சூலூர் தோழர்கள் தயாரித்துள்ள குறும்படம் ‘துக்கம்’
சூலூர் ஒன்றியக் கழகம் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் 24.12.2011 மாலை 6 மணியளவில் கண்ணம்பாளையம் தேர்நிலை திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் எழுதி இயக்கி நடித்த ‘துக்கம்’ குறும்படம் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வெ.அ.நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். அ.ப.சிவா குறும்படத்தைப் பற்றி அறிமுகவுரையாற்றினார். குறும்படத்தை எழுத்தாளர் வே.மதிமாறன் வெளியிட தமிழ்நாடு மாணவர் கழகத்தினுடைய மாநில அமைப்பாளர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, கண்ணம்பாளையம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் மௌனசாமி, 6வது வார்டு உறுப்பினர் இராமத்தாள் கணேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியின் நடுவில் ‘துக்கம்’ குறும்படம் திரையிடப்பட்டது. பெரும்பாலான மக்கள் குறும்படத்தைப் பார்த்தனர். மேற்கு மண்டலத்தில் நிலவும் தீண்டாமையின் ஒரு வடிவத்தை சுட்டிக்காட்டும் இந்தப் படம் பொது மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தோழர்கள் கா.சு.நாகராசன், நீலவேந்தன், வே.மதிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் மா....
