எல்லை மீட்புப் போராட்டம்: பெரியார்-ம.பொ.சி. கடிதத் தொடர்புகள் உணர்த்தும் உண்மைகள்!
நான் அதற்கு திராவிட பார்லிமெண்டரிக் கட்சித் தலைவர் நண்பர் சுயம்பிரகாசம் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரால் உள்ள கட்சிக்குத் தலைவராய் இருந்துவரும் சர்.பி.டி. ராஜன் மற்றும் கம்யூனிஸ்டு, சோஷ்யலிஸ்ட் தோழர்களைக் கேட்டு அவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றேன். அவர் அதற்கு “கண்ணீர்த் துளிகளைச் சேர்க்கலாமா” என்றார். நான் இப்போது, “அவர்கள் தேவையற்றவர்கள். அவர்களால் ஆகக் கூடியது ஒன்றும் கிடையாது. சும்மா கூட்டத்திற்காகிலும் ஆள் சேர்ப்பது சரி யில்லை. கொஞ்சமாக இருந்தாலும் பொறுக்கி எடுத்த திறமைசாலிகளாக இருந்தால் போதும். உபயோகமற்றதுகளை எல்லாம் சேர்த்து கொண் டால் வீண் கயவாளித்தனத்துக்கு இடமாகிவிடும்” என்று சொல்லிவிட்டேன். பிறகு வீட்டிற்கு வந்தவுடன் தொலைபேசியில் நண்பர் ம.பொ.சி. என்னைக் கூப்பிட்டார். ‘என்ன விசயம்’ என்று கேட் டேன். அதற்குள் வீட்டிற்குப் போனவுடன் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. “நான் கம்யூனிஸ்டுக்காரர்களைக் கேட்டேன், அவர்கள் மேலிடத்தை விசாரித்து சம்மதம் பெற்ற பின்பு தான் கலந்து கொள்வோம் என்றனர். சோஷியலிஸ்டுகள் சரி...
