கூடங்குளம் போராளிகள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணுஉலை பேச்சு வார்த்தைக்கு சென்ற சுப. உதயக்குமார் உள்ளிட்ட தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ், இந்துத்துவ மதவெறி சக்திகளைக் கண்டித்து 3.2.2012 வெள்ளி காலை 11 மணி யளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பத்மநாபன் (உலகத் தமிழர் பேரமைப்பு), அன்பு தென்னரசு (நாம் தமிழர்), மேகலா (மக்கள் மன்றம்), திருமுருகன் (மே 17), ரஜினி காந்த் (சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி), மகேஷ் (மக்கள் மன்றம்), தீரன் (தமிழர் வாழ்வுரிமை கட்சி), சுப. இளவரசன் (தமிழர் நீதிக் கட்சி), தி. வேல்முருகன்

(தமிழக வாழ்வுரிமைக் கட்சி), சீமான் (நாம் தமிழர் கட்சி), கொளத்தூர் மணி (பெரியார் திராவிடர் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பகுத்தறிவுப் போராளி – 2 ஆம் பக்கம்

பெரியார் முழக்கம் 09022012 இதழ்

You may also like...