மோடி எதிர்ப்பை இருட்டடித்த ஊடகங்கள்

மோடிக்கு கோவையில் கருப்புக் கொடி காட்டி பல்வேறு இயக்கங்கள் காட்டிய எதிர்ப்பு களை ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடித்தன.

3 நாட்கள், நாளேடுகளுக்கு ஈஷாவின் ஜகத்குரு பல கோடி ரூபாயை வாரி இறைத்து தந்த விளம்பரங்களும், தொலைக் காட்சிகளுக்கு தந்த விளம்பரங் களுமே ஊடகங்களின் இருட்டடிப்புக்கு முக்கிய காரணம்.

பெரும் முதலாளிகளும் அரசியல் தலைவர்களும் நடத்தும் அச்சு ஊடகங்களும் தொலைக் காட்சிகளும் வருமானத்தை முன் வைத்தே செயல்படுவதால் மக்கள் எதிர்ப்புகளை புறந்தள்ளி விட்டனர்; மக்களைவிட விளம்பரங்களுக்கு பணத்தை வீசும் ‘ஆன்மிகக்  குரு’க்களின் ‘ஆசீர்வாதங்களே’ அவர்களுக்கு முக்கியத் தேவை போலும்!

பெரியார் முழக்கம் 02032017 இதழ்

You may also like...