மேடையிலேயே திருமணம் நடத்தி பண்பாட்டுப் புரட்சியை நிகழ்த்திய திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள்

கோவை நீலச்சட்டைப் பேரணியையொட்டி நடந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டில் இரண்டு திருமணங்களை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நடத்தி வைத்தார். இரண்டு இணையர்களுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன்-பா. குமாரி ஆகியோரின் மகள் இலக்கியா வுக்கும், மேட்டூர் காவலாண்டியூர் கழகத் தோழரும் தலைமைக் குழு உறுப்பினரு மான கா. ஈசுவரன்-ஈசுவரி ஆகியோரின் மகன் கணிகா செல்வனுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம் மேடையில் நடந்தது. திருச்செங்கோடு ரங்கநாதன்-புஷ்பலதா ஆகியோரின் மகனும், கழகத் தோழரும் ஊடகவியலாளருமான ர. பிரகாஷ்- காவலாண்டியூர் கழகத் தோழர் சரசுவதி-சந்திரன் ஆகியோரின் மகள் இரம்யா வுக்கும் மேடையில் திருமணம் நடந்தது. மாலை மாற்றிக்கொண்டு 5 நிமிடங்களில் இரண்டு திருமணங்களும் நடந்து முடிந்தன. மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு பிரகாஷ்-ரம்யா இணையர் ரூ.5000-மும், இணையர் இலக்கியா-கணிகா செல்வன் சார்பில் ரூ.5000-மும் கழக ஏட்டுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 13022020 இதழ்

You may also like...