கொள்கை-கொண்டாட்டம்-சுற்றுலா என குழந்தைகளுக்கு உணர்வூட்டிய பெங்களூரு பழகு முகாம்
தமிழ்நாடு அறிவியல் மன்றம் ஐந்தாவது ஆண்டாக நடத்திய குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் – 2017 இம் முறை பெங்களூருவில் நடத்தப் பட்டது. தமிழ்நாட்டில் சென்னை, மயிலாடுதுறை, பேராவூரணி, சேலம், மேட்டூர், ஈரோடு, திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்களில் இருந்து 60 குழந்தைகளும் பெங்களூருவில் 4 குழந்தைகளுமாக 64 பேர் கலந்துகொண்டனர். 14 பேர் நெறி யாளர்களாக இருந்து முகாமை நெறிப்படுத்தினர். 12.5.2017 வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குழந்தைகள் நெறியாளர்கள் அனைவரும் பெங்களூரு புறப்பட்டனர். குழந்தைகளை தொடர் வண்டி நிலையத்திலிருந்து பயிற்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சொகுசுப் பேருந்துடன் பெங்களூருவில் தோழர்கள் காத்திருந்தனர். இரவு 10.00 மணியளவில் முகாம் நடக்கும் ஐஎஸ்ஐ பயிற்சி மையத்தை அடைந்தனர். 13.5.2017 முதல் நாள் முதல் நாள் தொடக்க விழாவுடன் முகாம் தொடங்கியது. முகாமைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கியோர் ‘கற்பி, ஒன்று சேர்’ (Educate and...
