நீட் தேர்வைக் கண்டித்து தக்கலையில் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம். சார்பாக  நீட் தேர்வைக் கண்டித்து தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் 4.3.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டச் செயலாளர் தமிழ்மதி தலைமை தாங்கினார். நீதி அரசர் (தலைவர். பெ.தொ.க) முன்னிலை வகித்தார். விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம்), போஸ் (சமூக ஆர்வலர்),  முரளீதரன் (பொது பள்ளிக்கான மாநில மேடை செயலாளர்),  இரமேஷ், இராஜேஷ் குமார், இராதா கிருஷ்ணன், ஜான் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் அனைவரும் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை முழங்கினர்.  மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது.

பெரியார் முழக்கம் 09032017 இதழ்

You may also like...