கோவக்குளத்தில் கழகக் கூட்டம்

டிசம்பர் 24, பெரியார் நினைவு அன்று கிருட்டிணராயபுரத்தில் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும் முழு அடைப்பு நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு பேருந்து நிலையத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்பு கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மையை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் எரித்தனர். அன்று மாலை 6 மணிக்கு கோவக்குளம் கிராமத்தில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம் கரூர் மாவட்ட செயலாளர் இரா. காமராசு தலைமையில் நடைபெற்றது. மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சியை பெரம்பலூர் தாமோதரன் நடத்தினார். மேட்டூர் குமாரசாமி மாவட்ட தலைவர் கு.கி.தனபால் உரையாற்றினார்.  கழகத் தோழர்கள் சிரிகாந், ஊழியன், மாணிக்கம், பன்னீர், மலைகெழுந்தன், முத்து ஆகியோர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பெரியார் முழக்கம் 19012012 இதழ்

You may also like...