திருப்பூரில் நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 10.02.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் பாலுறவு வன்முறை படுகொலைக்கு உள்ளான நந்தினி சாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகரை கைது செய் ! வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று ! நந்தினி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு ! தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய் ! – என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத்தைச் சேர்ந்த பேரவையின் மாவட்டச் செயலாளர் சோழன், திருவள்ளுவர் பேரவை அருண் குமார், இஸ்லாமிய அமைப்பின் ரஹ்மான், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், மாநகர செயலாளர் மாதவன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தோழர் சங்கீதா, கொளத்துப் பாளையம் இராமசாமி, முத்து, தனபால், கருணாநிதி, அகிலன், பரிமளராசன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 02032017 இதழ்

You may also like...