக்கில் ஏற்கனவே பெரியார் திராவிடர் கழகம் தான் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு இருந்தது. அதன் தலைவர் என்ற அடிப்படையில் கொளத்தூர் மணி மற்றொரு பிரதிவாதியாக கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் சேர்க்கப் பட்டிருந்தனர். இந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதியாக சேர்க்கப்பட்டு இருந்த கோவை. கு. இராமகிருட்டிணன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு அவர் மீதான வழக்கினை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி திரும்பப் பெற ஒப்புக் கொண்டார். அதன் காரணமாக கோவை இராமகிருட்டிணன் இந்த வழக்கிலிருந்து 20.10.2019 அன்று விடுவிக்கப்பட்டு விட்டார். எனவே தற்போது கொளத்தூர் மணி மட்டும் இவ்வழக்கில் பிரதிவாதியாக இருக்கிறார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் கடந்த 17.12.2019 அன்று சாட்சியளித்தார். சாட்சியத்தின் மீதான குறுக்கு விசாரணை ஜன. 3ஆம் தேதி நடைபெற்றது. குறுக்கு விசாரணையின் போது பெரியார் திராவிடர் கழகத்தின் அன்றைய தலைவர் கொளத்தூர் மணியின் சார்பாக மூத்த வழக்கறிஞர் செ. துரைசாமி மற்றும் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகினர்.
மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி ஏறத்தாழ இரண்டு மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தார். அந்த விசாரணையின்போது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், 1952ஆம் ஆண்டு திருச்சியில் 1860 ஆம் ஆண்டைய சொசைட்டி பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது; அந்தப் பதிவு உரிய அதிகாரம் பெற்ற அதிகாரியின் முன்பதிவு செய்யப்படாததால் பதிவு செல்லாது என்று குறுக்கு விசாரணையில் உறுதி செய்தார். அத்தகவல் ஒரு அதிர்ச்சியான உண்மையாக இருந்தது. எனவே பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமே ஒரு சட்டபூர்வமான நிறுவனம் இல்லை என்பதால் இந்த வழக்கு அடிப்படையற்றது என்பதாகத்தான் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
மேலும் சாட்சியை (கலி.பூங்குன்றன் அவர்களை) வரும் 08.01.2020 அன்று மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி குறுக்கு விசாரணை செய்ய இருந்ததை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் திருச்செங்கோடு கழகத் தோழர் மனோஜ் சேகரித்த தகவல்
பெரியார் முழக்கம் 23012020 இதழ்