அடையாறு அரங்கநாதன், ஆவடி மனோகரன் படத் திறப்பு

குத்தூசி குருசாமி – குருவிக்கரம்பை வேலு சுயமரியாதைப் பேரவை சார்பில் பெரியார் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. 8.1.2012 ஞாயிறு காலை 10.30 மணி அளவில் மதுரை மருத்துவர் அ.சவுந்தரபாணடியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலவர் இல.மா.தமிழ்நாவன் வரவேற்புரையாற்றினார்.

தந்தைபெரியாரின் படத்தை குடந்தை வழக்கறிஞர் பாலகுரு, ஆவடி மனோகரன் படத்தை இனமானக் கவிஞர் செ.வை.ரா. சிகாமணியும், அடையாறு கோ. அரங்கநாதன் படத்தை புதுகை க. இராசேந்திரனும் திறந்து வைதது உரை நிகழ்த்தினர். பேராசிரியர் சரசுவதி இராசேந்திரன், ‘பெரியாரும்-பெண்ணுரிமையும்’ என்னும் தலைப்பில் அரிய ஆய்வுரை நிகழ்த்தினார். ஆவடி மனோகரன், குடும்பத்திற்கு மருத்துவர் அ. சவுந்தர பாண்டியன் வழங்கிய ரூ.5000, நிதியை அன்னாரது துணைவியாரும், மகனும் பெற்றுக்கொண்டனர். 1960களில் கூட்டுறவு முறையில் வெளிவந்த திராவிடர் கழக ஆதரவு ஏடான ‘சுயமரியாதை’ இதழின் ஆசிரியர் மா.அருள்முகம் (வயது 82) நன்றி கூறினார்.

 

பெரியார் முழக்கம் 02022012 இதழ்

You may also like...