பிரார்த்தனைக்குத் தடை: பிரிட்டனில் நாத்திகர் தொடர்ந்த வழக்கு வெற்றி
உள்ளூராட்சி மன்ற கூட்டங்களின் ஒரு பகுதியாக பிரார்த்தனைகள் நடத்தப்படுவதை எதிர்த்து பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நாத்திகருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மேற்கு இங்கிலாந்தில் இருக்கும் பிட்போர்ட் உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் கிளைவ்போன் என்பவர் இந்த மன்ற கூட்டங்களில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் தன்னை சங்கடப்படுத்துவதாகவும் தனக்கு பாதகமாக அமைவதாகவும் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.
உளளூராட்சி மன்ற கூட்டங்களின் ஒரு பகுதியாக பிரார்த்தனை நடத்தும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், இந்த குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றம் தனது அதிகார எல்லைக்கு அப்பால் சென்று செயற்பட்டிருப்பதாக லண்டனில் இருக்கும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த குறிப்பிட்ட தீர்ப்பானது பிரிட்டனின் பொது வாழ்க்கையில் கிறித்துவத்தின் பங்கை பெருமளவு பாதிக்கத்தக்கதாக இருக்கும் என்று இந்த உள்ளூராட்சி மன்றத்தின் கிறித்துவ உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
பெரியார் முழக்கம் 16022012 இதழ்